Friday, March 13, 2009

புலிகள் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவர்களா?


ஒரு நாட்டை விமர்சிக்கின்றோம், ஒரு அரசை விமர்சிக்கின்றோம், ஒரு தலைவரை விமர்சிக்கின்றோம் ... புலிகளை விமர்சிக்க முடியாதா? என்று நீங்கள் கேட்கக்கூடும். அப்படித்தான் நானும் நினைத்திருந்தேன்.

ஜனநாயக நடைமுறைகள் பின்பற்றப்படும் எவ்விடத்திலும் யாரும் இவ்வாறுதான் சிந்திப்பார்கள், சிந்திக்க முடியும்.

புலிகளின் தமிழ் மக்களுக்கான போராட்டம் உண்மையானது என்பதுவும் நியாயமானது என்பதுவும் ஏர்றுக்கொள்ளக்கூடியதே. அதில் மாற்றுக் கருத்து எதுவும் கிடையாது. இது எவ்வளவுக்கு எவ்வளவு உண்மையானதோ அவ்வளவுக்கவ்வளவு அவர்கள் நடைமுறை பற்றி எனக்கு விமர்சனங்கள் உண்டு என்பதுவும் உண்மையானது.

இது அவர்களைப்பற்றிய விமர்சனங்களோ கேள்விகளோ அல்ல. புலிப்பினாமிகள் என்ற போர்வையில் அல்லது அவர்களின் ஜால்ராக்கள் என்ற கோதாவில் பதிவுகளில் வந்து எச்சமிட்டுப்போகும் சில அறிவிலிகளைப்பற்றியதே.

உங்களால் எங்களால் ஒரு சிங்கள அரசையோ ஒரு இந்திய அரசையோ சோனியாவையோ கலைஞர் மு.க வையோ விமர்சிக்க முடியும் என்றால் அது ஜனநாயகம் என்றால் பத்திரிகைச் சுதந்திரமென்றால் -இந்த அறிவிலிகள் இவ்வாறு எச்சமிட்டுச் செல்வதை எந்த வகையில் சேர்ப்பது?

"புலிகளின் முடிவு காலமா?" என்ற எனது ஆக்கத்தில் ஒன்று வந்து இது ஒரு தமிழ் ப்ளொட் (புளட் அல்ல -இரத்தம்) ஆக இருக்க முடியாது என்று கண்டு பிடித்துப் போயிருக்கின்றது. உனது தாயும் தந்தையும் தமிழராய் இருப்பதால் நீ எவ்வாறு தமிழன் என்று சொல்லிக்கொள்கின்றாயோ அதற்கும் மேலாக தமிழைச் சுவாசிப்பதால் நான் தமிழன் என்று உணர்கின்றேன்.

அதேபோல "புலி அடியும் கிலி பிடிக்கும் சிங்களமும்" என்ற வீடியோ இணைப்பில் வந்து ஒன்று உங்கள் வாசகர் கவர்ச்சிக்காக புலிகளை இழுக்காதீர்கள் என்கின்றது.

இதனால் தான் எனக்கு இந்தச் சந்தேகம் எழுந்திருக்கின்றது. நான் என்றாலும் "களவாணி" என்ற பெயரில் எழுதுகின்றேன். எனது இடத்திற்கு நீங்கள் வருகின்றீர்கள். எச்சமிடுகின்றீர்கள். நீங்கள் மட்டும் அனானியாக வருவதேன். உங்கள் பெயர் எங்களுக்குத் தெரியவேண்டுமென்பதல்ல. உங்கள் தளத்தைக் குறித்துச் செல்லுங்கள். நாங்களும் வந்து பார்க்கின்றோம் நீங்கள் என்ன உலக மகா சேவை செய்கின்றீர்கள் என்பதை.

புலிப்பாசிசம் புலி அராஜகம் என்று பகிரங்கமாக உங்களை விமர்சிப்பவர்களிடம் உங்கள் எதிர்க்கருத்துக்களை எப்போதாவது பதிவு செய்ததுண்டா? அது தானே ஜனநாயகம்..கருத்துப்பரிமாற்றம் ... கருத்துத் தெளிபு.

மண்டைக்குள் ஒன்றும் இல்லாதவர்களே இவ்வாறு எச்சமிடுபவர்கள் என்பது எனது கருத்து. ஒரு ஆக்கத்தைப்பற்றிய உங்கள் கருத்தைப்பதிவு செய்வது வேறு. அதைச்செய்யாதீர்கள் இதைச்செய்யாதீர்கள் என்று கட்டளை இடுவது வேறு.

இவ்வகையில் நீங்கள் ஒரு வித எதேச்சாதிகாரத்துடன் செயற்படுவதை உங்களால் புரிந்து கொள்ள முடிகின்றதா? புலிகள் உங்களிடம் தங்களைகுத்தகைக்குத் தந்து விட்டார்களா?

