Saturday, April 4, 2009

எலிகளை வேட்டையாடுவதா? புலிகளின் வேலை.


உலகத் தமிழர்களின் தலைவர் தானைத்தலைவர் தமிழால் தமிழுணர்வால் தமிழகம் கடந்தும் வாழும் தமிழ் நெஞ்சங்களில் அரியணை போட்டு உடகார்ந்தவர் என்றெல்லாம் புகழப்பட்ட ஏற்றங் கொண்ட முதல்வரின் உள்ளத்தில் இத்தகைய நச்சினை விதைத்தவர் யார் என்பதைத் தமிழுலகம் அறிந்து கொள்ள வேண்டும்.

ஏன்? ஏன்? என்ற கேள்விக்கு இத்தனை கீழ்த்தரமான முறையில் தேர்தல் கால விளம்பரம் பெற்றுக்கொள்ளும் அளவில் தாழ்ந்து போக முடியுமா? வேண்டுமா? என்ற வினாவைத் தொடுத்திருக்கின்றது இந்தச் செய்தி.

//3-4-2009 அன்று முதல்-அமைச்சரின் கோபாலபுர இல்ல முகவரியில் பெறப்பட்ட கடிதம் ஒன்றில் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் சின்னம் அச்சடிக்கப்பட்ட தாளில் அவரது உயிருக்கு அச்சுறுத்தி மிரட்டல் விடப்பட்டு உள்ளது. //


ஈழத்தமிழ் மக்களின் உணர்வுகள் தம் விடுதலையை வேண்டி எடுத்த முடிவு அவர்களின் சுதந்திர வேட்கையின் பாற்பட்டது. அரசியல் கூத்துக்களோ கேலிகளோ தில்லு முல்லுகளுக்கோ வேண்டி அவர்கள் இத்தனை இலட்சம் உயிர்களைக்காவு கொடுக்கவில்லை. 60 வருடத்திற்கும் (1948இன் பின்) மேலான
இன ஒடுக்கு முறையை அரசியல் ரீதியாக அகிம்சை ரீதியாக முகங்கொடுத்தும் தீர்க்க முடியாது போன பின்னரே ஆயுத ரீதியான போராட்டத்தை முன்னெடுத்தவர்கள். அவர்கள் ஆயுதத்தின் மீது காதல் கொண்டவர்களோ கொலை செய்வதைதொழிலாகக் கொண்டவர்களோ அல்ல. சுதந்திர உணர்வும் தன்மான உணர்வும் (தமிழகத்தையும் விட) மீதூரப்பெற்றவர்கள்.

தங்கள் யுத்தத்தை தங்களின் மனவலிமை கொண்டு முன்னெடுத்தவர்கள். தங்களின் வளங்களை தங்கள் மக்களை நம்பி முன்னெடுத்தவர்கள். இன்றும் அதனையே செய்து கொண்டிருப்பவர்கள். இந்தியா முதல் எத்தனையோ நாடுகளின் நேரடி மறைமுக சூழ்ச்சிகளையும் ஆயுத உதவிகளையும் எதிர்த்துப்போராடுபவர்கள்.

இடையில் இந்தியச் சூழ்ச்சியில் தடம் மாறி துயர்பட்டு மீண்டு வந்தவர்கள். இந்தியாவின் கள்ளம் உணர்ந்து விலகிநிற்பவர்கள். இந்தியாவிடம் எதற்காகவும் கையேந்துவதை இன்று வெறுப்பவர்கள். இந்தியா எதிரியாக வந்தாலும் தயங்காது எதிர்த்துப் போராடக்கங்கணம் கட்டிக்கொண்டிருப்பவர்கள். சுதந்திர தாகம் கொண்டவர்களேயன்றி சுயநல அரசியல் செய்பவர்கள் அல்ல.

இது தான் யதார்த்தம் .இது தான் உண்மை . அன்று சில தமிழக அரசியல் வாதிகள் கொடுத்த சில நூறு இலட்சம் ரூபாய்களைத் தவிர தாய்த்தமிழகம் என்று சொல்லிக்கொள்பவர்களிடம் இருந்து தார்மீக உணர்வைத்தவிர வேறு எதையும் இம்மாபெரும் போராட்டம் பெற்றுக்கொள்ளவும் இல்லை. கேட்டதும் இல்லை.

உங்கள் மனச்சாட்சியைத் தொட்டுச் சொல்லுங்கள். உங்கள் தமிழீழ உறவுகளின் 30 ஆண்டுகளுக்கும் மேலான ஆயுதப் போராட்டத்தில் எத்தனை மில்லியன் ரூபாய்கள் ஆயுதமாகவும் எத்தனை இலட்சம் மனித உயிர்கள் பலியாகவும் எத்தனை கோடி கோடி மனித உழைப்புகள் ஆகுதியாகக் கொட்டப்பட்டிருக்கும் இப்போராட்டத்தில் தாய்த்தமிழகத்தின் பங்களிப்பு எத்தனை சத விகிதம்? எத்தனை மில்லியன் ரூபாய்கள் தாய்த்தமிழக மக்களிடம் இருந்து வந்தது? எத்தனை வீத மனித உழைப்பு கொட்டப்பட்டது?

பதில் உங்களுக்கே தெரியும். பல கோடிகளைக்கொட்டி உருவாக்கப்படும் புனித கோவிலில் சில சில்லறைகளை வீசி எறிந்த தமிழக அரசியல்வாதிகளும் உறவுகளும் வாய் கிழியக் கதைப்பதில் மட்டும் குறைச்சல் இல்லை.

உதவி செய்யவேண்டுமென்பது என்ன தேவை? என்று சிலர் முணுமுணுக்கக் கூடும். அப்படி எந்தத் தேவையும் இல்லை. அதே போல ஈழப்பிரச்சினையில் கருத்துச் சொல்வதற்கோ அடாவடி செய்வதற்கோ கூட உங்களுக்கு எந்த உரிமையும் கிடையாது. பொங்கி எழுந்த பொது மக்களின் தார்மீக ஆதரவைக்கூட மனிதச்சங்கிலியென்றும் இராஜிநாமா என்றும் நீர்த்துப்போக வைத்த அரசியல் அராஜகங்களை நாம் அறிவோம்.

ஈழத்தமிழர் ஆதரவாக எழுந்த உணர்வினை அரசியல் வாக்காக மாற்ற கருணாநிதி எடுக்கும் குயுக்தி மிக்க தந்திரம் என்பதற்கப்பால் இதை நாம் பெரிதாக ஒன்றும் பார்க்கவில்லை. ஜெயலலிதாவும் இதே போல ஒரு காகித நாடகம் போட்டது இப்போது நினைவிற்கு வருகின்றது. குள்ள நரித்தந்திரத்தில் தமிழக அரசியல்வாதிகளை அடித்துக்கொள்ள ஆள் கிடையாது.

அதே அரசியல்வாதிகளைத் " தலைவா "என்று கொண்டாடுவதிலும் அடிக்கும் கொள்ளையை ஊக்குவிப்பதிலும் தொடர்ந்து அவர்களைத் தெரிவு செய்வதிலும் சிந்தனையற்ற முட்டாள்தனம்மிக்க விடாக்கண்டன் கொடாக்கண்டன் போல் செயல் செய்வதில் தமிழக மக்களை விஞ்சுவார் யாருமில்லை இவ்வுலகத்தில்.

வட இந்தியர்களாலும் சிங்களவர்களாலும் "கோமாளி" மாநிலம் என்று அழைக்கப்படும் நிலைக்கு தமிழகத்தைக்கொண்டு வந்தது யார் என்பதை மனச்சாட்சியுள்ளவர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

சிங்கங்களை(சிங்களவன) எதிர்த்துத்தான் புலிகள் போராடுகின்றார்கள். நாங்கள் வரப்போகின்ற 22 ஆம் நூற்றாண்டு பற்றிக்கனவு கண்டு கொண்டிருக்கின்றோம். சுதந்திர ஈழத்தின் உருவாக்கம் பற்றி திட்டங்கள் போட்டுக் கொண்டிருக்கின்றோம்.


கோமாளிக்கூத்துகள் ஆடுவதற்கு எங்களுக்கு நேரமில்லை. உண்ட சோறு செரிப்பதற்கு ஊதாரித்தனமாக வார்த்தைகளை கொட்டுபவர்கள் அல்ல நாங்கள்.

எலிகளைப்பிடிப்பது புலிகள் (தமிழ் ஈழ மக்கள்) வேலையல்ல.அதற்கு எங்களிடம் மலம் தின்னும் காகங்கள் (ஆனந்தசங்கரி ,டக்ளஸ்,கருணா) உண்டு.

எல்லோராலும் (எங்களாலும் தான்) மதிக்கப்பட்ட முதல்வரின் மேல் இருந்த இறுதிப் பாச இழையும் அறுந்துபோனதுதான் சோகம். மதிப்பையும் மரியாதையையும் செயல்கள் தான் உருவாக்கும். எட்டு வருடம் உலகை ஆட்டிப்படைத்த புஷ்ஷிற்கு ஒரு செருப்பு. 80 வருடம் தமிழை ஆட்டிப்படத்த முதல்வருக்கு ஒரு .....








Wednesday, April 1, 2009

இலங்கையில் நடைபெறுவது வெளிப்படையான இனவெறிப் போர்: இந்திய எழுத்தாளர் அருந்ததி ரோய்

இலங்கையில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருப்பது, மக்களின் பார்வைக்கு படாமல் திறமையாக மறைக்கப்படுகின்ற, வெட்கமற்ற முறையில் வெளிப்படையாக நடத்தப்படுகின்ற இனவெறிப் போர் என இந்தியாவின் புகழ்பெற்ற எழுத்தாளர்களில் ஒருவரான அருந்ததி ரோய் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்தியாவின் தேசிய ஆங்கில நாளிதழான 'ரைம்ஸ் ஒஃப் இந்தியா' வுக்கு எழுதிய கட்டுரையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

உலக அளவில் இலக்கியத்துக்காக அளிக்கப்படும் முக்கிய விருதுகளில் ஒன்றான 'புக்கர் பரிசு' பெற்ற 'த கொட் ஓஃப் ஸ்மோல் திங்ஸ்' எனும் புதினத்தை எழுதியவர் அருந்ததி ரோய்.

இலக்கியப் பணிகளுக்கு இடையே சமூகத்தின் தீவிரப் பிரச்சினைகள் குறித்து பேசுவதுடன் அவற்றுக்கு எதிராக களமிறங்கி சமூக சேவையிலும் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் அவரின் கட்டுரையை இங்கு தமிழில் தருகிறோம்:

இலங்கையில் நிகழ்ந்து கொண்டிருக்கும் பயங்கரத்துக்கு, சூழ்ந்துள்ள மௌனமே காரணம். அங்கே என்ன நடக்கிறது என்பதைப் பற்றி, இந்தியாவில் உள்ள முதன்மையான செய்தி ஏடுகளிலும், தொலைக்காட்சிகளிலும் சரி, அனைத்துலக செய்தி ஏடுகளிலும் சரி ஏறக்குறைய செய்திகளே வெளிவருவதில்லை. ஏன் இப்படி இருக்கிறது என்பது ஆழ்ந்த கவலை அளிக்கும் விடயமாகும்.

இலங்கையில் இருந்து கசிந்து வரும் சிறிதளவு தகவல்களை வைத்துப் பார்க்கும்போது, நாட்டில் ஜனநாயகத்தின் அடையாளம் ஏதேனும் தென்பட்டால் அதனைத் தகர்ப்பதற்கும், அப்பாவித் தமிழ் மக்களுக்கு எதிராக சொல்ல முடியாத குற்றங்களை இழைப்பதற்குமே 'பயங்கரவாதத்துக்கு எதிரான போர்' என்ற பரப்புரையை சிறிலங்கா அரசு ஒரு மூடு திரையாகப் பயன்படுத்தி வருகிறது என்றே தோன்றுகிறது.

