
மல்லாக்காகப் படுத்திருந்து ரிலாக்ஸாக யோசித்ததில் (சீரியஸாக யோசித்து யோசித்து மூளை சூடேறிவிட்டது) ஆடு புலியாட்டத்தில் (நிஜப் புலிகளுடன் அல்ல) நாமும் கலந்து கொள்வோம் என்று தோன்றியது.
குட்டையைக்குழப்புவதுதானே நம்ம வேலையாச்சே... வந்தா மலை போனா என்னவோன்னு சொல்லுவாங்களே ..அதைப்போல ..
கொஞ்சம் பதிவுகளைப்படித்ததாலும் கொஞ்சம் பதிவுகளுக்கு வந்திருந்த பதில்கள் பாதித்ததாலும்.
என்ன சொல்லப்போறேன் என்பற்கு முன்னால் ... ரூடோ (rooto) ஒரு கேள்வி கேட்டிருந்தார் லசந்த விக்கிரம துங்கவைக் கொன்றது யார்னு?
நல்ல கேள்வி. பதிலும் எல்லோருக்கும் தெரிந்தது தான். அதை அவர் தன் நண்பருக்கு எழுதியிருந்ததை " கலையகம் " http://kalaiy.blogspot.com/2009/03/blog-post_4191.html
இப்படிப் போட்டிருக்கார்.
"எனது மரணம் சம்பவித்த உடனேயே நீங்கள் (ஜனாதிபதி ராஜபக்ஷ) வழக்கமான விசாரணைகளை தொடங்குவீர்கள். ஆனால் கடந்தகாலங்களில் முடுக்கிவிடப்பட்ட அனைத்து விசாரணைகளையும் போல, இதிலும் எந்த ஒரு முடிவும் வரப்போவதில்லை. உண்மையைச் சொன்னால் எனது மரணத்திற்கு யார் காரணம் (அனேகமாக பாதுகாப்பு அமைச்சர் கோத்தபாய ராஜபக்ஷ) என்பது, நம் இருவருக்கும் தெரியும்."
லசந்தவின் நண்பர் மகிந்த என்பதைக்கண்டு பிடித்திருப்பீர்கள். லசந்தவின் மரணத்திற்காக கவலைப்படும் ரூடோவிற்க்காக இன்னுமொரு சாம்பிள். அதுவும் லசந்த சொன்னது தான்.
"பிரிவினைவாத பயங்கரவாதம் அழிக்கப்படுகையில், பயங்கரவாதத்தின் வேர்களை கண்டறிவது அவசியமானது. அதேநேரம் இலங்கை அரசானது இனப்பிரச்சினையை பயங்கரவாதமாகப் பார்க்காமல், வரலாற்று கண்ணோட்டத்துடன் நோக்க வேண்டும். நாங்கள் அரசபயங்கரவாத்திற்கு எதிராகவும், பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்று கூறப்படுவதற்கும் எதிராக கிளர்ச்சியுற்றோம். அதே நேரம், உலகில் இலங்கை அரசு மட்டுமே தனது பிரசைகள் மீது குண்டு வீசுகிறது என்ற கொடூரத்தையும் பகிரங்கப் படுத்த வேண்டியவர்களாக உள்ளோம்."
அதே நேரம் அமெரிக்க ராஜாங்க அமைச்சரிணி கிளாரியம்மா மகிந்தவுடன் பறைஞ்சது பற்றி
மீனகம் (http://meenagam.net/me/?p=2614) போட்டிருக்கார்.
"இத்தொலைபேசி பேச்சுவார்த்தையின்போது பொதுமக்கள் பாதுகாப்பு முதன்மையானதென ஹிலாரி கிளின்ரன் மஹிந்த ராஜபக்ஷவிடம் தெரிவித்துள்ளார்.
பயங்கரவாதம் இல்லாதொழிக்கப்பட்டதன் பின்னர் நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்த முடியும் என ஹிலாரி குறிப்பிட்டுள்ளார் என பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளத்தில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
அண்மையில், இலங்கை விவகாரம் தொடர்பில் இந்திய வெளியுறவுச் செயலர் சிவ்சங்கர் மேனன் ஹிலாரியுடன் கலந்துரையாடியமை குறிப்பிடத்தக்கது.