அப்போது புலிகள் ஈழத்தமிழ் மக்கள் அனைவருக்குமான அமைப்பு இல்லையா? எங்களை அவர்களைப்பற்றி எழுதக்கூடாது என்ற அதிகாரத்தை உங்களுக்குத் தந்தவர்கள் யார்?

புலிகளைக் கேள்விகள் இன்றி கண்மூடித்தனமாக ஆதரிப்பதாகப் பாசாங்கு செய்யும் நீங்கள் தான் அவர்கள் சகாப்தம் (ஒரு வேளை) முடிந்தால் முதல் கல்லை வீசப்போபவர்களும் என்பது எனது முடிபு.

ஏனெனில் எதையுமே கேள்வி கேட்காது நம்புவர்கள் அவர்களைப்பற்றிய எதிரான கருத்தையும் அப்படியே நம்புவார்கள்.

உங்களுடைய இத்தகைய எதேச்சாதிகாரம் தான் இன்று எத்தனையோ எம்மக்களை விடுதலைப்போராட்டத்தை விட்டு ஓரங்கட்டியிருக்கின்றது என்பதைப்புரிந்து கொண்டிருக்கின்றீர்களா?

உங்களுடைய இத்தகைய அராஜகங்கள் தானே எம்மக்களைத்தாம் வாழும் நாடுகளில் உங்களுக்கெதிராக மக்களை காவல்துறையிடம் முறைப்பாடு செய்ய வைத்திருக்கின்றது.

இவர்களையெல்லாம் மனமொப்பாமலேயே இவ்வகையில் நடக்கத்தூண்டியது யார்?

அவ்வகைக்காரணங்களும் புலிகளை இந்நாடுகளில் தடை செய்ய வலுச்சேர்த்தது என்பதை மறுதலிக்கின்றீர்களா?

இத்தகைய துயர வேளைகளிலும் உங்கள் காட்டுமிராண்டித்தனமான தர்ப்பாரை நீங்கள் முடிவுக்குக் கொண்டு வரமாட்டீர்களா?

தமிழ் மக்களாக தமிழீழப் போராட்டத்தை ஆதரிக்கும் நேசிக்கும் மக்களின் வேண்டுகோள் இது என்பதைபுரிந்து கொள்ள மாட்டீர்களா?

கேள்வி கேட்பவன் கருங்காலி உங்கள் பாசையில் . எதேச்சாதிகார முகமூடியைகழட்டி விட்டு உங்கள் அசிங்கம் பிடித்த முகத்தைப் பாருங்கள்.
திருந்துவதற்கு ஒரு வாய்ப்பு வரக்கூடும்.

25 comments:

Anonymous said...

அருமை நீங்க ஏன் இப்ப கடசி ஆனந்தவிகடன்,குமுதம்,குங்குமம் போன்ற இதழ்கள் இராணுவ வாசிப்புக்கு உட்பட்டு அப்புறம் பக்கங்கள் கிழிக்கப்பட்டு கொழும்பில் விற்பனையாகி|றது எண்டு ஒருக்க அறியுங்கோவன், அப்புறம் ஏன் லசங்க விக்கிரமதுங்க கொல்லபட்டார் என அறியுங்கோவன், அப்புறம் ஏன் இலங்கை கிரிக்கட் அணிமீது பாக்கிஸ்தான்(??) தீவிரவாதிகள் தாக்குத நடத்தினார்கள் என அறியுங்கோவன். இப்ப நீங்க முடிவெடுத்திருப்பீங்க இவன் புலி ஜால்ரா எண்டு ஆன உங்களவிட புலியின்ர பிழைகளை நான் சொல்லுவன், நீங்க சொன்னது சப்பை ஆன அதற்கு இது நேரமில்ல!!! நீங்க சாககிடக்கேக்க அல்லது நோய்,துன்பத்தில இருக்கும்போது உங்கட அம்மாவே வந்து நீங்க செய்த பிழையள் இது என ப்ரு லிஸ்ட் தந்து உங்கள மன்னிப்புகேள் நான் உனக்கு மருந்துதாறன் எண்டு சொன்ன அது எப்படி இருக்கும்???
no body is perfect! im nobody!!

இட்டாலி வடை said...

வருகைக்கு நன்றி ரூடோ !

புலிகளைப்பற்றிய என் விமர்சனங்களையே இங்கு இன்னும் நான் வைக்கவில்லை.

புலி ஜால்ராக்கள் பற்றியதும் அவர்களால் தமிழ் மக்கள் போராட்டத்தில் இருந்து ஒதுங்கியிருப்பதும் பற்றியது.

அராஜகங்களை நான் எப்போதும் கேள்விக்குட்படுத்தியே வந்திருக்கின்றேன்.

தமிழ் மக்களின் இனவிடுதலைப்போராட்டம் சரியானதும் நியாய பூர்வமானதும் என்பதே எப்போதும் என் வாதம்.

