Tuesday, March 3, 2009

குறொஸ் பயர் அல்லது இந்துப் புலிகள்


நண்பன் ஒருவனுடன் பேசிக்கொண்டிருந்தேன். கதை லாகூரில் நடைபெற்ற சிறீலங்கா கிரிக்கெட் வீரர்களின் மீதான தாக்குதல் பற்றித் திரும்பியது. என்ன நோக்கமாக இருக்கும் என்று நண்பன் வினாவினான். தாக்குதலை நடாத்தியது அவர்கள் எண்ணுவதைப்போல லக்சர்-இ-தொய்பாவாக இருந்தால் அடிப்படை வாத முஸ்லீம்களின் விருப்பமான மேலைத்தேய கலாச்சாரச் சின்னங்களை புறந்தள்ளும் எண்ணத்தில் கிரிக்கெட்டையும் தடை செய்ய எண்னியிருக்கலாம் என்றேன்.

அவன் சிரித்து விட்டுச் சொன்னான் "உலகம் தெரியாத பயலாய் இருக்கிறாயே " என்று.

என்னவென்று கேட்டேன். " கிரிக்கெட்டைத்தடை செய்ய வேண்டுமென்றால் முதலில் பாகிஸ்தான் வீரர்களின் மீது கைவைப்பது நியாயமாய் இருக்கும். சுலபமானதும் கூட . அப்படிச்செய்தால் விளையாடுவதற்குப்பயப்படுவதைப்போல் கிரிக்கெட்டைப் பர்ப்பதற்கும் இவர்களை (தாலிபான்களை) மீறிச் செல்வதற்கு யாருக்கும் துணிபு வராது. விளையாடுவதற்கோ பார்ப்பதற்கோ யாரும் இல்லையென்றால் பாகிஸ்தான் கிரிக்கெட் உலகத்தில் இருந்து மறக்கடிக்கப்பட்டு விடும்.... " சொல்லிவிட்டு சிறிது நிறுத்தினான்.

அதுதானே .. என்பதைப்போல அவனைப்பார்த்தேன். அவன் சொல்வது சரியெனப்பட்டது. அப்போ என்ன காரணம். அவன் சொல்லும் வரை பேசாது இருந்தேன்.

"யாருக்கு இதனால் இலாபம் இருக்கக்கூடும்.." கேட்டு விட்டு நிறுத்தினான். " நிச்சயமாகப் புலிகளுக்கு கிடையாது. மேலும் அவர்கள் இருக்கும் சண்டை மும்முரத்தில் தங்களைக்காத்துக்கொள்ளவே நேரம் போதாதிருக்கின்றது." ..ம் ..கொட்டியபடி கேட்டுக்கொண்டிருந்தேன்.

" சிறீ லங்கா கூட தன் நாட்டு வீரர்களுக்கு ஆபத்து ஏற்பட்டும் அடக்கி வாசிக்கின்றது..ஏதோ தர்மத்துக்கும் நீதிக்கும் கேடு வந்தது போலவும் யாரும் இப்படி நடந்து கொள்வது சரியில்லை என்பது போலவும் மென்மையாக சொல்கின்றது.."

அவன் கூறி முடிக்க முன்னர் இடை மறித்தேன் "பாகிஸ்தான் கொடுக்கின்ற ஆயுதங்கள் ராஜபக்ஸேக்கு பிரதானம் என்பதால் ...பாகிஸ்தானைப் பார்த்து பாய்ந்து குதறமுடியாது ..ஈனஸ்வரத்தில் குரைத்து வாலை ஆட்டுகின்றது" என்றேன்.

" அது மட்டுமல்ல இன்று சிறீலங்காவில் ஒரு இனக்கலவரமே வெடித்திருக்கும் ..இலங்கையில் இருக்கும் இஸ்லாமியருக்கு எதிராக.. 13 இரானுவம் இறந்ததற்கே இனக்கலவரம் உருவாக்கியவர்கள் அல்லவா?" என்றவன் தொடர்ந்தான்.

"எனது சந்தேகம் எல்லாம் இந்தியா மீது தான் " என்று விட்டு இடை நிறுத்தினான்.

"என்னது .." ஆச்சரியத்தில் நம்பமுடியாது கத்தியே விட்டேன். சம்பவம் நடந்தது பாகிஸ்தானில் ... அகப்பட்டுக்கொண்டவர்கள் சிறீலங்கன் கிறிக்கெட்டர்கள். இதில் இந்தியா எங்கே வந்தது.