தங்களை அப்பாவிகள் என்று மெய்ப்பிக்காத வரையில், ஒவ்வொரு தமிழரும் பயங்கரவாதிதான் என்ற கோட்பாட்டின் அடிப்படையில் செயற்படும் சிறிலங்கா அரசு, அப்பாவி மக்கள் உள்ள பகுதிகள், மருத்துவமனைகள், தங்கும் இடங்கள் மீது குண்டு வீசி அவற்றைப் போர்ப் பகுதியாக மாற்றி வருகிறது.

சண்டை நடைபெறும் பகுதியில் 2 லட்சம் அப்பாவித் தமிழ் மக்கள் சிக்கியிருப்பதாக நம்பகமான மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையே, இடம்பெயர்ந்து வரும் தமிழர்களுக்காக, வவுனியா, மன்னார் மாவட்டங்களில் பல்வேறு 'நலம் காக்கும் சிற்றூர்கள்' அமைக்கப்பட்டுள்ளதாக அரசு தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தச் சிற்றூர்கள், போர் நடைபெறும் பகுதியில் இருந்து தப்பி ஓடிவரும் அப்பாவி மக்கள் அனைவரையும் கட்டாயமாக அடைத்து வைக்கும் நடுவங்களாக இருக்கும் என்று த டெய்லி டெலிகிராப் (2009 பெப்ரவரி 14) நாளேட்டுச் செய்தி தெரிவிக்கிறது.

இவை சித்திரவதை முகாம்களுக்கு மறைமுகப் பெயரா? சிறிலங்கா அரசின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீர த டெய்லி டெலிகிராப் நாளேட்டில் பின்வருமாறு
கூறியிருக்கிறார்: பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கலாம் என்ற பெயரில் சில மாதங்களுக்கு முன்பு கொழும்பு நகரில் உள்ள அனைத்துத் தமிழர்களையும் அரசு பதிவு செய்யத் தொடங்கியது.

ஆனால், 1930-களில் ஹிட்லரின் நாசிப் படையினர் பயன்படுத்தியது போல, இது வேறு காரணங்களுக்குப் பயன்படுத்தப்படலாம். அவர்கள், அப்பாவித் தமிழ் மக்கள் அனைவரையும் பயங்கரவாதிகள் ஆகும் வாய்ப்புள்ளவர்கள் என்று முத்திரை குத்தப் போகிறார்கள் என்று குறிப்பிட்டிருக்கிறார்.

விடுதலைப் புலிகளைத் 'துடைத்து எறிய வேண்டும்' என்பதை சிறிலங்கா அரசு அறிவிக்கப்பட்ட குறிக்கோளாகக் கொண்டிருப்பதைப் பார்க்கும்போது, அப்பாவி மக்களும், 'பயங்கரவாதிகளும்' வீழ்ந்து கொண்டிருப்பது, சிறிலங்கா அரசு இனப் படுகொலையை நடத்தும் விளிம்பில் இருப்பதன் அறிகுறியாகத் தோன்றுகிறது.

ஏற்கெனவே பல ஆயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்று ஐ.நா. மதிப்பீடு ஒன்று தெரிவிக்கிறது. மேலும் பல்லாயிரம் பேர் படுகாயம் அடைந்துள்ளனர். நேரில் கண்ட சாட்சிகள் சிலர் வெளியிட்டுள்ள தகவல்கள் நரகத்துக் கொடுமைகளின் அனுபவச் சித்திரிப்புகளாக உள்ளன.

இலங்கையில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருப்பது, மக்களின் பார்வைக்குப் படாமல் திறமையாக மறைக்கப்படுகிற, வெட்கமற்ற முறையில் வெளிப்படையாக நடத்தப்படுகிற இனவெறிப் போர் என்றுதான் சொல்ல வேண்டும்.

தண்டனைக் உட்படாமல் சிறிலங்கா அரசு இந்தக் குற்றங்களை இழைத்து வருகிறது. ஆழமாக வேரோடியுள்ள இனவெறித் தப்பெண்ணங்கள்தான் இலங்கையில் தமிழர்கள்
ஒதுக்கப்படுவதற்கும், ஒடுக்கப்படுவதற்கும் வழிவகுத்துள்ளன என்பதையே இது உண்மையில் வெளிப்படுத்துகிறது. அந்த இனவெறிக்கு சமூகப் புறக்கணிப்பு, பொருளாதார முற்றுகை, கலவரம், சித்திரவதை என நீண்ட வரலாறு உண்டு.

வன்முறையற்ற அமைதி வழியிலான எதிர்ப்பாகத் தொடங்கி, பல பத்தாண்டுகளாக நடந்து வரும் உள்நாட்டுப் போரின் கொடிய தன்மைக்கான வேர்கள் இதில்தான் அடங்கியுள்ளன.

ஏன் இந்த மௌனம் இலங்கையில் இன்று சுதந்திரமாகச் செயற்படும் நாளேடுகள், தொலைக்காட்சிகளே ஏறக்குறைய இல்லை என்று இன்னொரு நேர்காணலில் மங்கள சமரவீர கூறியிருக்கிறார்.

சமுதாயத்தை 'அச்சத்தில் உறைய வைக்கிற' கொலைக் கும்பல்கள், 'வெள்ளை வேன் கடத்தல்கள்' தொடர்பாக எல்லாம் சமரவீர தொடர்ந்து பேசுகிறார். பல்வேறு பத்திரிகையாளர்கள் உட்பட எதிர்ப்புக் குரல் கொடுப்பவர்கள் கடத்தப்படுகின்றனர், படுகொலை செய்யப்படுகின்றனர்.

பத்திரிகையாளர்களைப் பேசவிடாமல் செய்வதற்கு, பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்கள், காணாமல் அடித்தல், படுகொலை செய்தல் முதலிய எல்லாவற்றையும் சிறிலங்கா அரசு பயன்படுத்துவதாக அனைத்துலக பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.

மனித குலத்துக்கு எதிரான இந்தக் குற்றங்களில் சிறிலங்கா அரசுக்கு இந்திய அரசு பொருள் உதவியும், ஆயுத உதவியும் அளித்து வருவதாக, கவலை அளிக்கிற உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

உண்மையாக இருக்கும் எனில் இது அறநெறிக்கு எதிரானது, ஏற்றுக் கொள்ள முடியாதது. மற்ற நாடுகளின் அரசுகள் என்ன செய்கின்றன? பாகிஸ்தான்? சீனா? சிறிலங்கா நிலைமைக்கு உதவி செய்ய அல்லது தீங்கு விளைவிக்க என்ன செய்கின்றன?

இலங்கையில் நடைபெறும் போர் தமிழ்நாட்டில் உணர்ச்சிக் கொந்தளிப்புக்களை ஏற்படுத்தி உள்ளது. 10-க்கும் அதிகமானோர் தீக்குளித்து இறந்துள்ளனர். அரசியல் தந்திர வெளிப்பாடுகள் சில இருந்தாலும், பெரும்பாலும் மக்களின் சீற்றமும், வேதனையும் மெய்யானவை. இது தேர்தல் சிக்கலாக மாறியிருக்கிறது.

இந்தக் கவலை இந்தியாவின் பிற பகுதிகளுக்குப் போய்ச் சேரவில்லை என்பதுதான் அசாதாரணமானது. இங்கே ஏன் இந்த மௌனம்? இந்தச் சிக்கலில் இங்கே 'வெள்ளை வான் கடத்தல்கள்' எதுவும் இல்லையே. இலங்கையில் என்ன நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்ற பாதிப்பின் அளவை வைத்துப் பார்க்கும்போது, இந்த மௌனம் மன்னிக்க முடியாதது.

முதலில் ஒரு பக்கத்துக்கு ஆதரவாகவும் பிறகு இன்னொரு பக்கத்துக்கு ஆதரவாகவும் நிலை எடுத்து பொறுப்பற்ற முறையில் பட்டும் படாமல் மேலோட்டமாகச் செயற்படும் இந்திய அரசின் நீண்ட கால வரலாற்றைப் பார்க்கும்போது இந்த மௌனம் மிகவும் மன்னிக்க முடியாதது. நான் உட்பட, நம்மில் பலரும், இது தொடர்பாக முன்பே குரல் கொடுத்திருக்க வேண்டும். ஆனால் போர் பற்றிய தகவல்கள் சரியாகக் கிடைக்காததே அதற்குக் காரணம்.

படுகொலைகள் தொடர்கின்றன. பல்லாயிரக்கணக்கான மக்கள் சித்திரவதை முகாம்களில் அடைக்கப்படுகிறார்கள். 2 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பட்டினிக் கொடுமையை எதிர்நோக்கி உள்ளனர். ஓர் இனப் படுகொலை நிகழ்வதற்குக் காத்திருக்கிறது. இந்த நிலையில் இந்த மாபெரும் நாட்டில் ஏன் இந்த சாவு அமைதி? இது மாபெரும் மனிதப்பேரழிவுத் துன்பம். காலம் கடப்பதற்கு முன் உலகம் இப்போதே தலையிட வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Monday, March 23, 2009

மிருகவதை மனித வதை- வருண்காந்தி யார் பிள்ளை?


உத்தரப்பிரதேசமாநிலம் பிலிபிட் தொகுதியில் பா.ஜ.க வேட்பாளராக ¨ßjRlThÓs[ YÚi Lôk§, úRoRp ©WNôWd áhPj§p úTÑmúTôÕ Øv#mLÞdÏ G§Wô] LÚjûR ùR¬®jRRôL TWYXôL ×Lôo GÝkÕ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிலபல அரசியல் நெருக்குதல்களால் (அவருடைய கருத்து) தேர்தல் ஆணையமும் வருண் காந்தியை பா.ஜ.கட்சி சார்பில் போட்டியில் நிறுத்துவதைத் தவிர்க்கும் படி அக்கட்சிக்கு ஆலோசனை கூறியுள்ளது.

பா.ஜ.கட்சித்தலைகளெல்லாம் ஒன்று கூடி அதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று வம்படியாக அறிவித்து இந்தியா இந்துப்பயங்கரவாதிகளுக்கு மட்டுமே சொந்தமென்று மீண்டும் நிரூபித்துள்ளனர்.

இதே பிலிபிட் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மேனகா காந்தி மிருக வதைக்கெதிராக மிகப்பெரிய போராட்டத்தை எடுத்திருந்தார் அவர் அமைச்சராய் இருந்தபோது.. எமர்ஜென்ஸிக்காலத்தின் போது தன் கணவர் சஞ்சே காந்தியால் எடுக்கப்பட்ட உயிர் வதைகளுக்கு எதிரான பிராயச்சித்தமாக அவர் அதைக்கருதியிருக்கக் கூடும். சஞ்சேயின் அகால மரணமும் தெய்வம் நின்றறுக்கும் என்ற பொன்மொழியும் அறிந்ததனால் கூட தன் வம்சத்தைக்காக்கும் பணியாக மேனகா காந்தி காட்டில் வாழ்ந்த விலங்களுக்கு பாதுகாப்பை வலியுறித்தியிருக்கக் கூடும்.

இதே நேரம் அகன்ற பாரதக்கனவைக் கட்டி மேய்க்க வந்த மூப்பர் ராஜீவ் காந்தியோ ஈழத்தில் காலூன்ற போட்ட சோத்துப்பருக்கைகள் செரிக்குமுன்னரே அவர்களைக்கொன்று போட்ட வரலாற்றின் நாயகனானார்.

