
அண்மையில் ஒரு செய்தி வெளியாகியிருக்கின்றது. அமெரிக்காவில் வாழும் மெத்தப்படித்த இந்தியர்கள் கூட்டாகச் சேர்ந்து அமெரிக்க அரசிற்கு ஒரு மகஜர் கொடுத்திருக்கின்றார்கள். 16 ஆயிரம் பேர் கையெழுத்திட்டிருக்கின்றார்கள்.
பாகிஸ்தானிற்கு வழங்கப்படும் அமெரிக்க உதவிகள் நிறுத்தப்படவேண்டும். அல்லது பயங்கரவாதம் நிறுத்தப்படவேண்டும் என்ற முன் நிபந்தனை வலியுறுத்தப்பட்டு உதவிகள் வழங்கப்படவேண்டும்.
அமெரிக்காவில் இருக்கும் இந்தியர்களில் பெரும்பான்மையானோர் மெத்தப்படித்தவர்கள், அறிவாளிகள். அதே நேரம் மனிதாபிமானம் உள்ளவர்களா ? என்பதே எமது கேள்வி.
அமெரிக்கப்பிரதிநிதிகள் சபை வெளிநாடுகளுக்கும் வெளிநாட்டு அமைப்புகளுக்குமான உதவிகள் எவ்வாறு அமையவேண்டுமென மறு பரிசீலனை செய்யும் தருணம் இது. புதிய அரசு பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் திருத்தம் கொண்டுவர முயல்கின்றது.
அந்தச் சந்தர்ப்பத்தில் தான் அமெரிக்க வாழ் இந்தியர்கள் இந்த மகஜரை பிரதிநிதிகள் சபையிற்கும் அரசிற்கும் அளித்துள்ளார்கள். அல்ஹைடாவிலிருந்து அனைத்து முஸ்லீம் தீவிர வாத அமைப்புகளும் பாகிஸ்தானில் முகாமிட்டிருப்பதாகப் பட்டியல் இட்டிருக்கின்றார்கள்.
பாகிஸ்தானில் முஸ்லீம் தீவிர வாத அமைப்புகள் உருவாகுவதற்கே இந்தியா தான் காரணம் என்பதை இந்த மெத்தப்படித்த மேதைகளுக்கு யாராவது நினைவூட்டுங்கள். அதற்கு கொஞ்ச காலம் பின்னோக்கிப் போக வேண்டும்.
1947 இந்தியா பாகிஸ்தான் இரண்டு நாடுகள் உருவாகிய நேரம். பாகிஸ்தானும் இந்தியாவைப்போன்ற மிகச் சாதரண நாடு. சாமானியர்களால் உருவான தேசம்.
அப்போதெல்லாம் அங்கு பயங்கரவாதிகள் யாரும் கிடையாது.
உண்மையில் பாகிஸ்தான் , இந்தியா , காஸ்மீரம் என்று மூன்று நாடுகள் உருவாகியிருக்க வேண்டிய நேரம். காஸ்மீரின் துரதிர்ஸ்டம் அங்கு அப்போது இந்து மன்னன் ஆட்சி புரிந்து கொண்டிருந்ததும் வல்லபாய் பட்டேல் என்ற இரும்பு மனிதர் நேருவின் பக்கபலமாக இருந்ததும் இந்தியர்களுக்கு இயல்பாகவே இருக்கின்ற பேராசையும் (இந்த பேராசைக்கு நிறையவே உதாரணம் தருகின்றேன்) காஸ்மீரத்தில் மண்ணின் மைந்தர்களின் குருதி தொடர்ந்து பாச்சப்படவேண்டும் என்று எழுதியாகி விட்டது.
இன்று வரை ஐ .நாடுகளின் யோசனையைக்கூட உதாசீனப்படுத்தியது இந்தியா தான். இந்தியா நினைத்தால் காஸ்மீரைச் சுதந்திரமாக வாழ விடலாம் என்பது எனது மட்டுமல்ல உலக அரசியல் ஆய்வாளர்களின் கருத்தாகும்.