நண்பன் தொடர்ந்தான். "இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இருப்பது நீண்ட காலப்பகை.. அடிப்படை வாதம் மிக ஊறியிருக்கும் நாடு பாகிஸ்தான் ..அதன் நம்பகத்தன்மை மிக மோசமாக இருந்தாலும் பயங்கர வாதத்திற்கு எதிரான தோழமை நாடுகளின் முன்னணியில் அமெரிக்காவால் அரவணைத்துச் செல்லப்படுவது.... இதையே சாதகமாக வைத்து புஸ்ஸின் ஆட்சிக்காலத்தில் மும்பாய்த் தாக்குதல் உட்பட பல அத்து மீறல்களைச் செய்து இந்தியாவின் கோபத்தை கிளறிவிட்டிருந்தது.

புஸ் இருக்கும் வரை இந்தியாவால் பாகிஸ்தானிற்கு எதிராக எதையுமே செய்யமுடியவில்லை. அனைத்துக் காரியங்களிலும் பாகிஸ்தானை அமெரிக்கா காபந்து செய்து கொண்டிருந்தது.

ஆனால் அமெரிக்க அதிகாரம் மாறியதில் இருந்து பாகிஸ்தான் மீதான கண்ணோட்டமும் முழுவதுமாய் இல்லாவிட்டாலும் சிறிது மாறியிருக்கின்றது. ஒபாமா லாகானைச் சற்று இறுகப்பிடித்திருக்கின்றார். இத்தனை காலமும் ஆப்கானிஸ்தானிலிருக்கும் தாலிபான்களை ஒடுக்கமுடியாது இருப்பதற்கு பாகிஸ்தானின் பின் புலத்தில் இருந்து கிடைக்கும் உதவிகள் காரணம் என்று நினைக்கின்றார். அதனாலேயே பாகிஸ்தான் ஸ்வாற் பள்ளத்தாக்கெங்கும் தன்னிச்சையாக குண்டுகளை அமெரிக்கா பொழிந்து தள்ளுகின்றது.

இப்போது ஏதாவது இசகு பிசகாகச் செய்தால் அமெரிக்காவின் கோபத்துக்கு ஆளாக வேண்டும் என்பது பாகிஸ்தானுக்கும் நன்கு தெரிந்திருக்கின்றது. அதனாலேயே தன்னாலான உதவிகளை அமெரிக்கா கேட்காமலும் செய்யவும் தயாராயிருக்கின்றது. அமெரிக்காவின் நல்லெண்ணத்தை இழக்க பாகிஸ்தான் தயாராக இல்லை" சொல்லி விட்டு நிறுத்தினான்.

"எல்லாம் சரிதான் இதில் இந்தியா எங்கே வந்தது" அவன் தொடர்ந்து சொல்லவேண்டி கேள்வியொன்றை வீசினேன்.

என்னை நிமிர்ந்து பார்த்து விட்டுத் தொடர்ந்தான்... " பாகிஸ்தானின் இந்த சங்கடத்தை இந்தியாவும் உணர்ந்திருக்கின்றது. தனக்கெதிரான தாக்குதல்களுக்குப் பழிவாங்க ஒரு சந்தர்ப்பத்தைத் தேடிக்கொண்டிருந்தது. இந்தியாவின் பிராந்திய வல்லரசுக்கனவுக்கு பாகிஸ்தான் இன்று இடைஞ்சலாக இருக்கின்றது. இந்தியாவின் நட்பு நாடு எதிரி நாடு எதையும் விடாமல் தேடிப்போய் உதவி செய்கின்றது. அந்த வகை உதவி பெறும் நாடு ஒன்று தான் சிறீலங்கா. பாகிஸ்தானின் சிறீலங்காவிற்கான உதவியை நிறுத்தவும் இரண்டு நாடுகளையும் எதிராளியாக்கவும் ஒரே கல்லில் இரண்டு மாங்காய்." சொல்லி விட்டு என்னைப்பார்த்தான்.

" நீ சொல்வது ஒரு விதத்தில் சரிதான் ..அதுதான் இந்தியாவும் அளவு கணக்கில்லாமல் சிறீலங்காவிற்கு ஆயுத உதவி செய்கின்றதே" என்று ஒரு எதிர்க்கேள்வியைப்போட்டேன்.