சந்தண மாலைகள் போட்ட கரங்களின் வாசனை போகுமுன்னரே பாரத டாங்கிகளின் செயின் புளொக்குகளில் உடைலைச் சிதைத்து உயிரை விட்டனர் அவ்வப்பாவி மக்கள். பூரண கும்பம் வைத்து வணங்கி வரவேற்ற கரங்கள் இறங்குமுன்னரே சிரங்கள் கழுத்திலிருந்து இறங்கி சிதறி உயிரை விட்டனர் அவ்வேதிலி மக்கள்.

இந்திய எமேர்ஜென்ஸிக்காலத்தில் சஞ்ஜே சிதறுண்டுபோனது போல் ஈழத்தின் எமேர்ஜென்ஸியில் மேய்ப்பரும் உடல் சிதறிப்போனார்.

மேய்ப்பர் உழுத வயல் வெளிகள் அகன்ற பாரதக்கனவுகளின் எல்லைகளை இன்று வன்னியின் தொலைவு வரை நீட்டிக்கொண்டிருக்கின்றது.

அதே சந்தண மாலை போட்ட மக்களும் கும்பம் வைத்து வரவேற்ற மக்களும் இப்போதும் தம் இரத்தத்தைப் பாச்சி வன்னிக்காடுகளை வள்மாக்குகின்றார்கள். காடுகளில் வாழ்ந்த விலங்குகளைக்காத்த எந்தக் கருணையும் காடுகளில் உரமாகும் மனிதர்களைக்காக்க வரவேயில்லை.

இதே நேரம் வருண் காந்தியின் மீது மற்றுமொரு பரபரப்புக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.


//வருண் காந்தி இஸ்லாமியர்களையும், சீக்கியர்களையும் இழிவுபடுத்திப் பேசியதாக இன்னொரு புகார் தேர்தல் ஆணையத்திற்கு வந்துள்ளது. இந்தப் புகாரையும், முதல் புகாரைக் கொடுத்த பிலிபித் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் வி.எம்.சிங்கே கொடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தாக்கல் செய்துள்ள சிடியில், இந்த தொகுதியில் ஒரு பைத்தியக்கார சீக்கியர் (வி.எம்.சிங்) போட்டியிடுகிறார். அவர் ஒரு முஸ்லிம் ஏஜெண்ட். அவரை ஆதரிக்கும் இந்துக்கள், இந்து மதத்தின் மாபெரும் துரோகிகள்.

இதுபோல், ரியாஸ் அகமது என்பவரும் போட்டியிடுகிறார். அவர் அப்பட்டமான பாகிஸ்தானி. இத்தகையவர்களை பிடித்து கருத்தடை ஆபரேஷன் செய்துவிட வேண்டும்.

எனக்கு முஸ்லிம்களின் ஓட்டு தேவையில்லை. இந்துக்கள் ஒன்றுபட வேண்டும். இந்துக்கள் ஓட்டு போடாமல் இருப்பது, மதத்துக்கு துரோகம் செய்வது போன்றது. இந்து ராணுவத்தை அமைத்து, துப்பாக்கி உரிமம் கொடுப்பேன் என்று பேசியுள்ளாராம் வருண் காந்தி. //

மனிதர்களை வதைக்கும் பண்பு பரம்பரை ஜீன் கடத்தலாய் இருக்கக் கூடும். பாவம் அவர் தான் என்ன செய்வார்.

இதே நேரம் சோனியா காந்தி "TVeLWYôRjûR Lôe¡Wv Lh£Vôp UhÓúU A¥úVôÓ J¯dL Ø¥Ùm'"UdL[ûYj úRoRûXùVôh¥ LoSôPL Lôe¡Wv Lh£«u úRoRp ©WNôWjûR §eLs¡ZûU RôYQùLúW«p ùRôPe¡ûYjதபோது அவர் இவ்வாறு á±யுள்ளார்.


திருடனாய்ப்பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்பது எவ்வளவு உண்மையோ அவ்வளவு உண்மை அவர் கூறுவதில் உண்டு. பயங்கரவாதத்தை உருவாக்குபவர்கள் தானே அதை நிறுத்தவும் ஒழிக்கவும் முடியும்.

வருண் காந்தியின் இந்தப் பேச்சிற்கு மேய்ப்பரின் புதல்வி ப்ரியங்கா இவ்வாறு அறிவுரை கூறியுள்ளார்.
"TLYj ¸ûRûV Øû\VôLl T¥jÕ ×¬kÕ ùLôiÓ ©\Ï ùTôÕdáhPeL°p úTNÜm Guß YÚi Lôk§dÏ ©¬VeLô A±ÜûW á±Ùs[ôo."

இன்றைய ஈழத்தின் அவலத்திற்கு இராஜீவ்வின் மரணமே காரணம் எனக்கூறிக்கொள்பவர்கள் காரியமாற்றுபவர்கள் பகவத் கீதையின் இந்த வாசகத்தையும் தெரிந்து கொள்ள வேண்டும்.

"கடமையைச் செய் பலனை எதிர்பார்க்காதே"

தன் கடமையைச் செய்த தனுவைப் போல பல தனுக்களை நீங்கள் உருவாக்கிக் கொண்டிருக்கின்றீர்கள்.

இப்போ சொல்லுங்கள் வருண் காந்தி யார் பிள்ளை?

Saturday, March 21, 2009

புலிகளின் தோல்வி தமிழீழத்தின் விடியலா?


எனக்குள் இந்தக்கேள்வி இப்போது அடிக்கடி தோன்றிக்கொண்டிருக்கின்றது. தொடர்ந்து மூன்றாம் அணியைத் தேடிய புற்றீசல் பதிவுகளைப்பார்க்குந் தோறும் இப்படியான ஒரு நம்பிக்கையை இவர்கள் கொண்டுள்ளார்களோ என்றே எண்ணத் தோன்றுகின்றது.

மனித மேன்மைகளை வெளிக்கொண்டுவருவதற்குப்பதிலாக வலிமையான அடக்கு முறைக்குள் அதனைக் கட்டிப்போட்ட பெருமை மார்க்ஸியத்திற்கு உண்டு. சம உரிமையின் பேரால் மனித நீதியும் ஆசையும் அன்பும் பாசமும் சமூகத்தின் மிகப்பெரிய அடையாளமான குடும்ப வாழ்வும் வரைமுறையற்ற ஒடுக்கு முறக்குள் அடக்கப்பட்டதே இன்று சிதறுண்டு கிடக்கும் சோவியத்தின் வரலாறாக இருக்கின்றது.

1917 இல் பெரு வெளிச்சமாக அடையாளம் காணப்பட்ட சமதர்ம சமுதாயத்தின் எழுச்சி எழுபது வருட கால இடைவெளியில் தன் சாயம் வெளிக்க காலாவதியாகிப்போனது. மனிதர் எப்போதும் தம் சிந்தனையால் ஆளுமையால் செயலால் வலிமையால் ஒருவருக்கொருவர் சமனானவர்கள் அல்ல என்பதே இதன் காரணமாயிருக்கக் கூடும். இப்படிப்பட்டவர்களின் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளைச் சரிக்கட்டும் முயற்சியுடன் இணைக்கும் கோட்பாடு எப்போதும் வலிமையாய் இருந்து விட முடியாது.

இதையும் மீறிய தாழ்வில் தாழ்ச்சியும் உயர்வில் உயர்ச்சியும் பார்க்கும் மனோபாவத்தை மனித காருண்யத்தை பிரயோகித்து நிவர்த்திக்க முடியும் என்பதே நவீன மனிதவியலின் நீட்சியாயிருக்க வேண்டும்.

இதன் முதற்படியாக மனித இருப்பைக் கேள்விக்குறியாக்க முயலும் பொருள் முதல் வாதத்தின் அகோர எழுச்சியான உலகமயமாக்கலை முடிவுக்குக் கொண்டு வரவேண்டும். தனி மனித சுரண்டலைத் தாற்பரியமாகக் கொண்டிருக்கும் உலக மயமாக்கலுக்கு நாம் கொடுத்திருக்கும் விலை மிக அதிகமென்றே படுகின்றது.

போரையும் நோயையும் பட்டினிச்சாவையும் துரிதப்படுத்தும் இவ்வுலக ஒழுங்கினைச் சரி செய்யும் வல்லமை காலாவதியாகிப்போன கயூனிஸக் கோட்பாடுகளுக்கு கிடையாது என்பதே உண்மை.

உலகளவில் இணைக்கப்பட்டிருக்கும் ஒரு சமூக அங்கமாகிப்போன ஈழத்தமிழ் மக்களைப்பொறுத்தளவில் மார்க்ஸிய கம்யூனிஸ முன்னெடுப்புகள் மேலும் ஒரு பாரிய ஒடுக்குமுறைக்கூடான எதிர்ப்புக்கே வழி காட்டும் என்பதை இந்த மூன்றாம் அணியின் மூக்கணாங்கயிற்றைப் பற்றிச் சிந்திப்பவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

புரட்சிகரம் என்ற சொல்லடுக்கில் ஒழிந்து கொள்ளும் உங்கள் வெற்றிடங்களை மீண்டும் மீண்டும் முன்னெடுக்கும் உங்கள் மடமையை உணர்ந்து கொள்ள வேண்டும். புலியெதிர்ப்பு என்ற போர்வையில் உங்கள் இருப்பைத் தக்க வைத்துக்கொள்வது என்பதற்கப்பால் எதுவித அரசியலும் அற்றவர்கள் நீங்கள் என்பதை மக்கள் ஏலவே அறிந்து கொண்டிருக்கின்றார்கள்.

புலியெதிர்ப்பு என்பது ஒருவகை பாஸிஸ மறுப்புப்போராட்டம் என்று கூறிக்கொள்ளும் உங்களது அரசியல் உலகமயமாக்கல் மூலம் உலக மக்கள் மீது திணிக்கப்பட்டிருக்கும் பாஸிஸம் பற்றிய தெளிபையும் கொண்டிருக்காது போனதேன்.

உலகமயமாக்கல் மூலம் சிறுபான்மை மக்களின் மொழி இன அடையாளங்கள் காவு கொள்ளப்பட்டுக்கொண்டிருப்பதை புலியெதிர்ப்பு அரசியலை மட்டும் தூக்கிப்பிடிப்பதன் மூலம் எவ்வாறு நிவர்த்தி செய்யலாம் என்று நம்புகின்றீர்கள்.

புலிகளின் மறம் சார்ந்த இருப்பை விட மேலான கொடுமையுடன் இன்று ஈழ மக்களின் இருப்பையும் தனித்தன்மையையும் சிதைக்க முற்படும் சிங்கள இனவாதம், உலக மயமாக்கலின் உதவியூடாக இலங்கையைக்காவு கொள்ளவிழையும் அகன்ற பாரதக்கனவுகள் பற்றியும் அதனை எதிர்கொள்ள ஈழமக்களைத் தயார்ப்படுத்தவும் எப்போதாவது நீங்கள் முயன்றதுண்டா?

புலிகளின் இயல்புகளுடன் ஒத்துப்போகாதவனாயினும் நெருக்கியடிக்கும் சிங்கள இனவாதத்தின் கோரத்தில் இருந்து தமிழ்த்தேசியம் இதுவரை காத்துக் கொள்ளப்பட்டிருப்பது அவர்களாலேயே அன்றி காகிதப் புலிகளாலான உங்களால் அல்ல. தமிழ்த்தேசியத்தின் இருப்புக்குக் காத்திரமான கருத்தியல் உருவாக்கத்தை முன்வைக்காத உங்களைக் காகிதப்புலிகள் என்றழைப்பதில் தவறில்லை என்றே கருதுகின்றேன்.