புலிகள் ஒடுங்கியிருப்பதால் அவர்கள் செய்ததெல்லாம் சரியென்பதும் அல்ல.. விமர்சனத்துக்கு அப்பாற்பட்டதும் என்பதல்ல.

Anonymous said...

rooto - no body is perfect!
அப்படியானால் உங்களை எதிர்த்தவர்கள் உங்கள் கருத்தோடு ஒத்து போகாதவர்களை ஏன் கொலை செய்தீர்கள்? சாககிடக்கும் இந்த நிலை வந்ததே அவர்கள் செய்த மன்னிக்க முடியாத பிழைகள் தான் காரணம்.

இட்டாலி வடை said...

என்னைப் புலிகளின் பினாமி ஆக்கிவிட்டீர்களா?

இடம் மாறி வந்த கேள்வி இது.. கேட்கவேண்டிய இடத்தில் கேட்டால் பதில் கிடைக்கலாம்.

"ஆடு புலி ஆட்டம் பாருங்கள்" ஏதாவது புரியக்கூடும்.

Anonymous said...

மன்னிக்கவும் ரவுசு.நான் rootoவை நோக்கி தான் கேட்டேன்.

Anonymous said...

வணக்கம் ரவுசு அண்ணா...
நீங்கள் பதிவில் என்ன சொல்ல வந்தீர்கள் என்று எனக்கு புரியவே இல்லை!
நீங்கள் எழுதிய பதிவிற்கு எதிரான பின்னுட்டம் இட்டார்கள் என்று கோபப்படும்,அல்லது அதனை சகித்து கொள்ள மனசு இல்லாத நீர் எப்படி மற்ரவரினை விமர்சிக்கலாம்... அல்லது அதற்கு தகுதிதான் இருக்கா???
நீங்கள் கூறும் அந்த புலி பினாமிகள் யார்??? குறிப்பிட்டு சொல்ல முடியுமா???
*********************
புலிகளினை விமர்சிக்க முடியாது என்று உமக்கு யார் சொன்னது??? அப்படியானால் உங்கள் பதிவுகளில் எதனை செய்கிறீர்கள்!
அனாமிகள்,பினாமிகள் பற்றி குறிப்பிடும் நல்ல வரான நீர் உமது சொந்த பெயரில்தானா பதிவிடுகிற்றீர்???

Anonymous said...

புலிகளைக் கேள்விகள் இன்றி கண்மூடித்தனமாக ஆதரிப்பதாகப் பாசாங்கு செய்யும் நீங்கள் தான் அவர்கள் சகாப்தம் (ஒரு வேளை) முடிந்தால் முதல் கல்லை வீசப்போபவர்களும் என்பது எனது முடிபு
***************************
ஏன் நீர் எதிர்மறையாக சிந்திக்கிறீர்...
தமிழீழம் மலரும் போது.. எதிராக கதைதவரும்,எளனமாய் பார்தவரும் மாவீரர் கல்லறைகளில் முதற் பூக்களை தூவமாட்டார்களா?

இட்டாலி வடை said...

தம்பி கவின் !

பதிவுகளுக்கு எதிர்க்கருத்தோ எதிர்வினையோ செய்வது பற்றி எனக்கு எந்த ஆட்சேபணையும் கிடையாது.

அதைச் செய்யாதீர் இதைச்செய்யாதீர் என்ற ஏவுதல்தான் சகிக்கக்கூடியதல்ல. முடியவில்லை.

நான் மாவீரர்கள் இறந்த போராளிகள் பற்றி எப்போதும் ஏளனம் செய்வதில்லை.

புலிகளை விமர்சிக்க முடியாது என்பதல்ல. கூடாது என்பது உங்களின் கருத்து.

அனாமிகள் என்று வருவது பிழையல்ல உங்கள் தளங்களைச் சொல்லுங்கள் வந்து பார்க்கின்றோம் என்று தான் கூறப்பட்டிருக்கின்றது.

புலிகள் மட்டுமே தமிழீழப்போராட்டத்தை குத்தகைக்கு எடுத்தவர்கள் என்ற மாயையில் திளைப்பவர்கள் ..பினாமிகள்

ஒவ்வொரு புலம் பெயர்ந்த தேசத்திலும் இவர்கள் தானே விடுதலைப்போராட்டம் நடாத்திக்கொண்டிருக்கின்றார்கள்.

கனடா ஒட்டாவாவில் நடை பெற்ற (இவர்கள் இல்லாது வேறு எவரோ
முன்னெடுத்த ) பேரணியில் கூட கலந்து கொள்ள வேண்டாம் என்று இவர்களின் ஊடக ஊதுகுழல்கள் அறிவுறுத்திக்கொண்டனவே. இதை யார் செய்தார்களோ இவர்கள் தான் பினாமிகள் .

சக பதிவர் ஒருவரும் பதிவிட்டிருக்கின்றார். பாருங்கள் ..