சிரித்து விட்டுத் தொடர்ந்தான் " நீ சொல்வது சரிதான் ஆனால் தமிழ் நாட்டில் இப்போது வலுத்து வரும் போராட்டங்களில் மக்கள் உணர்வுகளை மீறிப் போவதற்கு தோழமைக் கட்சிகளால் முடியாத நிலை . அந்த நிர்ப்பந்தத்தால் அவை ஏற்படுத்துகின்ற பிரஷர்.. மாநிலக் கட்சிகளின் உதவியில்லாது தனித்துப் போட்டியிட்டு ஆட்சி அமைக்கும் நிலை இன்று இல்லை என்பது நன்கு உணரப்பட்டிருப்பது .. இது இலங்கை விடயங்களால் ஏற்படும் பின்னடைவு என்றால் பாகிஸ்தானை மட்டந் தட்டி வைக்க வாராது வந்திருக்கும் சந்தர்ப்பம் ..ஒபாமாவின் ஆட்சி."

" ஒரு கல்லில் இரண்டு மாங்காய்" என்றேன்.

அதே தான் ... தாக்குதல் இலக்கு சிறிலங்கா கிரிக்கெட் வீரர்கள். தாக்குதல் இடம் லாகூர் பாகிஸ்தான். ஆனால் தாக்குதல் நடாத்தியவர்கள் இந்தியாவில் இருந்து விசேடமாக அனுப்பப்பட்ட பயிற்சி பெற்றவர்களா? அல்லது பணத்திற்காக வாங்கப்பட்ட கராச்சியின் கொலைகார மாபியாக் குழுவா ?என்பது தான் இன்னும் புரியவில்லை. இதில் இந்தியாவின் அதிர்ஷ்டம் ஒருவரும் பிடிபடாதது. பாகிஸ்தானின் துரதிர்ஷடமும் அதுவே தான்.

" அப்போ நான்கு பேர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்படுவது ?' எனது கேள்வி. அது பாகிஸ்தானின் நிர்ப்பந்தம் தன் மண்ணில் நடந்த பழிக்குப்பரிகாரம் செய்ய வேண்டுமே. தனக்குத் தெரியாமல் "எப்படி என்று" குழம்பிப்போய் இருக்கின்றதும். மற்றைய காரணம்...

பாகிஸ்தான் குழுக்களின் நடவடிக்கைகள் இராணுவத்திற்கோ அரசுக்கோ தெரியாமல் நடை பெறுவதில்லை. உதாரணம் மும்பாய் தாக்குதல் தடயங்களை அழிக்க பாகிஸ்தான் அரசு எடுத்த நடவடிக்கைகள் மற்றும் அல்மல் காசாப்பைக் காப்பாற்ற அல்லது பாகிஸ்தானுக்கு கொண்டு செல்ல எடுக்கும் நடவடிக்கை.

பாகிஸ்தானில் சந்தேகம் ஏற்படாமைக்கு காரணம்.. எல்லா நாடுகளும் பாகிஸ்தானுக்குச் செல்ல மறுத்தபோதும் சிறிலங்கா வலிந்து சென்று உதவியமை. மற்றது இந்தியாவை எதிர்க்கும் நோக்கில் சிறீலங்காவை தன் அணியில் சேர்க்கும் பகீரத முயற்சியில் இருப்பது.

இந்தியா மீது சந்தேகம் ஏற்படக் காரணம் .. சிறீலங்காவிலிருந்து தமிழ் நாட்டூடாக பயங்கரவாதிகள் இந்தியாவிற்குள் புகுவார்கள் என்ற அரசிய்ல்வாதிகளின் மிகச்சமீபத்தைய அறிக்கைகள்.

தாக்குதல் வெற்றி நூறுசதவீதம் எதிர்பார்க்கப்பட்டிருக்கின்றது. பாவிக்கப்பட்ட ரொக்கட் லோஞ்சர் உட்பட்ட பயங்கர ஆயுதங்கள் இதற்கு ஆதாரம். வெறும் துப்பாக்கியுடன் இருந்த 10 பொலீசாருக்கு அது அதிகம். அந்த பஸ்ஸில் மிகப்பெரிய அதிகாரிகளோ அரசியல் வாதிகளோ இருந்திருக்கவில்லை."

அவனை இடைமறித்துச் சொன்னேன் "சரி விசாரணைகள் தொடங்கியிருக்கின்றது. விரைவில் உண்மைகள் தெரிந்து விடும்."

அவன் சென்ற பிறகும் யோசித்துக் கொண்டிருந்தேன். என்ன பயங்கர உலகம் இது.

No comments:

Post a Comment