Tuesday, March 17, 2009

சிங்களப் பைசாசங்களும் சில தமிழ் நாய்களும்




இந்தத் தலைப்பைத் தேர்ந்தெடுத்ததே ஒரு போதாத வேளை என்றுதான் தோன்றுகின்றது. தன் வீட்டுக்குள் வந்து கொள்ளி போட்டுத் தீமூட்ட தமிழன் தானே வழி காட்டுகின்றான் என்ற போது ஏற்பட்ட ஒரு அதீத கடுப்பு.

இந்த நேரத்தில் தான் மூதூர் தயிர் சேர்த்து சாப்பிட உடலுக்கு நல்லது என்று என் பெரியாத்தா சொல்லியிருக்கின்றா. உடல் சூட்டிற்குத் தயிர் போல மூளைச்சூட்டிற்கு .. நன்றாகத் திட்டித் தீர்ப்பதுதான் ..இது நான் கண்டறிந்த வைத்தியம்.

வன்னியில இன்று புலிகள் போராடுகின்றார்கள். போராடவில்லை என்பவர்களும் மல்லுக்கட்டுகின்றார்கள் என்பதையாவது ஒத்துக்கொள்ளுகின்றார்கள். சரி யாருடன் ..எங்களுக்கு ..தமிழருக்கு... எங்களுக்குப்பிடிக்காத சிங்களவருடன் .. அல்லது எங்களைக் குட்ட நினைக்கிற சிங்களவருடன்... எப்படியிருந்தாலும் மகிழ வேண்டியது தானே நாங்கள் செய்ய வேண்டியது..

அப்படியில்லையே ... எங்களைக்குட்ட நினைப்பவரையே எங்கள் வீட்டிற்குக் கூட்டி வந்து .. வாசல் முதல் கொல்லை வரை காண்பித்து ... என்ன இது அதைப்பற்றி நெஞ்சு நிமிர்த்திய பதிவுகள் வேறு..

நீங்களும் ஒரு காலத்தில் இயக்கங்களால் வளர்க்கப்பட்டவர்கள் எனின் அப்போதைய உங்கள் நோக்கம் எங்கள் மண்ணில் இருக்கும் சிங்களவரை அவர்கள் ஊருக்கு அனுப்புவதாகத் தானே இருந்தது.

அதற்குப்பின்னால் தானே நீங்கள் ரஷ்யத்து மார்க்ஸையும் ஏங்கல்ஸையும் ரொக்ஸியையும் மற்றவர்களையும் கண்டீர்கள். அதற்கு முன்னால் உங்கள் உணர்வுகளைத் தூண்டியவர்கள் உங்கள் ஊரில் செல்லடியிலும் ஹெலி சுட்டதிலும் விழுந்து கிடந்த உங்கள் ஊர் சுப்பிரமணியமும் சோமண்ணையும் தானே.

இதைதாங்க மாட்டாமல் தானே புரட்சி செய்ய அதுதாங்க துவக்குத் தூக்க வெளிக்கிட்டீங்க. யாழ்ப்பாணத்தில இருந்து கொழும்புக்கே போகாத எத்தினை பேர் கடல் தாண்டி கோடியாக்கரை போனீர்கள். எதனால ...இதெல்லாம் நடந்தது ..உங்களுக்குள்ள இருந்த புரட்சி இரத்தம். ஒரு தமிழன் சாவதைக்கண்டும் பொறுக்க முடியாத தமிழ் இரத்தம். புல்லரிச்சது எங்களுக்கு அப்போது.

ஆண்டுகள் கடந்து சென்றது .காட்சிகளும் பலதும் மாறியது. விரும்பியும் விரும்பாமலும்... பார்வையாளர்களாய் நாங்களே இருந்தோம் கால்த்தின் சாட்சிகளாய்.

இன்றும் எம்மக்களின் மீது சிங்களப் படைகளின் அதே ஆக்கிரமிப்பு அத்து மீறல். இன்றெல்லாம் உங்களுக்கு கோபமே வருவதில்லை. கொலைக்கரங்கள் பற்றி இப்போதெல்லாம் நீங்கள் பேசுவதில்லை. எப்போதோ ஓடும் பஸ்ஸில் உங்கள் சட்டையைப் பிடித்திழுத்து முந்தி யேறியவர்களைப் பற்றியே பேசுகின்றீர்கள். போக நினைத்த பயணம் மறந்து தத்துவ விசாரம் என நினைத்து சாக்கடைக்குள் பண்டியின் நிண நாத்தத்துடன்.

செத்து விழும் உங்கள் சோதரர்கள் பெண்டுகள் எல்லாம் மறந்து ஏறத் தவறிய பஸ்ஸை நினைத்து. மல்லுக்கட்டும் இவர்களுடன் சேர்ந்து மரணிக்கும் அவர்களையும் கொல்லும் கொலைக்கரங்களை மறந்து .. மல்லுக்கட்டுவதே பிழையாக.. நீங்களும் கோடியாக்கரை போனதே அதற்காகத்தானே.

எப்படி உங்களால் எல்லாம் மறக்க முடிகின்றது. உங்கள் மார்க்ஸும் ஏங்கல்சும் இதைத்தானா சொல்லிச்சென்றார்கள்.உன் மனிதன் இறந்து வீழும் போதும் உன் பகையை மறக்காதே. அவனையும் அவனோடு சேர்ந்த உன் சோதரனையும் கொன்று போடு என்பதையா அவர்கள் சொல்லிப்போந்தார்கள். அதனால்த் தானா சோவியத்தும் தோத்துப்போனது.

புரட்சிகரம் என்ற போர்வையில் பிழைப்பு வாதம் விதைக்கும் இராயாகரன் முதல் புலியெதிர்ப்புப் போர்வையில் முட்டையில் மயிர் பொறுக்கிக் கோலம் போடும் சிறீரங்கன் வரை பதில் சொல்ல வேண்டியவர்கள் நிறையவே உண்டு.(இவர்கள் தமிழ் மணத்தில் தவறான தகவல் பரப்புவர்கள் என்பதால் பெயர் குறிக்கப்பட்டிருக்கின்றது)

இவர்களைப்போல் தன் மனிதன் இறந்து விழும் கணங்கள் உள்ளும் கதை விடத் தெரிந்தவர்கள் அனைவரும் பதில் கூற வேண்டும். (தன்னை நம்பாத பிற சக்திகளை நம்பி அடிதொழுபவர்கள் நிறையவெ நம்மிடையில் உண்டு)

தமிழ்த் தேசியத்தின் எழுச்சி இன்று பல நாட்டு அரச வர்க்க ஆதாயங்களைக் கேள்விக்குறியாக்க முனைவதும் அதனாலேயே அவை ஒருங்கிணைந்து தாக்குவதும் இன்று நடந்து கொண்டிருக்கின்றது. இந்து சமுத்திரத்தின் எங்கோ ஒரு மூலையில் கிடந்த இலங்கையின் தமிழ் மக்களைப் பற்றி உலகமே பேசிக்கொண்டிருப்பது... மக்கா நாம சாதிச்சிட்டோமடா..

ஈழத்தமிழன் ..இதுவரையில்லை இன்னும் இருப்பான்...

No comments:

Post a Comment