Anonymous said...

Anonymous said...
//rooto - no body is perfect!
அப்படியானால் உங்களை எதிர்த்தவர்கள் உங்கள் கருத்தோடு ஒத்து போகாதவர்களை ஏன் கொலை செய்தீர்கள்? சாககிடக்கும் இந்த நிலை வந்ததே அவர்கள் செய்த மன்னிக்க முடியாத பிழைகள் தான் காரணம்.//

அப்படி புலிகள் செய்த கொலைகளை ஆதாரத்தோடு பட்டியலிடுங்கள் பார்க்கலாமே..??

இராசீவ் எண்று சப்பை கட்டு கட்டாதீர்... இராசீவ் இந்திய அமைதி படையின் தளபதி யாக படையை அனுப்பி தமிழரை வதைத்தவர்... பிரபாகரனை கொல்ல ஆணை இட்டவர்... ஆகவே இராசீவை கொல்லும் ஆணையை புலிகள் தலைவர் இட்டதிலும் தவறு இருக்க முடியாது( புலிகள் தான் இராசிவை கொண்றார்கள் என்பது எனது வாக்குமூலம் அல்ல.. அப்படி அவர்கள்தான் கொலை செய்து இருந்தால் அது தவறு அல்ல என்பது மட்டுமே)

Anonymous said...

ரவுசு..

நீங்கள் புலிகள் பற்றி விமர்சிக்க கூடாது என்பதில்லை.. ஆனால் உண்மையை சொல்லுங்கள் செவிவளி வரும் புரட்டுகளையும், வதந்திகளையும் பரப்புவோரின் பொய்களுக்கு எடுப்பட்டு அதுதான் உண்மை எண்று சாதிக்காத வரைக்கும் பறவாய் இல்லை...

இறைமை உள்ள இந்திய நாட்டில் யாராவது ஈழத்தமிழன் பயம் இல்லாது புலிகளை ஆதரித்து அவர்கள் பற்றி நல்லதை சொல்ல முடியும் எண்று நான் நம்பவில்லை.. ஆகவே நீங்கள் எல்லாம் உண்மைகளை கண்டு கொள்ள தூரம் போக வேண்டி இருக்கலாம்..

நான் தமிழகத்தில் இருந்த போது கூட ஈழத்து ENDLF உறுப்பினர்களின் வார்த்தைகளை அப்படியே நம்பி கேள்வி கேக்கும் பல தமிழரை கண்டு இருக்கிறேன்.. நீங்களும் அப்படியான ஒருவராக இருக்கவே சாத்தியம் அதிகம்...

மற்றும் படி புலிகள் இயக்கம் ஒண்றும் பிழைகளே விடாதவர்கள் அல்ல.. தவறு எண்று சுட்டி காட்டும் இடத்து திருத்தி கொள்ளாதவர்களும் அல்ல...

வயல் விதைக்க நெல் போடும் போது வயலில் நெல் மட்டுமே முளைப்பது கிடையாது கூடவே புல்லும் பூண்டும் முளைக்கிறது.. களை எடுக்க வேண்டியது வயலை ஆக்குபவனின் கடன்... இல்லை எண்றால் புல்லு நெல்லை அழித்து விடும்... புலிகளுக்குள்ளும் வெளீயேயும் இது பொருந்தும்...

இட்டாலி வடை said...

ரகு !

இது நல்ல ஆரோக்கியமான அணுகு முறை ..அது உங்களுக்கு மட்டுமல்ல தமிழ் மக்கள் அனைவருக்கும் நன்மை பயக்கும்.

புலிகளால் மற்றைய இயக்கங்கள் போராட்டத்தில் இருந்து தடை செய்யப்பட்டமையை என்னால் எப்போதும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

மற்றைய இயக்கங்களில் இருந்தவர்கள் சிங்களர்களோ சீனர்களோ அல்லவே..

அவர்களும் தமிழர்கள் என்பதுடன் போராட தார்மீக கடப்பாடும் உரியவர்கள்.

போராட உரிமையும் உல்ளவர்கள். அனவரும் இணைந்தோ உடன்பட்டோ கூட்டாகவோ போராட்டத்தில் ஈடுபட அனுமதிக்கப்பட்டிருக்க வேண்டும்.

இன்றைய நலிவிற்கும் இதுவே பெரும் காரணம்.

நடந்து போனவைகள் பற்றிக் கதைப்பதில் எதுவும் இல்லை. நடக்கப்போவதை சரிப்படுத்திக்கொள்ளலாம் தானே.

அனுபவங்களில் இருந்து கற்றுக்கொள்பவன் தானே மனிதன்.

மக்கள் இணைக்கப்பட்ட போராட்டம் எப்போதும் தோற்பதில்லை. மக்களில் இவர்களும் இருக்கின்றார்கள்.

