Tuesday, March 3, 2009

புலிகள்= அரசியல்+ கிறிக்கெட்




காலை எட்டு மணி . இலங்கை வெளிவிகார அமைச்சு பரபரப்புடன் இருந்தது. வந்த செய்தி அப்படி. இரகசிய செய்தி மெதுவாகக் கசியத் தொடங்க அலுவலகம் முழுவதும் பரபரப்புத் தொற்றிக்கொண்டது. காலையில் வேலைக்கு வந்தவர்கள் மரத்தடி கன்ரீன் என்று இடம் கிடைத்த இடத்தில் எல்லாம் கூடி நின்று விவாதிக்கத்தொடங்கி விட்டிருந்தார்கள். புதிதாக உள்ளே வந்தவர்களிடம் கேற் காட்டினால் இரகசியம் கசிய விடப்பட பரபரப்புடன் விரைந்து கூட்டத்தில் கலந்து விடயம் உள்வாங்கப்பட்டுக்கொண்டிருந்து. விடயம் முழுதாகத் தெரியாவிட்டாலும் "ஹொட்டியா அடித்து விட்டது" என்ற அளவில் விடயம் பிடிபட செல்போனின் நம்பர் சுழட்டப்பட கொழும்பு நகரம் எங்கும் கிலி பிடித்துக் கொண்டது.

வீரர்களின் உறவினர்கள் பீதியில் உறைந்து போயிருந்தார்கள். சிலர் புலிகளைத் திட்டவும் வேறு சிலர் அவர்கள் "தில்"லை கிலாகிக்கவும் ..கதை.. கண் காது மூக்கு வைத்து எல்லோர் வாயிலும் நுழைந்து விசுவரூபம் எடுத்துக்கொண்டிருந்து.

கேள்விகள் பதில்கள் விளக்கங்கள் என்று என்று கதை வேகமாக பரவிக்
கொண்டிருந்தது.

மணி 8.30..... உள்ளே உயரதிகாரிகள் கையைப்பிசைந்து கொண்டிருந்தார்கள்.
வெளிவிவகார அமைச்சரும் ஜனாதிபதியுடன் நேபாளத்திற்குப் போயிருக்கையில்.. அழைத்த தொலைபேசிக்கு ஹோட்டல் உதவியாளனிடம் இருந்து தான் பதில் வந்தது.

"இரவு முழுவதும் கொண்டாட்டத்தில் இருந்ததில் காலை 9 மணிக்கு முன்னர் தொந்தரவு செய்யவேண்டாம் என்ற அறிவிப்பு " சொல்லப்பட்டது.

எங்கே போனாலும் குடி கூதி... அவர்களின் அதிர்ஷ்டத்தின் மேல் பொறாமையாகவும் எரிச்சலாகவும் இருந்து. "ஏன் உடனேயும் சொல்லவில்லை"
என்று பின்னால் காணப்போகும் குடிகாரக்கன்களின் சிகப்பு இப்போதே பயமுறுத்தியது.

தொலைபேசி உள்ளூர் கனவான்களை நோக்கி சுழட்டப்பட்டது. இங்கேயும் அதே கதை. அவர்கள் தலையைப்பிடித்தபடி உட்கார்ந்திருந்தார்கள்.

ஹொட்டியா பிளேனில் சென்றிருக்கக் கூடும் என்று ஒரு சாராரும் அவர்களுக்குச் சொந்தமான கப்பலில் சென்று படகில் கரை இறங்கியிருக்கலாம் என்றும் தங்களுக்குள் அடித்துக் கொண்டாரகள். சிலர் இதை வைத்தே பந்தயம் கட்டி காசு பார்க்கப் பார்த்தார்கள்.

வெளி விவகார அமைச்சில் உறவினர்களைக் கொண்டவர்கள் அடிக்கடி அங்கே தொடர்பு கொண்டு நிலமையின் தீவிரத்தை ரன்னிங் காமண்ரியாகக் கொடுத்துக்கொண்டிருந்தார்கள். கதையைத் தீவிரப் படுத்தி தங்களைச் சுற்றி ஒரு கூட்டத்தை வைத்துக் கொண்டார்கள். அன்று அவர்களின் நிறைவேறாத ஹீரோ
கணக்கு நிறைவேறியதில் வரப்போகும் செல்போன் பில் கூட துச்சமாகத் தெரிந்தது.