புலிகளின் தோல்வியை இறைஞ்சி வரவேற்கின்ற உங்கள் வழி பாடுகள் அடுத்து என்ன என்ற கேள்விக்குப் பதில் சொல்ல முடியாத அந்தகாரத்தில் சிதம்பிப்போய் நிற்பதை உங்களைப்போலவே நாங்களும் அறிவோம். புலிகளுக்கு எதிரான மாற்றீடுகளைக் கண்டு பிடிக்கும் வரை உங்கள் புலியெதிர்பை உடைப்பில் போடுவதே நீங்கள் ஈழத்துத் தமிழ் மக்களுக்குச் செய்யும் மிகப்பெரிய நன்மையாகும்.

மாற்றீட்டைக் கண்டு பிடிக்க உங்களைப்போன்றவர்களுக்கு மிக நீண்ட ..நீ..ண்..ட காலம் பிடிக்கக் கூடும். அது வரை வெத்து வேட்டு வேடிக்கைகளை நிகழ்த்தாதிருங்கள். புலிகளின் பாஸிஸத்திற்கும் சிங்கள பேரினவாத பாஸிஸத்திற்கும் இடையிலுள்ள வித்தியாசம் மிகப் பெரிது. அதைப் புரிந்து கொள்ளுங்கள். அது தமிழ்த் தேசியத்தின் இருப்பு.

Tuesday, March 17, 2009

சிங்களப் பைசாசங்களும் சில தமிழ் நாய்களும்




இந்தத் தலைப்பைத் தேர்ந்தெடுத்ததே ஒரு போதாத வேளை என்றுதான் தோன்றுகின்றது. தன் வீட்டுக்குள் வந்து கொள்ளி போட்டுத் தீமூட்ட தமிழன் தானே வழி காட்டுகின்றான் என்ற போது ஏற்பட்ட ஒரு அதீத கடுப்பு.

இந்த நேரத்தில் தான் மூதூர் தயிர் சேர்த்து சாப்பிட உடலுக்கு நல்லது என்று என் பெரியாத்தா சொல்லியிருக்கின்றா. உடல் சூட்டிற்குத் தயிர் போல மூளைச்சூட்டிற்கு .. நன்றாகத் திட்டித் தீர்ப்பதுதான் ..இது நான் கண்டறிந்த வைத்தியம்.

வன்னியில இன்று புலிகள் போராடுகின்றார்கள். போராடவில்லை என்பவர்களும் மல்லுக்கட்டுகின்றார்கள் என்பதையாவது ஒத்துக்கொள்ளுகின்றார்கள். சரி யாருடன் ..எங்களுக்கு ..தமிழருக்கு... எங்களுக்குப்பிடிக்காத சிங்களவருடன் .. அல்லது எங்களைக் குட்ட நினைக்கிற சிங்களவருடன்... எப்படியிருந்தாலும் மகிழ வேண்டியது தானே நாங்கள் செய்ய வேண்டியது..

அப்படியில்லையே ... எங்களைக்குட்ட நினைப்பவரையே எங்கள் வீட்டிற்குக் கூட்டி வந்து .. வாசல் முதல் கொல்லை வரை காண்பித்து ... என்ன இது அதைப்பற்றி நெஞ்சு நிமிர்த்திய பதிவுகள் வேறு..

நீங்களும் ஒரு காலத்தில் இயக்கங்களால் வளர்க்கப்பட்டவர்கள் எனின் அப்போதைய உங்கள் நோக்கம் எங்கள் மண்ணில் இருக்கும் சிங்களவரை அவர்கள் ஊருக்கு அனுப்புவதாகத் தானே இருந்தது.

அதற்குப்பின்னால் தானே நீங்கள் ரஷ்யத்து மார்க்ஸையும் ஏங்கல்ஸையும் ரொக்ஸியையும் மற்றவர்களையும் கண்டீர்கள். அதற்கு முன்னால் உங்கள் உணர்வுகளைத் தூண்டியவர்கள் உங்கள் ஊரில் செல்லடியிலும் ஹெலி சுட்டதிலும் விழுந்து கிடந்த உங்கள் ஊர் சுப்பிரமணியமும் சோமண்ணையும் தானே.

இதைதாங்க மாட்டாமல் தானே புரட்சி செய்ய அதுதாங்க துவக்குத் தூக்க வெளிக்கிட்டீங்க. யாழ்ப்பாணத்தில இருந்து கொழும்புக்கே போகாத எத்தினை பேர் கடல் தாண்டி கோடியாக்கரை போனீர்கள். எதனால ...இதெல்லாம் நடந்தது ..உங்களுக்குள்ள இருந்த புரட்சி இரத்தம். ஒரு தமிழன் சாவதைக்கண்டும் பொறுக்க முடியாத தமிழ் இரத்தம். புல்லரிச்சது எங்களுக்கு அப்போது.

ஆண்டுகள் கடந்து சென்றது .காட்சிகளும் பலதும் மாறியது. விரும்பியும் விரும்பாமலும்... பார்வையாளர்களாய் நாங்களே இருந்தோம் கால்த்தின் சாட்சிகளாய்.

இன்றும் எம்மக்களின் மீது சிங்களப் படைகளின் அதே ஆக்கிரமிப்பு அத்து மீறல். இன்றெல்லாம் உங்களுக்கு கோபமே வருவதில்லை. கொலைக்கரங்கள் பற்றி இப்போதெல்லாம் நீங்கள் பேசுவதில்லை. எப்போதோ ஓடும் பஸ்ஸில் உங்கள் சட்டையைப் பிடித்திழுத்து முந்தி யேறியவர்களைப் பற்றியே பேசுகின்றீர்கள். போக நினைத்த பயணம் மறந்து தத்துவ விசாரம் என நினைத்து சாக்கடைக்குள் பண்டியின் நிண நாத்தத்துடன்.

செத்து விழும் உங்கள் சோதரர்கள் பெண்டுகள் எல்லாம் மறந்து ஏறத் தவறிய பஸ்ஸை நினைத்து. மல்லுக்கட்டும் இவர்களுடன் சேர்ந்து மரணிக்கும் அவர்களையும் கொல்லும் கொலைக்கரங்களை மறந்து .. மல்லுக்கட்டுவதே பிழையாக.. நீங்களும் கோடியாக்கரை போனதே அதற்காகத்தானே.

எப்படி உங்களால் எல்லாம் மறக்க முடிகின்றது. உங்கள் மார்க்ஸும் ஏங்கல்சும் இதைத்தானா சொல்லிச்சென்றார்கள்.உன் மனிதன் இறந்து வீழும் போதும் உன் பகையை மறக்காதே. அவனையும் அவனோடு சேர்ந்த உன் சோதரனையும் கொன்று போடு என்பதையா அவர்கள் சொல்லிப்போந்தார்கள். அதனால்த் தானா சோவியத்தும் தோத்துப்போனது.

புரட்சிகரம் என்ற போர்வையில் பிழைப்பு வாதம் விதைக்கும் இராயாகரன் முதல் புலியெதிர்ப்புப் போர்வையில் முட்டையில் மயிர் பொறுக்கிக் கோலம் போடும் சிறீரங்கன் வரை பதில் சொல்ல வேண்டியவர்கள் நிறையவே உண்டு.(இவர்கள் தமிழ் மணத்தில் தவறான தகவல் பரப்புவர்கள் என்பதால் பெயர் குறிக்கப்பட்டிருக்கின்றது)

இவர்களைப்போல் தன் மனிதன் இறந்து விழும் கணங்கள் உள்ளும் கதை விடத் தெரிந்தவர்கள் அனைவரும் பதில் கூற வேண்டும். (தன்னை நம்பாத பிற சக்திகளை நம்பி அடிதொழுபவர்கள் நிறையவெ நம்மிடையில் உண்டு)

தமிழ்த் தேசியத்தின் எழுச்சி இன்று பல நாட்டு அரச வர்க்க ஆதாயங்களைக் கேள்விக்குறியாக்க முனைவதும் அதனாலேயே அவை ஒருங்கிணைந்து தாக்குவதும் இன்று நடந்து கொண்டிருக்கின்றது. இந்து சமுத்திரத்தின் எங்கோ ஒரு மூலையில் கிடந்த இலங்கையின் தமிழ் மக்களைப் பற்றி உலகமே பேசிக்கொண்டிருப்பது... மக்கா நாம சாதிச்சிட்டோமடா..

ஈழத்தமிழன் ..இதுவரையில்லை இன்னும் இருப்பான்...

Sunday, March 15, 2009

புலிக்காச்சலும் பாகப்பிரிவினையும்


வன்னி மண்ணை இரத்தம் தோய்க்கும் ஈரம் காயும் முன்னர் புகலிடப் புரட்சி வாதிகளும் புத்திசாலிகளுமாய்த் தம்மை எண்ணிக்கொள்பவர்களும் ஓச்சலொழிவு இன்றி தட்டச்சி தம் பிரகடனங்களை வெளியிடத் தொடங்கிவிட்டார்கள். தேர்தல் காலக் காச்சலில் ஓடி அணி சேர்ந்து கொள்ளமுடியா சொரியல் கட்சிகள் மூன்றாம் அணியைத் தேடிக் கொள்வதைப்போல இவர்களும் மூன்றாம் அணியைத் தேடி தம்மிடையில் யுத்தம் புரியத் தொடங்கி விட்டார்கள்.

புலிகளுக்கு சேடம் இழுக்கத் தொடங்கிவிட்டது . அவர்களுடைய இறுதி இன்னும் சில வாரங்களில் நிகழ்ந்து விடும் என்று பகிரங்கமாக அறிவித்துக் கொண்டு வரிந்து கட்டிக்கொண்டு களத்தில் இறங்கிவிட்டார்கள்.

புலிஆதரவு தளத்தை இனி செல்லாக்காசெனப் புறந்தள்ளியதைப்போலவே புலியெதிர்ப்பு அணியையும் புலியெதிர்ப்பு அன்றிப் "புரட்சிகரம்" இல்லாதவர்கள் என்ற சொல்லடையால் சுலபமாக போட்டிக்களத்தில் இருந்து அகற்றி விட்டுத் தம்மைத்தாமே முன்னிலைப்படுத்தத் தொடங்கியுள்ளனர் இவர்கள்.

முன்னிலைப்படுத்துவதுடன் மூன்றாம் அணியின் மூக்கணாங்கயிற்றை கைப்பற்றும் போட்டியில் மூர்க்கத்துடன் களமிறங்கியுள்ளனர். இதே வேளை தனிப்பட்ட புரட்சிக்காரரையும் பொருட்டாய்க் கொள்ளாத தன்மையுடன் தம்மைச்சுற்றி சில பல அடிப்பொடித்தொண்டரைக் கொண்ட இக்குழுவாதிகள் அவர்கள் கூறுவதைப்போல இது வரை செய்து வந்த புரட்சிகர அரசியல்தான் என்ன?

பத்தியெழுத்தாளர்களாக தம்மை வெளிக்காட்டி சில பல "ஆஹா" பேஷ்.. பேஷ்" போன்ற ஜால்ரா கிலாகிப்புகளைப் பெற்றுக் கொண்டது தான் அவர்கள் செய்த புரட்சிகரம். போராடும் மக்களை விட்டு தப்பிப்பிழைத்து ஓடி ஒழித்து வந்து ஐரோப்பிய அமெரிக்க நாடுகளில் சில பல பியர்களைக் குடித்து மூளையைச் சூடேற்றி எழுதிக்குவித்தவை தான் அவர்களின் சொற்களில் "புரட்சி" என்பது.