இவ்வாறு இணைந்து போராடும் பல இனங்கள் இன்றும் வீழ்ந்து விடவில்லை. அவர்கள் இலக்கை அடைவதை எந்த வல்லரசும் தடுத்து விட முடியாது.

வெத்து வேட்டு said...

did anyone ever asked ltte when they killed people in the name of "traitors" or "spies"???
would any normal person can go to ltte's camp and ask "why they killed such person"??

did ever ltte "claim" they did any of those killings??

as a normal person would have the stomach to "ASK A PERSON WHO KILLS IN THE MIDDLE OF A MARKET WITH OUT ANY REMORSE??"
i have seen so many LTTE's killings... but NOONE KNEW REASONS..except LTTE ONLY,.,,,
W
WHO GAVE THIS RIGHT TO LTTE???????

இட்டாலி வடை said...

வெத்து வேட்டு ! நல்ல கேள்விகள். இது எப்போதும் எல்லா இயக்கங்களையும் பார்த்துக் கேட்கப்பட்டே வந்திருக்கின்றது.

எங்கள் துரதிர்ஷ்டம் . எந்த இயக்கமும் இதில் இருந்து தப்பவுமில்லை அதை துணிவுடன் எதிர்கொள்ளவுமில்லை.

இனி என்ன செய்யலாம் என்று ஏதாவது சொல்லுங்களேன் வெத்து வேட்டு.

Anonymous said...

நண்பரே!
வலியை அனுபவிப்பவர்கள் நாங்கள். எங்களின் வலியை தீிர்க்க எமது புலிகள் போராடுகின்றார்கள்ஃ அதனால் அவர்கள் எது செய்தாலும் அது எமது வலியை போக்குவதற்கு சிறிது உதவினாலும் அதை நாங்கள் கண்மூடித்தனமாக ஆதரிப்போம். அது யாருக்கு எப்படிப்பட்டாலும் அதைப்பற்றி நாம் கவலைப்படபோவதில்லை. நீங்கள் எங்களை விமர்சிக்கமுன் வாருங்கள் ஈழத்துக்கு. வந்து 1 கிழமை வாழ்ந்துவிட்டு விமர்சியுங்கள்ஃ

நாங்கள் என்ன உங்களிடம் கேட்கின்றோம் என்றால், நாம் இப்போது மிகவும் இக்கட்டான நிலையில் இருக்கின்றோம்ஃ அத்துடன் மனரீதியாக மிகவும் நொந்து போய் இருக்கின்றோம். மேலும் எங்களை நோகடிக்காதீர்கள் என்று தான் கேட்கின்றோம். போர் ஓய்ந்து தமிழீழம் மலர்ந்து எங்களை நீங்கள் எல்லாம் அங்கீகரித்த பின்னர் கேளுங்கள், விமர்சியுங்கள். பதிலளிக்க தயாராக இருக்கின்றோம். இப்போது நாம் எழுதகருவிகளை மூடி விட்டு களத்தில் போர்கருவிகளை இயக்கிக்கொண்டிருக்கின்றோம். கொஞ்சம் நேரம் தாருங்கள். நாங்கள் ஒன்றும் கல்வியறிவில்லாதவர்கள் இல்லை உங்களுக்கு பதிலளிக்க தயங்குவதற்கு என்பதை தாழ்மையுடன் நினைவுபடுத்த விரும்புகின்றேன்.
நன்றி
வன்னியிலிருந்து ஈழச்சோழன்

Anonymous said...

விடுங்கையா! நீங்கள் ஏன் பினாமிகளைப்பற்றி கவலைப்படுகின்றீர்கள். புலிகளைப்பற்றி உங்களுக்கு தகவல்கள் வேண்டுமென்றால் அவர்களின் உத்தியோகபமபூர்வ ஊடகங்களை நாடுங்கள். எங்கதான் பினாமிகள் இல்லை. உங்க நாட்டிலுமிருந்து தான் நிறைய பினாமிகள் பற்றி செய்திகள் வெளிவருகின்றனவே. துரோகிகளை விட பினாமிகள் மேலானவர்களே.

Anonymous said...

//புலிகளால் மற்றைய இயக்கங்கள் போராட்டத்தில் இருந்து தடை செய்யப்பட்டமையை என்னால் எப்போதும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை///
ஒரு இயக்கம் முன்னிலை வகிப்பதனால்தான், எங்கள் போராட்டம் இத்தனை காலம் வீரியத்துடன் செயற்பட முடிந்தது என்பது எனது கருத்து(சொந்த் கருத்து)! ஒரு வேளை பல இயக்கங்கள் இருந்திருந்தால்... நாங்கள் எங்களினுள்ளேயே அடிபட்டு கொண்டிருப்போம்! எதிரிக்கு அது சுலபமாகிவிடும்!
இன்னமும் எங்களினால் இந்த போராட்ட வரலாற்ரில் எந்தவொரு முனைப்பையும் அடைந்திடாமல் இருப்பதற்கு.. எங்களினுள் ஒற்ருமையின்னையே முக்கிய காரனம்! கருனா முதலில் அப்படி கிள்ர்தெழுந்த போது! நானும் தலைவர் அப்படி ஒரு தவற்றினை புரிந்து விட்டாரா என்று ஒரு கனம் ஆடிவிட்டேன்! ஆனால் பாருங்கள் இப்போது நிலமையினை, உங்களிற்கே வெ.பா தெரிந்திருக்கும் எங்கு தவறு இழைக்க பட்டிருக்கி்றது என்பது! எது துரோகம் என்பது..