சரி இனி விஷயத்துக்கு வருவோம். ஈழத்தில் நடப்பது இனவிடுதலைப்போராட்டம்னு நீங்களும் நாங்களும் குய்யோ முறையோன்னு கூக்குரல் இட்டுக்கிட்டிருக்கோம்.நீ த்மிழ் ப்ளொட்டான்னு ஒருவர் கேக்குரார். புலியைக்காட்டி மக்களை அட்டெண்ட்ஸ் போட வைக்காதேன்னு இன்னொருவர் சொல்றார். பயங்கர வாதம் ஒழிக்கப்பட்ட பின்னர்னு லசந்தவும் கிளாரியும் பேசிக்கிராங்க.
லசந்த சொல்லுராரே இனப்பிரச்சினையை பயங்கரவாதனு பார்க்காம அப்பிடின்னு நீங்க கேட்கலாம். நம்ம மக்களுக்கு இருக்கும் பிரச்சினை இனப்பிரச்சினைன்னு அவர் ஏற்றுக்கொண்டாலும் புலிகளைப் பிரிவினைவாத பயங்கர வாதிகள்னு சொல்வதை கவனிக்கணும்.
அதாவது ஈழத்தமிழ் மக்களாகிய நாங்க நமக்குள்ளேயே பிரிவினைப்பட்டு பிரிச்சிப்பார்த்து பேதமைப்பட்டு சின்னச்சின்ன கும்பிகளா நிக்கிறோம்.
புலிகள் வாழ்கன்னு ஒரு கோஷம், புலிகள் ஒழிகன்னு ஒரு கோஷம் , புரட்சிகரம் பிழைப்புவாதம்னு டோலர்கள் ஒரு புறம் , முட்டையில மயிர் புடுங்கி அதிலயும் கோலம் போடுற சிறிரங்கசாமிகள் மறு புறம்.
தமிழர்கள் என்றால் புலிகள்தான்னு விதண்டாவாதம் புரிபவர்கள் ஒரு புறம் , புலிகளும் தமிழர்தான் தமிழர் எல்லாம் புலிகள் அல்ல என்பவர் மறு புறம்.
இப்டியே புரட்சி செய்து புரட்சி செய்து இன்றைக்கு நாயை விடக்கேவலமா நடு ரோட்டில அடிச்சிப்போட்டாலும் ஏன்னு கேட்க நாதியில்லாம ஒரு இனம்னா அது நாங்க தான்.
இந்தியா உதவி செய்யும்னு சொன்னவங்க இந்தியாவே வந்து அடிக்கும்போது எங்கே போனார்களோ தெரியவில்லை. ஒபாமாவும் கிளரிம்மாவும் வந்து கை கொடுப்பாங்கன்னு வெள்ளை மாளிகைக்குப் படையெடுத்தாங்க..
இப்ப அவங்களே படை கொண்டு வந்து புலிகள் தடுத்து வைத்திருக்கும் மக்களை மீட்கப்போகின்றார்களாம்.
புலிகள் ஒழியும் வரை காத்திருக்கிறார்கள் உலக நாடுகள். அவர்கள் தெளிவாக மிகத் தெளிவாகச் சொல்லிவிட்டார்கள். இதெல்லாம் ஏம்பா சொல்லிரேன்னு கேட்கலாம். சொல்லத் தோணியது .சொல்ல்லுகிறேன்.
எங்களைப்பற்றி யார் யாரோ பேசுகின்றார்கள். முடிவுகள் எடுக்கின்றார்கள். அன்று ராஜீவிலிருந்து இன்று கிளாரிம்மா வரை.
இதுவரை நாங்கள் செய்து வந்ததெல்லாம் சரியில்லை. அதுதான் இத்தனை பின்னடைவு. தன்னை நம்பாமல் தன் மக்களை நம்பாமல் ஆயுதத்தையும் அதிகாரத்தையும் நம்பியதால் வந்த பின்னடைவு.
தனக்கென்று தனி வழியமைக்காது வால் பிடித்ததால் வந்த பின்னடைவு.
உலக ஒழுங்கை உள்வாங்கி இராஜந்திரமில்லாது தான் தோன்றிப்போக்கில் போனதால் வந்த பின்னடைவு.
எல்லாவற்றிற்கும் மேலால் தன்னவனையே கருங்காலியென்று பிரித்து வைத்ததால் வந்த பின்னடைவு.
இவ்வளவு சொல்கின்றாயே நீயெங்கே என்றால் ஏதாவது ஒரு கும்பியில்.
கும்பிகள் ஒன்று சேர்ந்து மலையாகும் கனவுகளுடன்.
இழுத்தால் மலை போனால் ஏதோவொன்று.
No comments:
Post a Comment