வட்டுக்கோட்டைத்தீர்மானத்தின் பின் தனித்தமிழீழக் கோரிக்கையில் முளைத்தெழுந்த காளான் இயக்கங்களின் பெயர்கூட அறியாது வள்ளமேறி கோடியாக்கரையில் இறங்கியவர்கள். முட்காடாய் தமிழகம் எங்கும் முளைத்தெழுந்த காம்புகளில் முளைத்தது தான் இப்புரட்சிகர அரசியல்.

மார்க்ஸையும் ஏங்கல்ஸையும் அது வரை அறியாத தெரிந்தெடுக்கப்பட்ட இவர்களின் மூளையில் அடைக்கப்பட்டவை தான் புரட்சி கரக் கருத்துக்கள். அதுவும் தமிழ்க்கூட்டணி போன்ற சந்தர்ப்பவாத அரசியல் கட்சிகளின் இறகுச் சூட்டில் குளிர்காய்ந்த இளைஞரணியின் அங்கத்தவர்களைத் தலைவர்களாய்க் கொண்ட இவ்வியக்கங்களின் புது லேபல்களாய் வந்து சேர்ந்ததே இப்புரட்சிகர மார்க்ஸிய லெனினிய ரொக்ஸிய வாதங்களும் வாய்ப்புரட்டுகளும்.

அக்காலத்து யாழ்ப்பாணத்திய சண்முகதாசனின் கம்யூனிஸப்பாதிப்போ சீன மாவோவிஸ வாதிகளின் நிழல்களோ பாரம் பரியமாகவோ இல்லாத இவர்களால் யாழ்ப்பாணத்திய சாதீயக் கட்டுக்கோப்பையும் பொருள் முதல் வாதப்போக்கையும் உடைக்க முடியாது அவையெல்லாம் முனை மழுங்கிப்போன சரித்திரம் தெரிந்து கொள்ள முடியாது போனதில் ஆச்சரியமொன்றுமில்லை.

சோவியத் புரட்சி வெற்றித் தாக்கத்தில் பூர்ஷுவாக்களை எதிர்க்க வீறுகொண்டெழுந்த சீனப்புரட்சி விவசாயத்தொழிலாளர்களை உட்கொண்டதால் தடம் மாறி மாவோயிஸமாக தன்னை வளர்த்துக் கொண்டது. அதையும் விட வீரியம் மிக்க பிரச்சினையாக சாதீய பொருளாதார அமைப்பையும் பணபலற்ற தொழில் வாய்ப்பற்ற உதிரிக் கூலித் தொழிலாளர்களையும் கொண்ட யாழ்ப்பாண தீபகற்பத்தில் எதைச் சாதிக்க விழைகின்றார்களோ.

கூர்மையான ஆயுதத்தின் முன் அடங்கி நீறு பூத்த நெருப்பாகக் கனன்று கொண்டிருக்கும் இம்முரண்பாடுகளின் முன்னால் இவர்கள் இன்னுமொரு முறை தோத்துப் போவார்கள். முதல் தோல்வி மார்க்ஸிய சிந்தனையுடன் புரட்சிகர ஆயுதப்போராட்டத்தை முன்னெடுக்கையில் நேர்ந்ததை நாம் அறிவோம்.

புரட்சிகரப்போராட்டத்தின் கனவுகள் உட்கட்சி முரண்பாடுகளிலும் தலைமைகளின் முகமூடி கிழிக்கப்பட்டு அம்பலமானதிலும் நொருங்கிப்போய் பர தேசங்களுக்கு மூட்டை முடிச்சுகளுடன் ஓடிச்சேர்ந்தவர்கள் மூளைகளில் அளவு கணக்கின்றி அடைக்கப்பட்ட தத்துவ மூட்டைகள் அரிப்பெடுத்தபோது சஞ்சிகைகள் எழுதத் தொடங்கினார்கள்.

புற்றீசல் போலப்புகலிட இலக்கியங்களாக வெளிக்கிட்ட இப்புத்தகங்கள் மார்க்ஸியப் புழுகுகளுடன் பெண்ணீயம் சாதீயம் என்று பல கிளைகளில் தாவிப்பாய்ந்து தமிழக தலித்தியத்தையும் கடன் வாங்கிக் கொண்டது. இவர்களின் மூளைச்சூடு கொதி நிலையடைந்து தனி மனிதத் தாக்குதல்களையும் விரிவாக்கி முற்போக்குவாதம் பிற்போக்குவாதம் என்று விரிவடைந்து சென்றது.

பெண்விடுதலையை கடன் வாங்கிக் கொண்ட பல பெண்களும் கட்டுடைத்தல் என்னும் போர்வையில் கணவர்களையும் மாற்றிக்கொண்டது சுவாரஷ்யமான சம்பவங்கள். அதி நவீனத் தத்துவவாதிகளாகத் தம்மை அடையாளங் காட்ட ஆசைப்பட்ட சில ஆண்கள் தமிழகக் கள்ளுக்கடைகளிலெல்லாம் தலித்தியம் பேசி தண்ணி அடித்துத் திரிந்தது ஒரு காலம்.

யாழ்ப்பாணத்தில் சிரட்டையிலும் மூக்குப்பேணியிலும் தண்ணீர் கொடுத்த சாதீய மான்கள் எல்லாம் தலித்தியம் சாதீயம் பேசி தலித்திய மகாநாட்டை ஐரோப்பிய வீதிகளுக்கு இறக்கு மதி செய்தது தான் இவர்கள் செய்த புரட்சி. மேலை நாட்டு வாழ்க்கை முறையிலும் அவசர கதியிலும் மறக்கப்பட்டு வந்த இம்மனிதப்பண்புகள் அற்ற நடைமுறைகளைத் தோண்டி எடுத்து தோரணங் கட்டி விட்டது தான் இவர்களின் புரட்சி.

இப்புரட்சி வாதிகளும் ஜனநாயக மறுப்புக்கெதிராகப் போராடியதாய் தம்மை அடையாளங் காட்டிக் கொண்டவர்களும் ஈழத்தமிழ் மக்களை ஆட்சி செய்யும் சிம்மாசன்க் கனவுகளுடன் அக்கப்போரில் இறங்கியுள்ளார்கள்.

இவர்களில் யாரும் இதுவரை தமிழ் மக்களின் துயரங்களைப்போக்கடிக்கும் நடவடிக்கைகளிலோ துயரங்களைத் தந்த சிங்களப் பேரினவாதிகளின் மீதோ அதன் பின்னணியில் கால்கோளாகவிருக்கும் இந்திய வல்லாதிக்கத்தின் மீதோ ஒரு சிறு துரும்பையும் எடுத்துப்போடவில்லை என்பது தான் துரதிர்ஷ்டம்.

அதே வேளை புலியெதிர்ப்பு என்ற போர்வையில் அவர்களின் அழிவுடன் மக்களின் அழிவையும் நியாயப்படுத்தி சந்தோஷப்பட்ட பாசிசவாதிகளும் இவர்கள் தான்.

யாராவது இவர்களைப்பற்றி எழுதத் துணிந்தாலோ கேள்வி கேட்க முற்பட்டாலோ புலிப்பாசிஸம் அல்லது தனி மனிதத் தாக்குதல் என்று கூறி நழுவிக்கொள்வார்கள். இவர்களை நம்பினால் ஈழமக்களின் தலையெழுத்தை அந்த ஆண்டவனால்க் கூட காப்பாற்ற முடியாது.

Friday, March 13, 2009

ஆடு புலி ஆட்டம்


மல்லாக்காகப் படுத்திருந்து ரிலாக்ஸாக யோசித்ததில் (சீரியஸாக யோசித்து யோசித்து மூளை சூடேறிவிட்டது) ஆடு புலியாட்டத்தில் (நிஜப் புலிகளுடன் அல்ல) நாமும் கலந்து கொள்வோம் என்று தோன்றியது.

குட்டையைக்குழப்புவதுதானே நம்ம வேலையாச்சே... வந்தா மலை போனா என்னவோன்னு சொல்லுவாங்களே ..அதைப்போல ..

கொஞ்சம் பதிவுகளைப்படித்ததாலும் கொஞ்சம் பதிவுகளுக்கு வந்திருந்த பதில்கள் பாதித்ததாலும்.

என்ன சொல்லப்போறேன் என்பற்கு முன்னால் ... ரூடோ (rooto) ஒரு கேள்வி கேட்டிருந்தார் லசந்த விக்கிரம துங்கவைக் கொன்றது யார்னு?

நல்ல கேள்வி. பதிலும் எல்லோருக்கும் தெரிந்தது தான். அதை அவர் தன் நண்பருக்கு எழுதியிருந்ததை " கலையகம் " http://kalaiy.blogspot.com/2009/03/blog-post_4191.html

இப்படிப் போட்டிருக்கார்.

"எனது மரணம் சம்பவித்த உடனேயே நீங்கள் (ஜனாதிபதி ராஜபக்ஷ) வழக்கமான விசாரணைகளை தொடங்குவீர்கள். ஆனால் கடந்தகாலங்களில் முடுக்கிவிடப்பட்ட அனைத்து விசாரணைகளையும் போல, இதிலும் எந்த ஒரு முடிவும் வரப்போவதில்லை. உண்மையைச் சொன்னால் எனது மரணத்திற்கு யார் காரணம் (அனேகமாக பாதுகாப்பு அமைச்சர் கோத்தபாய ராஜபக்ஷ) என்பது, நம் இருவருக்கும் தெரியும்."

லசந்தவின் நண்பர் மகிந்த என்பதைக்கண்டு பிடித்திருப்பீர்கள். லசந்தவின் மரணத்திற்காக கவலைப்படும் ரூடோவிற்க்காக இன்னுமொரு சாம்பிள். அதுவும் லசந்த சொன்னது தான்.


"பிரிவினைவாத பயங்கரவாதம் அழிக்கப்படுகையில், பயங்கரவாதத்தின் வேர்களை கண்டறிவது அவசியமானது. அதேநேரம் இலங்கை அரசானது இனப்பிரச்சினையை பயங்கரவாதமாகப் பார்க்காமல், வரலாற்று கண்ணோட்டத்துடன் நோக்க வேண்டும். நாங்கள் அரசபயங்கரவாத்திற்கு எதிராகவும், பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்று கூறப்படுவதற்கும் எதிராக கிளர்ச்சியுற்றோம். அதே நேரம், உலகில் இலங்கை அரசு மட்டுமே தனது பிரசைகள் மீது குண்டு வீசுகிறது என்ற கொடூரத்தையும் பகிரங்கப் படுத்த வேண்டியவர்களாக உள்ளோம்."



அதே நேரம் அமெரிக்க ராஜாங்க அமைச்சரிணி கிளாரியம்மா மகிந்தவுடன் பறைஞ்சது பற்றி
மீனகம் (http://meenagam.net/me/?p=2614) போட்டிருக்கார்.

"இத்தொலைபேசி பேச்சுவார்த்தையின்போது பொதுமக்கள் பாதுகாப்பு முதன்மையானதென ஹிலாரி கிளின்ரன் மஹிந்த ராஜபக்ஷவிடம் தெரிவித்துள்ளார்.

பயங்கரவாதம் இல்லாதொழிக்கப்பட்டதன் பின்னர் நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்த முடியும் என ஹிலாரி குறிப்பிட்டுள்ளார் என பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளத்தில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

அண்மையில், இலங்கை விவகாரம் தொடர்பில் இந்திய வெளியுறவுச் செயலர் சிவ்சங்கர் மேனன் ஹிலாரியுடன் கலந்துரையாடியமை குறிப்பிடத்தக்கது.

சரி இனி விஷயத்துக்கு வருவோம். ஈழத்தில் நடப்பது இனவிடுதலைப்போராட்டம்னு நீங்களும் நாங்களும் குய்யோ முறையோன்னு கூக்குரல் இட்டுக்கிட்டிருக்கோம்.