வெத்து வேட்டு said...

Ravusu: no "armed group" behaved in any "moral" way...
i think EROS was okie...but all other groups did what is conveneient to them...
ltte kickeout all of them became BIG-Don..
that is how i see them....
ltte's fighting after Indo-Srilankan Pact is just for Praba's and ltte leaders survival..living..what ever way we can see it

வெத்து வேட்டு said...

Prabaharan has nothing to do with Tamil-Struggle...he was a run away ...and a coolie for a smugglers..that is he...
just like Dawood Ibrahim of Bombay

இட்டாலி வடை said...

நண்பர் ஈழச்சோழன்!

யாரையும் புண்படுத்தும் நோக்கம் இங்கு கிடையாது. புலிகளைப்பற்றிய விமர்சனங்களும் இங்கு வைக்கப்படவில்லை. புலிகளின் பெயரில் அடாது செய்யும் சிலரைப்பற்றிய பதிவே இது.

இது பலராலும் பலவாறாகப் பார்க்கப்பட்டிருக்கின்றது.

தமிழ்த்தேசியம் வெல்லப்படவேண்டுமென்பதில் மாற்றுக்கருத்து கிடையாது. அது அடையப்படவேண்டின் தமிழ் மக்களிடை ஒற்றுமை இருக்கவேண்டும். அதாவது ஜனநாயகப்பங்களிப்பை அனைவரும் நல்கும் வாய்ப்பு அளிக்கப்படவேண்டும்.

அனைத்துப்போராளிகளும் இணைக்கப்பட வேண்டும். மக்கள் போராட்டமாக இது மாற்றப்படவேண்டும்.

கவின் !
பல இயக்கங்களின் நோக்கம் ஒன்றாக இருக்கும் போது பிளவுகளைச் சரி செய்யும் வாய்ப்புகள் காணப்படும். இறுதியில் ஒரு கட்டமைப்பாக கட்டப்படும் நிலை கூட வரலாம்.

அதற்கு ஆயுதப் பயிற்சியுடன் அரசியல் கல்வி குறைந்த பட்சம் தமிழ் ஈழத்தின் எதிர்காலம் பற்றிய தெளிந்த அறிவு ஊட்டப்படுவது நன்மை பயக்கும்.

போராட்டம் வெல்லப்படுவது தனிமைப்படுத்தப்பட்ட ஈழத்தேசிய வாதம் முன்னெடுக்கப்படுவதில் மட்டுமல்லாது இன்றைய அரசியல் பொருளாதார உலக ஒழுங்கு புரிந்து கொள்ளப்படுவதுடன் அதனை எதிர்கொள்ளும் அரசியல் இராஜ தந்திர செயல்பாடுகளிலும் தங்கியுள்ளது.

நாம் விரும்பியோ விரும்பாமலோ அந்தச் சுமை எங்கள் மீது திணிக்கப்பட்டிருக்கின்றது.

இன்றைய ஈழப்போராட்டத்தின் எதிர் சக்தி சிங்களப்பேரினவாதம் மட்டுமல்ல உலக வல்லாதிக்கச்சக்திகளும் அது சார்ந்த முதல்வாதப்பொருளாதாரமும் தான்.

மலைப்பாக இருந்தாலும் நாம் இவற்றை எதிர்த்துப்போராட வேண்டிய அவசியத்தில் இருக்கின்றோம். இப்போது புரியும் நம் ஒற்றுமையின் அவசியம்.

இன்று புலிகள் தோற்று விட்டார்கள் என்று கூறுவது சிங்கள அரசு அல்ல. அமெரிக்காவும் அதன் கூட்ட மேற்கு நாடுகளும் தான்.

புலிகள் மக்களைத்தடுத்து வைத்திருக்கின்றார்கள் என்பது அவை ஆடும் நாடகம். புலிகளை ஒன்றுமில்லாது ஆக்க அந்த நாடகத்தின் தொடர்ச்சியாக அமெரிக்காவோ அதன் ஏவுதலில் இந்தியாவோ படைகளை இறக்கி தமிழ் மக்களை விடுவிக்க முயன்றாலும் நான் ஆச்சரியப்படமாட்டேன்.

புலிகளுக்கு மிகுந்த நெருக்கடி நேரம் இது. அமைதிப்படைகளை விரட்டிய காலம் போல் சாதரணமாக எடுக்காதீர்கள்.