இந்தியாவால் ஆக்கிரமிக்கப்பட்ட அக்காஸ்மீரின் விடுதலையை வேண்டியவர்களின் தோற்றுவாய் இன்று பாகிஸ்தானை இன்றுள்ள நிலைக்குக் கொண்டுவந்தது துரதிர்ஸ்டமே. அதே போல் ஆப்கானிஸ்தானில் நிலைகொண்ட சோவியத் ஆதரவு அரசை அகற்ற அமெரிக்கா எடுத்த நிலைப்பாடு இன்று ஆப்கானிஸ்தானையும் பாகிஸ்தானையும் பயங்கரவாதத்தின் பிடியில் பூரணமாகக் கொடுத்திருக்கின்றது.
அதே போல இதே பாகிஸ்தானை நலிவடையச் செய்ய வேண்டி பங்களாதேசத்தின் முத்தி வாகினி போன்ற அமைப்புக்களை ஆயுதமும் பயிற்சியும் கொடுத்து வளர்த்து விட்டதும் பாகிஸ்தானைப்பிளவு படுத்தி பங்களாதேசத்தை உருவாக்கி விட்டதும் இந்தியர்களின் பேராசையே.
அதே போல ஈழத்தில் கொழுந்து விட்ட விடுதலைப்போராட்டத்தை ஆயுதம் பயிற்சி என்ற ஆசைகளைக்காட்டி திசைதிருப்பி விட்டதும் இன்றைய ஈழத்தவரின் அனைத்து அவலங்களுக்கும் காரணம் இதே இந்தியர்களின் பேராசை.
பிராந்திய வல்லரசுக்கனவு என்ற மாயையின் பின்னால் ஓடும் இந்தியர்கள் அனைத்து மனித விழுமியங்களையும் தங்கள் காலடியில் போட்டு மிதித்துக் கொண்டு செல்கின்றார்கள் என்பதை யாராவது இவர்களுக்குச் சொல்லுங்களேன்.
அமெரிக்கா வாழ் மெத்தப்படித்த இந்த இந்தியர்கள் இன்று வன்னிக்காடுகளில் ஓடும் இரத்தத்தின் பின்னால் சோனியாவின் இந்திய அரசு நிற்பதை எவ்விதம் பார்க்கின்றார்கள். இந்த அரச பயங்கர வாதம் பற்றி இவர்கள் கண்டறிந்தது என்ன?
பயங்கர வாதத்தை ஆதரிப்பவர்கள் யாராய் இருந்தாலும் அவர்களும் பயங்கர வாதிகளே - என்பது அமெரிக்காவின் அதிரடி கண்டு பிடிப்பு.
இனவிடுதலைப்போராட்டமும் அமெரிக்காவின் வசதிக்கேற்ப பயங்கரவாதப்பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது . இனவிடுதலை அடைந்த வியற்நாம் , கியூபா முதல் இனவிடுதலை வேண்டிப்போராடும் ஈழத்தமிழர்கள் வரை இதற்கு உதாரணங்கள்.
இந்தியாவின் அரச பயங்கரவாதத்தை ஆதரிப்பவர்களும் அத்தகைய அரசமைப்பைக் காத்துக்கொள்ள மகஜர் கொடுப்பவர்களும் பயங்கர வாதிகள் தானே. இப்போது தலைப்பை இன்னுமொரு முறை படித்துப்பாருங்கள்.
(நீதியின் பால் செயற்படும் ஆதரவளிக்கும் இந்தியர்கள ,அமெரிக்கர்கள், இந்திய-அமெரிக்கர்கள் பற்றி எங்களுக்கு உயர்ந்த அபிப்பிராயம் இருக்கின்றது. )
4 comments:
முட்டாள்தனமான பதிவு.
காஷ்மீர் இந்தியாவுடன் சேரவேண்டும் என்று ஹரிசிங் என்ற காஷ்மீர மன்னர்,பாகிஸ்தானியர்கள் அடித்த கொள்ளைகளை தடுக்க வழியற்று பாதுகாப்பு வேண்டி இந்தியாவுடன் இணைய இசைந்தார்...