நீ த்மிழ் ப்ளொட்டான்னு ஒருவர் கேக்குரார். புலியைக்காட்டி மக்களை அட்டெண்ட்ஸ் போட வைக்காதேன்னு இன்னொருவர் சொல்றார். பயங்கர வாதம் ஒழிக்கப்பட்ட பின்னர்னு லசந்தவும் கிளாரியும் பேசிக்கிராங்க.

லசந்த சொல்லுராரே இனப்பிரச்சினையை பயங்கரவாதனு பார்க்காம அப்பிடின்னு நீங்க கேட்கலாம். நம்ம மக்களுக்கு இருக்கும் பிரச்சினை இனப்பிரச்சினைன்னு அவர் ஏற்றுக்கொண்டாலும் புலிகளைப் பிரிவினைவாத பயங்கர வாதிகள்னு சொல்வதை கவனிக்கணும்.

அதாவது ஈழத்தமிழ் மக்களாகிய நாங்க நமக்குள்ளேயே பிரிவினைப்பட்டு பிரிச்சிப்பார்த்து பேதமைப்பட்டு சின்னச்சின்ன கும்பிகளா நிக்கிறோம்.

புலிகள் வாழ்கன்னு ஒரு கோஷம், புலிகள் ஒழிகன்னு ஒரு கோஷம் , புரட்சிகரம் பிழைப்புவாதம்னு டோலர்கள் ஒரு புறம் , முட்டையில மயிர் புடுங்கி அதிலயும் கோலம் போடுற சிறிரங்கசாமிகள் மறு புறம்.

தமிழர்கள் என்றால் புலிகள்தான்னு விதண்டாவாதம் புரிபவர்கள் ஒரு புறம் , புலிகளும் தமிழர்தான் தமிழர் எல்லாம் புலிகள் அல்ல என்பவர் மறு புறம்.

இப்டியே புரட்சி செய்து புரட்சி செய்து இன்றைக்கு நாயை விடக்கேவலமா நடு ரோட்டில அடிச்சிப்போட்டாலும் ஏன்னு கேட்க நாதியில்லாம ஒரு இனம்னா அது நாங்க தான்.

இந்தியா உதவி செய்யும்னு சொன்னவங்க இந்தியாவே வந்து அடிக்கும்போது எங்கே போனார்களோ தெரியவில்லை. ஒபாமாவும் கிளரிம்மாவும் வந்து கை கொடுப்பாங்கன்னு வெள்ளை மாளிகைக்குப் படையெடுத்தாங்க..

இப்ப அவங்களே படை கொண்டு வந்து புலிகள் தடுத்து வைத்திருக்கும் மக்களை மீட்கப்போகின்றார்களாம்.

புலிகள் ஒழியும் வரை காத்திருக்கிறார்கள் உலக நாடுகள். அவர்கள் தெளிவாக மிகத் தெளிவாகச் சொல்லிவிட்டார்கள். இதெல்லாம் ஏம்பா சொல்லிரேன்னு கேட்கலாம். சொல்லத் தோணியது .சொல்ல்லுகிறேன்.

எங்களைப்பற்றி யார் யாரோ பேசுகின்றார்கள். முடிவுகள் எடுக்கின்றார்கள். அன்று ராஜீவிலிருந்து இன்று கிளாரிம்மா வரை.

இதுவரை நாங்கள் செய்து வந்ததெல்லாம் சரியில்லை. அதுதான் இத்தனை பின்னடைவு. தன்னை நம்பாமல் தன் மக்களை நம்பாமல் ஆயுதத்தையும் அதிகாரத்தையும் நம்பியதால் வந்த பின்னடைவு.

தனக்கென்று தனி வழியமைக்காது வால் பிடித்ததால் வந்த பின்னடைவு.

உலக ஒழுங்கை உள்வாங்கி இராஜந்திரமில்லாது தான் தோன்றிப்போக்கில் போனதால் வந்த பின்னடைவு.

எல்லாவற்றிற்கும் மேலால் தன்னவனையே கருங்காலியென்று பிரித்து வைத்ததால் வந்த பின்னடைவு.

இவ்வளவு சொல்கின்றாயே நீயெங்கே என்றால் ஏதாவது ஒரு கும்பியில்.
கும்பிகள் ஒன்று சேர்ந்து மலையாகும் கனவுகளுடன்.

இழுத்தால் மலை போனால் ஏதோவொன்று.





புலிகள் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவர்களா?


ஒரு நாட்டை விமர்சிக்கின்றோம், ஒரு அரசை விமர்சிக்கின்றோம், ஒரு தலைவரை விமர்சிக்கின்றோம் ... புலிகளை விமர்சிக்க முடியாதா? என்று நீங்கள் கேட்கக்கூடும். அப்படித்தான் நானும் நினைத்திருந்தேன்.

ஜனநாயக நடைமுறைகள் பின்பற்றப்படும் எவ்விடத்திலும் யாரும் இவ்வாறுதான் சிந்திப்பார்கள், சிந்திக்க முடியும்.

புலிகளின் தமிழ் மக்களுக்கான போராட்டம் உண்மையானது என்பதுவும் நியாயமானது என்பதுவும் ஏர்றுக்கொள்ளக்கூடியதே. அதில் மாற்றுக் கருத்து எதுவும் கிடையாது. இது எவ்வளவுக்கு எவ்வளவு உண்மையானதோ அவ்வளவுக்கவ்வளவு அவர்கள் நடைமுறை பற்றி எனக்கு விமர்சனங்கள் உண்டு என்பதுவும் உண்மையானது.

இது அவர்களைப்பற்றிய விமர்சனங்களோ கேள்விகளோ அல்ல. புலிப்பினாமிகள் என்ற போர்வையில் அல்லது அவர்களின் ஜால்ராக்கள் என்ற கோதாவில் பதிவுகளில் வந்து எச்சமிட்டுப்போகும் சில அறிவிலிகளைப்பற்றியதே.

உங்களால் எங்களால் ஒரு சிங்கள அரசையோ ஒரு இந்திய அரசையோ சோனியாவையோ கலைஞர் மு.க வையோ விமர்சிக்க முடியும் என்றால் அது ஜனநாயகம் என்றால் பத்திரிகைச் சுதந்திரமென்றால் -இந்த அறிவிலிகள் இவ்வாறு எச்சமிட்டுச் செல்வதை எந்த வகையில் சேர்ப்பது?

"புலிகளின் முடிவு காலமா?" என்ற எனது ஆக்கத்தில் ஒன்று வந்து இது ஒரு தமிழ் ப்ளொட் (புளட் அல்ல -இரத்தம்) ஆக இருக்க முடியாது என்று கண்டு பிடித்துப் போயிருக்கின்றது. உனது தாயும் தந்தையும் தமிழராய் இருப்பதால் நீ எவ்வாறு தமிழன் என்று சொல்லிக்கொள்கின்றாயோ அதற்கும் மேலாக தமிழைச் சுவாசிப்பதால் நான் தமிழன் என்று உணர்கின்றேன்.

அதேபோல "புலி அடியும் கிலி பிடிக்கும் சிங்களமும்" என்ற வீடியோ இணைப்பில் வந்து ஒன்று உங்கள் வாசகர் கவர்ச்சிக்காக புலிகளை இழுக்காதீர்கள் என்கின்றது.

இதனால் தான் எனக்கு இந்தச் சந்தேகம் எழுந்திருக்கின்றது. நான் என்றாலும் "களவாணி" என்ற பெயரில் எழுதுகின்றேன். எனது இடத்திற்கு நீங்கள் வருகின்றீர்கள். எச்சமிடுகின்றீர்கள். நீங்கள் மட்டும் அனானியாக வருவதேன். உங்கள் பெயர் எங்களுக்குத் தெரியவேண்டுமென்பதல்ல. உங்கள் தளத்தைக் குறித்துச் செல்லுங்கள். நாங்களும் வந்து பார்க்கின்றோம் நீங்கள் என்ன உலக மகா சேவை செய்கின்றீர்கள் என்பதை.

புலிப்பாசிசம் புலி அராஜகம் என்று பகிரங்கமாக உங்களை விமர்சிப்பவர்களிடம் உங்கள் எதிர்க்கருத்துக்களை எப்போதாவது பதிவு செய்ததுண்டா? அது தானே ஜனநாயகம்..கருத்துப்பரிமாற்றம் ... கருத்துத் தெளிபு.

மண்டைக்குள் ஒன்றும் இல்லாதவர்களே இவ்வாறு எச்சமிடுபவர்கள் என்பது எனது கருத்து. ஒரு ஆக்கத்தைப்பற்றிய உங்கள் கருத்தைப்பதிவு செய்வது வேறு. அதைச்செய்யாதீர்கள் இதைச்செய்யாதீர்கள் என்று கட்டளை இடுவது வேறு.

இவ்வகையில் நீங்கள் ஒரு வித எதேச்சாதிகாரத்துடன் செயற்படுவதை உங்களால் புரிந்து கொள்ள முடிகின்றதா? புலிகள் உங்களிடம் தங்களைகுத்தகைக்குத் தந்து விட்டார்களா?

அப்போது புலிகள் ஈழத்தமிழ் மக்கள் அனைவருக்குமான அமைப்பு இல்லையா? எங்களை அவர்களைப்பற்றி எழுதக்கூடாது என்ற அதிகாரத்தை உங்களுக்குத் தந்தவர்கள் யார்?

புலிகளைக் கேள்விகள் இன்றி கண்மூடித்தனமாக ஆதரிப்பதாகப் பாசாங்கு செய்யும் நீங்கள் தான் அவர்கள் சகாப்தம் (ஒரு வேளை) முடிந்தால் முதல் கல்லை வீசப்போபவர்களும் என்பது எனது முடிபு.

ஏனெனில் எதையுமே கேள்வி கேட்காது நம்புவர்கள் அவர்களைப்பற்றிய எதிரான கருத்தையும் அப்படியே நம்புவார்கள்.

உங்களுடைய இத்தகைய எதேச்சாதிகாரம் தான் இன்று எத்தனையோ எம்மக்களை விடுதலைப்போராட்டத்தை விட்டு ஓரங்கட்டியிருக்கின்றது என்பதைப்புரிந்து கொண்டிருக்கின்றீர்களா?

உங்களுடைய இத்தகைய அராஜகங்கள் தானே எம்மக்களைத்தாம் வாழும் நாடுகளில் உங்களுக்கெதிராக மக்களை காவல்துறையிடம் முறைப்பாடு செய்ய வைத்திருக்கின்றது.

இவர்களையெல்லாம் மனமொப்பாமலேயே இவ்வகையில் நடக்கத்தூண்டியது யார்?

அவ்வகைக்காரணங்களும் புலிகளை இந்நாடுகளில் தடை செய்ய வலுச்சேர்த்தது என்பதை மறுதலிக்கின்றீர்களா?

இத்தகைய துயர வேளைகளிலும் உங்கள் காட்டுமிராண்டித்தனமான தர்ப்பாரை நீங்கள் முடிவுக்குக் கொண்டு வரமாட்டீர்களா?

தமிழ் மக்களாக தமிழீழப் போராட்டத்தை ஆதரிக்கும் நேசிக்கும் மக்களின் வேண்டுகோள் இது என்பதைபுரிந்து கொள்ள மாட்டீர்களா?

கேள்வி கேட்பவன் கருங்காலி உங்கள் பாசையில் . எதேச்சாதிகார முகமூடியைகழட்டி விட்டு உங்கள் அசிங்கம் பிடித்த முகத்தைப் பாருங்கள்.
திருந்துவதற்கு ஒரு வாய்ப்பு வரக்கூடும்.