இதிலிருந்து மீண்டு வருவது எப்படி என்று யோசியுங்கள்.

தமிழ்த்தேசியம் தோற்கடிக்கப்படக் கூடாது. ஏன்? எப்படி?என்று..அதைபற்றி பிறிதொரு கட்டுரை எழுதுகின்றேன்.

இட்டாலி வடை said...

வெத்து வேட்டு !

ஆயுதக் குழுக்கள் மட்டுமல்ல மக்களால் தெரிவு செய்யப்பட்ட , தெரிவு செய்யப்படாத அரசுகள் கூட அவ்வாறு ஒரு சார்பாகத்தான் இருக்கின்றன .

சிறிலங்கா இந்தியா அமெரிக்கா ஏன் கம்யூனிஸ ரஷ்யா கூட அவ்வாறு தான் நடந்து கொண்டன.

ஆகவே இதையும் கடந்துதான் நாம் செல்ல வேண்டிய இலக்கு இருக்கின்றது.

அதே நேரம் யாரையும் இங்கு ஒதுக்கி விடமுடியாது. தமிழ் ஈழத்தின் எதிர்காலத்தை காலம் தேர்ந்தெடுத்துக்கொள்ளும்.

இப்போது நம் முன்னால் உள்ளதெல்லாம் செயல் ஒன்றே..அதுவும் இன்றே..

Anonymous said...

//ரவுசு- இன்று புலிகள் தோற்று விட்டார்கள் என்று கூறுவது சிங்கள அரசு அல்ல. அமெரிக்காவும் அதன் கூட்ட மேற்கு நாடுகளும் தான்.புலிகள் மக்களைத்தடுத்து வைத்திருக்கின்றார்கள் என்பது அவை ஆடும் நாடகம். புலிகளை ஒன்றுமில்லாது ஆக்க அந்த நாடகத்தின் தொடர்ச்சியாக அமெரிக்காவோ அதன் ஏவுதலில் இந்தியாவோ படைகளை இறக்கி தமிழ் மக்களை விடுவிக்க முயன்றாலும் நான் ஆச்சரியப்படமாட்டேன்.//

என்ன ரவுசு? ஒபாமாவாலேயே எம்மை காப்பாற்ற முடியும் என்று அமெரிக்காவிலும் எங்களை காப்பாற்று என்று ஐரோப்பாவிலும் புலி ஆட்கள் ஊர்வலம் போய் மன்றாடுகிறார்கள் கெஞ்சுகின்றார்கள். ஆனால் நீங்களோ இப்படி கூறுகிறீர்களே !!

இட்டாலி வடை said...

அனானி !

வெறும் உணர்ச்சிகள் எதையும் தீர்மானிக்காது. வேண்டுமெனில் அனுதாபத்தை உருவாக்கலாம். அனுதாபம் வேண்டிய போராட்டமாக எடுத்துக்கொள்ளலாம்.

ஆனால் மேற்கு நாடுகளின் அஜண்டாவை இது மாற்றப் போவதில்லை.

"விடுதலைப்புலிகளை சரணடையும்படி சரவதேசரீதியிலான அழைப்புகள் - புலம்பெயர் நாடுகளில் உள்ள தமிழர்களும் தமிழ்நாட்டுத் தலைவர்களும் விடுதலைப்புலிகளுக்கான தங்கள் ஆதரவை நிறுத்தும்படியும் - இலங்கை அரசாங்கத்தின் சர்வதேச முனைப்புகளின்மீதான சந்தேகங்களை சமனப்படுத்துவதற்கு உதவமுடியும். விடுதலைப்புலிகளின் சரணடைவை சர்வதேசம் கண்காணிக்கும் என்று வாக்குக் கொடுப்பது அவர்கள் தங்கள் படைகளின்மீதும் பொதுமக்கள் மீதுமான பிடியைத் தளர்த்தத் தொடங்கலாம். முக்கியமான வெளிநாட்டு அரசாங்கங்கள்> முக்கியமாக இந்தியாவும் அமெரிக்காவும் இலங்கை அரசாங்கத்திற்கு பாதுகாப்பிற்கான உறுதிகளை வழங்க வேண்டும். ஒருவேளை> விடுதலைப்புலிகள் கடலினூடாகத் தப்பிச் செல்வதைத் தடுப்பதற்கு கரையோரப் பிரதேசங்களில் கடற்படை கண்காணிப்புகளை அதிகரிக்கலாம்.