இந்து மன்னனின் சுய ஆசைதான் இந்தியாவுடன் சேர்வது. மக்கள் விரும்பியது சுய தேசமாக காஸ்மீர் இருக்கவேண்டுமென்பது.
முல்லாக்களின் அதிகப்பிரசங்கித்தனம் பாகிஸ்தானின் துணையை க்கேட்டது.
இன்றும் மக்கள் இந்தியாவை மட்டுமல்ல பாகிஸ்தானையும் தங்கள் மண்ணை விட்டு வெளியேறக் கோருகின்றார்கள்.
காஸ்மீர் தனி நாடாகச்செல்வது தான் முறை.
இந்திய ஜவான்களால் எப்போதும் ஒரு தேச மக்களை அடிமைப்படுத்தி வைக்கமுடியாது.
புத்திசாலிகள் ஜதார்த்தத்தைப் புரிந்து கொள்ள மறுப்பதே காஸ்மீரின் இன்றைய அவலத்துக்குக் காரணம்.
நீங்கள் இதில் எந்த வகை..
OH REALLY....THANKS FOR OPENING EYS....
LET ME RECONSIDER YOUR THOUGHTS B'COS YOU ARE THE PERSON WHO KNOW THE PEOPLE RIGHTS. THANKS FOR SHARING YOUR EXPERIENCE.
IF YOU WANT TALK ABOUT SRILANKA YOU MAY KNOW BETTER THAN ME....IF YOU WANT TO TALK ABOUT KASHMIR I KNOW BETTER THAN YOU (I LIVED FROM AGE OF 7 TO 45). DO YOU WANT MY EXPERIENCE OR THE BOOKS YOU READ.
I DONOT HAVE BLOG BUT I READ ALL THE BLOGS AFTER YOU WRITE (DO YOU THINK YOU CAN WRITE ANYTHING LIKE THIS ONE LIKE HALF BOILED) AND OPEN FOR OPINIONS ANYONE CAN SAY ANYTHING..
RAM (RAMASAMY CHINNAPPAN)
நன்றி ராம் !
அப்போ எதற்காகக் காஸ்மீரில் இந்தப்போராட்டம்.. இந்தியச் சிப்பாய்களுக்கு அங்கு என்ன வேலை...காஸ்மீர் மக்கள் (நன்றாகக் கவனியுங்கள் மக்கள்) ஏன் வீதிக்கு வந்து இந்தியாவிற்கு எதிராகக் கோஷம் வைக்கின்றார்கள்?
பிரச்சினையே இல்லையென்றால் ஐ.நாடுகளின் தலையீடு எப்படி? ஏன் வந்தது?
ஐ.நாடுகள் சொன்னதைப்போல இந்தியா ஏன் காஸ்மீர மக்களின் கருத்துக்கணிப்பை இது வரை எடுக்கவில்லை?
மக்கள் (பெரும்பான்மையாக) இந்தியா விலகிப்போக வெண்டுமென்று கருத்திட்டால் விலக நீங்கள் தயாரா?
காஸ்மீரில் பிறந்திருப்பதால் உங்களுக்கு அதிக உரிமை இருக்கலாம். ஆனால் யாரும் கருத்துக்கூற முடியாது என்று தடை விதிக்க முடியாதல்லவா?
பாகிஸ்தானில் தலையிட அமெரிக்காவை அமெரிக்க வாழ் இந்தியர்கள் கேட்பதைப்போன்ற உரிமை தானே இதுவும்.
அரை அவியல் (அப்போ அரை வாசி உண்மை -அவிந்திருக்கின்றது)..என்று முத்திரை குத்துவதை விட காரணங்களை காரியங்களை எழுதுங்கள். ஆரோக்கியமான விவாதத்தை முன் வைப்போம்.
காச்மீர் மட்டுமல்ல பங்களாதேசம் இலங்கை போன்ற விடயங்களிலும் கருத்து வைத்துள்ளேன். இந்தியர்களின் பேராசை பற்றி . விவாதியுங்கள்
Post a Comment