அமெரிக்க - இந்திய பயங்கரவாதிகள்


அண்மையில் ஒரு செய்தி வெளியாகியிருக்கின்றது. அமெரிக்காவில் வாழும் மெத்தப்படித்த இந்தியர்கள் கூட்டாகச் சேர்ந்து அமெரிக்க அரசிற்கு ஒரு மகஜர் கொடுத்திருக்கின்றார்கள். 16 ஆயிரம் பேர் கையெழுத்திட்டிருக்கின்றார்கள்.

பாகிஸ்தானிற்கு வழங்கப்படும் அமெரிக்க உதவிகள் நிறுத்தப்படவேண்டும். அல்லது பயங்கரவாதம் நிறுத்தப்படவேண்டும் என்ற முன் நிபந்தனை வலியுறுத்தப்பட்டு உதவிகள் வழங்கப்படவேண்டும்.

அமெரிக்காவில் இருக்கும் இந்தியர்களில் பெரும்பான்மையானோர் மெத்தப்படித்தவர்கள், அறிவாளிகள். அதே நேரம் மனிதாபிமானம் உள்ளவர்களா ? என்பதே எமது கேள்வி.

அமெரிக்கப்பிரதிநிதிகள் சபை வெளிநாடுகளுக்கும் வெளிநாட்டு அமைப்புகளுக்குமான உதவிகள் எவ்வாறு அமையவேண்டுமென மறு பரிசீலனை செய்யும் தருணம் இது. புதிய அரசு பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் திருத்தம் கொண்டுவர முயல்கின்றது.

அந்தச் சந்தர்ப்பத்தில் தான் அமெரிக்க வாழ் இந்தியர்கள் இந்த மகஜரை பிரதிநிதிகள் சபையிற்கும் அரசிற்கும் அளித்துள்ளார்கள். அல்ஹைடாவிலிருந்து அனைத்து முஸ்லீம் தீவிர வாத அமைப்புகளும் பாகிஸ்தானில் முகாமிட்டிருப்பதாகப் பட்டியல் இட்டிருக்கின்றார்கள்.

பாகிஸ்தானில் முஸ்லீம் தீவிர வாத அமைப்புகள் உருவாகுவதற்கே இந்தியா தான் காரணம் என்பதை இந்த மெத்தப்படித்த மேதைகளுக்கு யாராவது நினைவூட்டுங்கள். அதற்கு கொஞ்ச காலம் பின்னோக்கிப் போக வேண்டும்.

1947 இந்தியா பாகிஸ்தான் இரண்டு நாடுகள் உருவாகிய நேரம். பாகிஸ்தானும் இந்தியாவைப்போன்ற மிகச் சாதரண நாடு. சாமானியர்களால் உருவான தேசம்.
அப்போதெல்லாம் அங்கு பயங்கரவாதிகள் யாரும் கிடையாது.

உண்மையில் பாகிஸ்தான் , இந்தியா , காஸ்மீரம் என்று மூன்று நாடுகள் உருவாகியிருக்க வேண்டிய நேரம். காஸ்மீரின் துரதிர்ஸ்டம் அங்கு அப்போது இந்து மன்னன் ஆட்சி புரிந்து கொண்டிருந்ததும் வல்லபாய் பட்டேல் என்ற இரும்பு மனிதர் நேருவின் பக்கபலமாக இருந்ததும் இந்தியர்களுக்கு இயல்பாகவே இருக்கின்ற பேராசையும் (இந்த பேராசைக்கு நிறையவே உதாரணம் தருகின்றேன்) காஸ்மீரத்தில் மண்ணின் மைந்தர்களின் குருதி தொடர்ந்து பாச்சப்படவேண்டும் என்று எழுதியாகி விட்டது.

இன்று வரை ஐ .நாடுகளின் யோசனையைக்கூட உதாசீனப்படுத்தியது இந்தியா தான். இந்தியா நினைத்தால் காஸ்மீரைச் சுதந்திரமாக வாழ விடலாம் என்பது எனது மட்டுமல்ல உலக அரசியல் ஆய்வாளர்களின் கருத்தாகும்.

இந்தியாவால் ஆக்கிரமிக்கப்பட்ட அக்காஸ்மீரின் விடுதலையை வேண்டியவர்களின் தோற்றுவாய் இன்று பாகிஸ்தானை இன்றுள்ள நிலைக்குக் கொண்டுவந்தது துரதிர்ஸ்டமே. அதே போல் ஆப்கானிஸ்தானில் நிலைகொண்ட சோவியத் ஆதரவு அரசை அகற்ற அமெரிக்கா எடுத்த நிலைப்பாடு இன்று ஆப்கானிஸ்தானையும் பாகிஸ்தானையும் பயங்கரவாதத்தின் பிடியில் பூரணமாகக் கொடுத்திருக்கின்றது.

அதே போல இதே பாகிஸ்தானை நலிவடையச் செய்ய வேண்டி பங்களாதேசத்தின் முத்தி வாகினி போன்ற அமைப்புக்களை ஆயுதமும் பயிற்சியும் கொடுத்து வளர்த்து விட்டதும் பாகிஸ்தானைப்பிளவு படுத்தி பங்களாதேசத்தை உருவாக்கி விட்டதும் இந்தியர்களின் பேராசையே.

அதே போல ஈழத்தில் கொழுந்து விட்ட விடுதலைப்போராட்டத்தை ஆயுதம் பயிற்சி என்ற ஆசைகளைக்காட்டி திசைதிருப்பி விட்டதும் இன்றைய ஈழத்தவரின் அனைத்து அவலங்களுக்கும் காரணம் இதே இந்தியர்களின் பேராசை.

பிராந்திய வல்லரசுக்கனவு என்ற மாயையின் பின்னால் ஓடும் இந்தியர்கள் அனைத்து மனித விழுமியங்களையும் தங்கள் காலடியில் போட்டு மிதித்துக் கொண்டு செல்கின்றார்கள் என்பதை யாராவது இவர்களுக்குச் சொல்லுங்களேன்.

அமெரிக்கா வாழ் மெத்தப்படித்த இந்த இந்தியர்கள் இன்று வன்னிக்காடுகளில் ஓடும் இரத்தத்தின் பின்னால் சோனியாவின் இந்திய அரசு நிற்பதை எவ்விதம் பார்க்கின்றார்கள். இந்த அரச பயங்கர வாதம் பற்றி இவர்கள் கண்டறிந்தது என்ன?

பயங்கர வாதத்தை ஆதரிப்பவர்கள் யாராய் இருந்தாலும் அவர்களும் பயங்கர வாதிகளே - என்பது அமெரிக்காவின் அதிரடி கண்டு பிடிப்பு.

இனவிடுதலைப்போராட்டமும் அமெரிக்காவின் வசதிக்கேற்ப பயங்கரவாதப்பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது . இனவிடுதலை அடைந்த வியற்நாம் , கியூபா முதல் இனவிடுதலை வேண்டிப்போராடும் ஈழத்தமிழர்கள் வரை இதற்கு உதாரணங்கள்.

இந்தியாவின் அரச பயங்கரவாதத்தை ஆதரிப்பவர்களும் அத்தகைய அரசமைப்பைக் காத்துக்கொள்ள மகஜர் கொடுப்பவர்களும் பயங்கர வாதிகள் தானே. இப்போது தலைப்பை இன்னுமொரு முறை படித்துப்பாருங்கள்.

(நீதியின் பால் செயற்படும் ஆதரவளிக்கும் இந்தியர்கள ,அமெரிக்கர்கள், இந்திய-அமெரிக்கர்கள் பற்றி எங்களுக்கு உயர்ந்த அபிப்பிராயம் இருக்கின்றது. )

Thursday, March 12, 2009

புலி அடியும் கிலி பிடிக்கும் சிங்களமும்

புலிகளின் தாக்குதல் விசுவமடு
eelam video @ Yahoo! Video

Tuesday, March 10, 2009

சோனியா கருனா கினியும் போயஸ் தோட்டத்து கூர்க்காவும்


என்னத்த சொல்லுரது போங்க .. ஊரில ஒரு வழக்குச்சொல்லிருக்குதுங்கோ "ஆட்டைக்கடிச்சி மாட்டைக்கடிச்சி.. " அப்புறம் காலம் நேரம் பாத்து நீண்டிகிட்டிப்போகுங்கோ.நம்ம அரசியல் வாதிங்க பொழப்பும் அது போலத்தான்.

" ஈழத்தமிழங்கென்னெல்லாம் ஒண்ணுங்கெடையாது லங்கைதமிழங்கன்னுதான் கூப்பிடனும்" (நாங்க இவங்ககிட்ட கேட்டமான்னு உதார் வுடக்கூடாது) அவங்க சொல்லுராங்க நாங்க கேட்கனும். அப்பிடித்தான் தமிழ் நாட்டு ஜனங்க சொல்லிக்கொடுத்திருக்காங்க அவுங்களுக்கு..

"அப்பிடித்தாம்பா வாரு நடக்கிரப்போ இம்மாம் ஜனங்க சாவுராங்கன்னு குய்யோ முறையோன்னு காமடி பண்ணுரவங்களுக்கு ஒரு தெளிபு வரணும்னுதா வாரு நடக்குர இடத்தில்கீர ஜனங்க சாவத்தான் செய்வானுங்கன்னு வெளக்கம் கொடுத்ததும்."

ஜதார்த்தம்னு ஒண்ணிருக்கு கண்ணூ ..அதப்புரிஞ்சுக்க்ச்ணும் இல்லாட்டி இப்பிடித்தான் குந்திக்கினு ஒப்பாரி வெக்கணும்..

எம்மாம் பெரிய தலிவருங்க அவங்க சொன்னா செரியா இருக்காதா.. இல்லாங்காட்டி இத்தன பெரீய சோமாரிங்களையும் கேப்மாரீங்களையும் வெச்சு தன்னாந்தனியாக்காட்டியும் அரசியல்ல குப்பை கொட்ட முடியுங்களா?

நாம கவனாமால்லாட்டி கால்ல வுழுவுறவன் காலை வாரி விடமாட்டானா?

இதெல்லாம் புரிஞ்சுக்காமலயா .. சோனியா என்னா பதிவிரதயா? கருனாநிதின்னா கம்னாட்டியான்னு ? அறிக்கைவுடறாங்க..

அடப்போப்பா இதெல்லாம் தெரியாமயா தனித்தமிழ் நாட்டில கெளரவ பிரஜைங்கின்னு குந்திக்கினு இருக்கோம்னு நீங்க சூடாவுறது புரியுதுங்க..

சூடாவீதிங்கப்பா ... என்னா வெயிலு கொளுத்திப்போட்டாலும் சூடேவாவாம்ம சொரணையே காட்டாத ஜென்மங்களாத்தானே நாம இரிக்கோம்னு நீங்க புலம்பிரது நமக்கும் வெளங்கிதுங்கோ ...

என்னா செய்யிரது.. படைச்சவன் எழுதிருக்கான் நெத்தில .. அவன் தான் சொல்லிருக்கான் நாமம் போட்டுக்கன்னு...

இதுக்கு மேல என்னா செய்ய முடிம்ம்னு நீங்க புலம்பிரீங்க ...

அது செரிதாம்பா.. உங்க மகமாயி உன்ணா வெரமிருந்தாங்களே.. சிங்களவன் சொல்லிப்பிட்டான் ஒன்ணும் வேலைகாவதுன்னு...

உங்க மாரியாத்தாவுக்கு தோல்வியே கெடையாதுங்களே ..எப்பிடீ இதயெல்லாம் செரிச்சுக்கப்போராங்களோ...

பேப்பரூ நியூஸுல்லாம் பக்கத்துல வச்சுப்புடாதீங்கப்பூ... தேர்தலு ஜூரத்தில இருக்கிராவுக... ஜன்னி கின்னி புடிச்சிரப்போவுது....