மணி 9.30 ... அமைச்சர் தொலைபேசியில் கிடைத்தார். இரவி இறங்கிய சீவாஸ் றீகலின் காரத்தில் இன்னும் தொண்டை கமறியது. செய்தியைச் சொன்ன உயரதிகாரி ஹொட்டியாவின் மேல் தனக்கிருக்கக் கூடிய சந்தேகத்தையும் காதில் போடத் தவறவில்லை.

இப்போது எழுந்திருக்கின்ற இந்தியாவின் ஒப்புக்குச்சப்பாணி கோரிக்கைகளையும் மேற்குலகின் ஐக்கிய நாடுகள் தீர்மானம் போன்ற கெடுபிடிகளையும் தவிடு பொடியாக்கக் கூடிய அஸ்திரம் இங்கே ஒளிந்திருப்பதையும் விலா வரியாகப் புட்டுப்புட்டு வைத்தார். அப்படியே தன் பதவியுயர்வு பற்றியும்....

அதியுயர் ஜனாதிபதியை அணுகவே அமைச்சருக்குப் பயமாக இருந்தது. 8 மணிக்கு முன்னால் நடந்த செய்தியை 10 மணிக்குச் சொல்லும் மதியூக மந்திரியைத் திட்டித் தீர்க்காமல் என்ன செய்வார்? ஒரு கடும் பொழுதில் "குடிகார நாயே" என்று கேணைத்தனமாக பேச்சு வாங்கியது இன்னும் உறுத்திக் கொண்டிருந்தது.

உத்தம ஜனாதிபதியும் கால நேர வர்த்தமானங்களை அறிந்து கொள்வதற்கு முன்னர் ஹொட்டியாவின் உச்சிக்குடுமியைப் பிடித்து ஆட்டுவதற்கான சந்தர்ப்பமாக தானே தன் சிந்தனையால் சொல்லுவதாக படம் போட்டு காட்டி விபரித்தார்.கேட்டுக்கொண்டே இருந்த அதி உத்தமரின் முகத்தில் புளகாங்கித புன்னகையை கண்டதும் "அப்பாடா " என்று ஆறுதலாகவிருந்தது. நீண்ட காலம் கண்வைத்திருந்த கப்பல்துறையையும் தன் கையகப்படுத்தும் திட்டத்தையும் கூறிவிடலாம் என்ற நம்பிக்கையும் வந்தது.

அடுத்து காரியங்கள் மளமளவென்று நடந்தன. பக்ஸுகளிம் இ மெயில்களும் உலகம் முழுவதும் பறந்து களைத்தன. அடுத்த ஐந்தாவது நிமிடம் இந்திய அமைச்சர் "வங்காளப் புளி" பிரணாப் முகர்ஜி தொடர்பில் இருந்தார்.

இலங்கை வெளிவிவகார அமைச்சர் ரோகித போகல்லாகம சொல்லச் சொல்ல வேறு ஒரு கணக்குப் போட்டார். புலிகளை இதற்குள் இழுத்து சிறீலங்காவின் புகழ் மேன்மையடைய போகல்லாகம சொல்லிய திட்டங்களை மாற்றிப்போட்டுப் பார்த்தார்.

பொகல்லாகம தொலைபேசியை வைத்ததும் வேறு ஒரு கதை பரவியது. இந்திய தொலக்காட்சிகள் எல்லாம் வீடியோவுடன் படங் காட்டின. இந்தியா புலிகளை மாற்றீடு செய்து லக்ஷர்- இ- தொய்பாவை வில்லனாகக் காட்டியது. இனி அமெரிக்காவுடன் இன்னும் நெருங்கி விடலாம் என்ற நம்பிக்கையுடன் இந்திய உள்துறை அதிகாரிகள் கை குலுக்கிக் கொண்டிருந்தார்கள்.

இதை எப்படி தேர்தல் வெற்றியாக மாற்றலாம் என்று இந்திய அரசியல்வாதிகள் தலையைப் பிச்சுக்கொண்டிருந்தனர். இனி அறிக்கைகள் பறக்கும்.

லேட்டஸ் செய்தி 1: பா. ஜ. க கண்டன அறிக்கையில் முந்திக்கொண்டு விட்டது.(முதல் அறிக்கை)

லேட்டஸ் செய்தி2: சிறீலங்கா வெளிவிவகார அமைச்சர் முகர்ஜியை மீண்டும் தொடர்பு கொண்டபோது "அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா" என்று சொன்னதாகக் கேள்வி.

No comments:

Post a Comment