சர்வதேச சட்டவிதிகளின்படி இலங்கை அரசாங்கமானது தனது பிரதேசத்தின் ஒருமைப்பாட்டைப் பாதுகாக்கும் வகையில் பயங்கரவாதத் தாக்குதல்களிற்கு எதிராகச் செயற்படுவதற்கு உரிமையுடையது. ஆனால் அதற்காக ஆயிரக்கணக்கான பொது மக்களின் உயிரை விலை கொடுத்து விடுதலைப்புலிகளை அழிப்பது என்பது, இலங்கையிலுள்ள தமிழர்களை மோசமான அந்நியப்படுத்தலுக்கும்> உலக முழுவதும் உள்ள தமிழர்களை தீவிரவாதிகளாகவுமாக்குவதற்கான வழிவகையாகும்."

http://www.crisisgroup.org/home/index.cfm?id=5974&l=1

இது Conflict Risk Alert: Sri Lanka என்பது பற்றி 9 March 2009 இல் வெளியிடப்பட்ட அறிக்கையின் மொழியாக்கம்.

சரியான வழிகாட்டுதல் புலம்பெயர்ந்த தமிழ் மக்களுக்கு வழங்கப்படவேண்டியதன் அவசியத்தை உணர்த்தும்.

Anonymous said...

ரவுசு and வெத்துவேட்டு...

புலிகள் இந்திய இராணுவ காலத்தில் ஒடுக்க பட்டு காடுகளிலும் கரம்பைகளிலும் திரிந்த காலங்களில் புலிகளால் ஒடுக்க பட்ட இயக்கங்கள் இந்திய இராணுவத்தோடு அதிகாரத்தில் இருந்தன...

மக்கள் மத்தியில் சுதந்திரமாகவும் செயற்பட்டன.. ஆனால் அவர்களால் ஏன் தமிழ் ஈழ மக்களின் நன்மதிப்பை பெற முடியவில்லை...??? இந்த இயக்கங்கள் எல்லாம் ஈழத்தில் இந்திய படைகளோடு இருந்த போது புலிகளும் தலைமறைவாக அங்குதான் இருந்தார்கள்... எங்கும் ஓடி விடவில்லை... இந்த இயக்கங்கள் மீதும் இந்திய இராணுவம் மீதும் தாக்குதல்கள் நடத்தியவாறுதான் செயற்பட்டார்கள்... அந்த புலிகளின் போராளிகளுக்கு உணவும் மறைவிடங்களையும் காட்டி பாதுகாத்தவர்கள் தமிழ் மக்கள்தான்.. புலிகளின் எண்ணிக்கையும் அந்த மக்கள்தான் அதிகரித்தனர்...

ஆனால் இந்திய படைகளோடு சகல வசதிகளோடும் இருந்தவர்கள்... இந்திய படைகளை விட எண்ணிக்கையிலும் பலத்திலும் புலிகள் கட்டுக்குள் வந்த போது ஏன் ஓடி ஒளிந்து கொண்டார்கள் எண்று உங்களுக்கு நீங்களே கேள்வி கேட்டதுண்டா..??

காரணத்தை நானே சொல்லி விடுகிறேன்...

புலிகளின் பலமே மக்கள்தான் அந்த மக்களின் ஆதரவை பெற்று கொள்ள முடியாத அவர்களால் அங்கு தங்கி இருக்க பாதுகாப்பான இடம் இருக்க வில்லை... இவர்கள் செய்த கொடுமைகளினால் அல்லல் பட்ட மக்கள் தங்களை புலிகளுக்கு காட்டி கொடுத்து விடுவார்கள் என்பதை சந்தேகமற நம்பினார்கள்...

வெத்து வேட்டு said...

Ragu: ltte had majority of the people's support during and Pre IPKF Era...all people thought something GOOD will come out of this armed struggle because at that time war didn't happen at the door steps..
but IPKF showed people what WAR really is...
my frustration is Praba should have been smartened after IPKF left and lead our struggle in NON-DESTRUCTIVE MANNER...
don't say that even ltte choose otherways tamil would have been killed...because anyway Tamils got killed...so my thinking is Praba if he really is smart (as you ltte die hard fans portray)...or a leader who actually thought about people and suffering he shouldn't have lead this WAR PATH...
today people are getting killed even worse than stray dogs.... will Praba take RESPONSIBILITY for this??
in my opinion ltte was over confident...adamant...stupid..and dumb for
bringing this to tamil

Anonymous said...

வெத்து வேட்டு..! நீங்கள் எல்லாம் நலமாக வாழ பிரபாகரன் கடுமையாக உழைக்க வேண்டும் நீங்கள் செய்யும் அனீதிகளை எல்லாம் சாமயோசிதமாக சமாளிக்க வேண்டும் எனும் தொனிப்படும் உங்களின் நரி தந்திரம் புரிகிறது...

பிரபாகரன் உங்களுக்காக எல்லாவற்றையும் சமாளித்து உங்களுக்கு நோகாமல் இருக்க எல்லாத்தையும் கொண்டு வந்து தருவார் , அல்லது தர வேண்டும் எனும் உங்களின் தமிழ் சிறுபாண்மை மூளை இருக்கிறதே அதுதான் தமிழரை அழிக்கும் மூல காரணமே...

Post a Comment