சிங்களவன தூக்கிப்பிடிச்சிருந்தாக .. இன்னைக்கு சிங்களவனே கால்ல போட்டு தேச்சுப்புட்டான் இந்தம்மாவ..

என்னா பண்ணுரது ..சோனியாவப்பேசலாம் கருனா நிதியை மிதிக்கலாம் அதெல்லாம் இந்தியக் கினிங்க... அனா சிங்களவன் இருக்கானே அவன் பொல்லாத பன்றிங்க...

தீனி போடுமட்டும் வாலை வாலை ஆட்டுவான்.. இல்லைன்னா உங்களயே தீனியாக்கிடுவான்..

"சும்மா புலம்பாதப்பா .. நம்ம அம்மான்னா என்ன சும்மாவா... சோவு சுப்பிரமணிசாமின்னு இப்போத்தான எஸ் எம் எஸ்ஸு சேதி போயிருக்கு ..அப்புரம் தான் இருக்கு மகிந்தவுக்கு பேதிஸ்ஸுன்னு .."

இது போயஸ் தோட்டத்து கூர்க்கா சொன்னதுங்க...

Sunday, March 8, 2009

ஞாயிறு சங்கல்பம்


ஞாயிறு ஓய்வு நாளும் அதுவுமா செய்வதற்கு ஒன்றும் இல்லாது விட்டத்தைப் பார்த்துக்கொண்டு உட்கார்த்திருந்தேன்.

"உள்ளே வரலாமா ?" அசரீரி கேட்டு திரும்பிப்பார்த்தேன். நண்பன் நின்றிருந்தான். இரண்டு வீடு தள்ளிக்குடியிருப்பவன். நினைத்தபோது ஒரு எட்டு எட்டிப்பார்த்துவிட்டுப் போவான்.

"வரவேண்டாம் என்றால் போய்விடவா போறாய்... சரி சரி உள்ளே வா" என்று அழைத்தேன்.

வந்தவன் உட்காரமுன்னர் ஒரு குண்டை அள்ளிப்போட்டான்.

"டோலர்' கள் இப்போல்லாம் பிழைப்பு வாதம் புலிப்பாசிசம்னு எல்லாம் இப்போ எழுதிறதில்லையாம் ... தினமணியில செய்தி போட்டிருக்கான் "

காலையிலயே ஒன்லைன் பேப்பர்லாம் பிரிச்சு மேஞ்சிடுற என் கிட்டேயா?

ஆனாலும் குறுக்கு மூளைக்காரன். நான் தான் "களவாணி"ன்னு குத்து மதிப்பா கண்டுபிடிச்சிருக்கிறவன்.

"அப்பிடியா எந்த ஊர் தினமணியில நீ பார்த்தாய்? "

சிரித்துவிட்டு வேற டாபிக்கிற்குத் தாவினான்.

"இந்தியாவே தேர்தல் ஜூரத்தில நடுங்கிட்டிருக்கு "
"ஆமா"
"தமிழ்நாட்டில ஆவது ஏதாவது செய்யணும்டா.."
"என்ன புரட்சிகரமான வழியிலயா?"

என் குறும்பை புரிந்து கொண்டவன்

"அப்படியில்லடா .. ஈழத்தமிழர் பிரச்சினைல பொங்கியிருக்கிற ஜனங்களை அப்பிடியே டைவேட் பண்ணி தமிழ்நாட்டில ஏதாவது மாத்தம் கொண்டருணும்டா"

அவனை ஏற இறங்கப்பார்த்து விட்டு

"என்னடா தனித் தமிழ் நாடு போராட்டம் தொடங்கிடலாமா? "

"ஒரு ஈழம் போதாதா ? சாகும் வரை நம்மை நிம்மதியில்லாம கொன்னுபோட.. இது வேறைடா"

என்ன என்பதைப்போல அவனைப்பார்த்தேன்.

"இதே தமிழ் உணர்வுள்ளவங்களை ஒவ்வொரு தொகுதியிலயும் சுயேச்சயா நிப்பாட்டணும் ... இப்போ இருக்கிற ஈழ ஆதரவுப் பேரவை கிளர்ந்தெழுந்திருக்கிற மாணவர்கள் லாயர்கள் சினிமாபேர்வழிங்கள்ன்னு எல்லாரையும் இவங்களுக்கு ஆதரவாப் பேச வைக்கணும். "

"பேசவைச்சிட்டா மட்டும் ...."

என்னை இடைமறித்துதொடர்ந்தான்.

"பேசமட்டும் வைப்போம் அப்ப மக்கள் என்ன நெனைக்கிராங்கன்னு தெரிஞ்சிடும் ..... அதுமட்டுமில்ல மக்கள் மாறனும் மாறனும்னு சொல்லிக்கிட்டிருக்கிறோம்ல ..அவங்களுக்கும் ஒரு சான்ஸ் கொடுக்கணும்லே... "

அவன் யோசனை கிறுக்குத்தனம்னு பட்டாலும் அதில இருந்த ஞாயம் சரியாகவே பட்டது.

"சரி ஒரு கதைக்கு இதெல்லாம் சாத்தியம்னு வைச்சுக்கிட்டு இவங்க எல்லாத்தையும் ஜனங்க வெற்றி பெற வைச்சாலும் .. அதுக்கப்புறம் என்னா? "

என் கேள்வியைப் புரிஞ்சு கொண்டானோ என்னவோ .. எனக்கு மட்டும் புரிஞ்சா கேள்வி கேட்டேன். ஏதோ கேக்கணும்னு கேட்டு வைச்சேன்.

" வெற்றி தோல்வி இல்ல இங்க முக்கியம் ...தன்னிஷ்டப்படி ஊரை அடிச்சு உலையில போடுற ஒவ்வொரு அரசியல் வாதிக்கும் பயம் வரணும்...

ஜனங்க கோபப்பட்டா நாமல்லாம் நெலைச்சிருக்கவே முடியாதுன்னு... அது மட்டுமில்ல கொஞ்சமாவது ஜனங்களுக்கு நல்லது செய்யவேனும்னு நெனைப்பிருக்கும்... "

சொல்லிவிட்டுச் சிரித்தான். என் யோசனையைப்பார்த்து விட்டுக்கேட்டான்.

"என்னடா யோசனை..'
"ஒண்ணுமில்ல உனக்கு ஐடியா அரசன்னு பட்டம் கொடுக்கலாமான்னு யோசிச்சுக்கிட்டிருக்கேன்..."

"அப்பிடியா.. இதையும் கேட்டிட்டு அப்புறம் சொல்லுடா... இது கூட முடியல்லன்னா பரவாயில்லை அட்லீஸ்ட் ஒவ்வொரு கட்சித் தலைவருங்க கேக்கிர தொகுதியில் எல்லாம் நம்மாளுங்களை நிறுத்தி அவங்களையெல்லாம் தோக்க வைக்கணும்... அப்படீன்னா தலைவருங்க எல்லாம் அரண்டு போயிடுவாங்கடா..இதையொரு சங்கல்பமாய் எடுத்துக்கணும்டா"

சொல்லி விட்டு என்னைப்பார்த்தான். அவர்கள் அரண்டு போகிறார்களோ இல்லையோ நான் அரண்டு போனேன்.

Saturday, March 7, 2009

கப்டன் " ஸீரோ"


கப்டன் "ஸொரோ" பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருபீர்கள் கயிறுகளில் தாவி குதிரைகளில் ஓடி வாள் சுழற்றும் சாகசமும் வாள் நுனியில் "z" கீறப்ப்டும் அதிசயமும் இன்றும் பெரியவர்களையும் குழந்தைகளாக்கி விடும். கொள்ளையடித்த பணத்தை ஏழைகளுக்கு கொடுத்துதவும் காருண்ணியத்தின் மூலம் எங்கள் மனங்களில் நாற்காலி போட்டு உட்காரும் பலம் அந்த காரக்டருக்கு உண்டு.

அது போலவே தமிழ்த்திரையரங்கில் மின்னிய விஜயகாந்தும் தனக்கான ரசிகர்களை உருவாக்கிக்கொண்டார். ஏழைகளைத் துயரப்படுத்தும் வில்லன்களை துவம்சம் செய்யும் போது திரையரங்கு அதிரும் "டும் .... டுஷ்ஷும்" அதிர்வுகளில் நம் கையாலாகாத் தனங்களையும் மீறி நம் கைகளும் முறுக்கெடுத்துக் கொள்ளும்.

எம்மைத் துன்பப்படுத்திய அவமானப்படுத்திய எத்தனை கயவர்களை அச்சந்தர்ப்பங்களில் நாமும் துவைத்து தும்பெடுத்திருப்போம் மானசீகமாக.

ஏழை பங்காளன் சமூக சீர்திருத்தவாதி இந்தியன் தமிழ்க்காவலன் எத்தனை வேடங்கள் ..அப்பாவி இளைஞர்களை அவர் பின்னால் திரட்டிச்சென்றது. கூட்டம் கூடக்கூட ஆசையும் கூடிச்செல்லும் போலும்.

சினிமா புகழ் மேவி அரசியல் அதிகாரமும் தேடிப்போக அவரைத் தூண்டி விட்டது.

அதர்மத்தைத் தட்டிக்கேட்கும் பாங்கும் "தமிழ தமிழ தமிழா... " என்ற பாடல் மூலம் தமிழ் உணர்வாளனான பாங்கும் நூறு ஆயிரமாக தமிழ் இளைஞர்களை அவர் பின்னால் அணிவகுத்துச் செல்லச்செய்தன.

'கப்டன்" என்ற பட்டப்பெயருடன் நெஞ்சுயர்த்தி அவரை முன்னால் செல்லவைத்து ஒரு உண்மையான உணர்வுள்ள கூட்டம் அவர் பின்னால் என்றும்.

அ.தி.மு.க , தி.மு.க விற்கு மாற்றாக என்ற பேனருடன் தே.மு.தி.க களம் இறங்கியது. இப்பெருங் கொள்ளைக்காரருடன் எப்போதுமே கூட்டு இல்லையென்ற பெருங்கோஷத்தை கேட்கும் மன நிலையில் மக்கள் இல்லையென்பதோ அல்லது பெருங் கொள்ளையரின் அரசியலை மாற்றீடு செய்யும் இராஜதந்திரம் தெரியாத தன்மையோ கப்டனால் பிரகாசிக்க முடியவில்லை. காசு கரைந்தது தான் மிச்சம்.

அரசியலை விரும்பிய கப்டனால் வெல்ல முடியாத தேர்தல்களை விரும்ப முடியவில்லை. ஹவுஸ்புல் தியேட்டர்களையே பார்த்துப்பழகியவருக்கு பாதியும் நிறையாத ஓட்டுப்பெட்டிகளைச் சகிக்க முடியவில்லை.

ஆறிய கஞ்சி பழங்கஞ்சியாகி பத்தோடு பதினொன்றாகி கொடியரசியல் செய்ய வேண்டுமோ என்ற தன்னிரக்கமும் பதட்டமும் கப்டனைத் தொற்றிக் கொண்டது.

தேர்தல் அறிவிப்பு வந்ததும் கப்டனை தூங்கவே விடாது அது துரத்திக் கொண்டிருக்கின்றது. இரு பெரும் பெருச்சாளிக்கட்சிகளான அ.தி.மு.க, தி.மு.க வுடன் கூட்டுச் சேர்ந்தால் ம.தி.மு.க , பா.ம.க போல் ஆட்சிக்கனவு அடிபட்டுப்போகும் . அதை விட்டால் கருப்பாகவும் வெள்ளையாகவும் வாங்கியது எல்லாம் கரைந்து போகும்.

கட்சிகள் எல்லாம் கூட்டணியை அறிவித்து தேர்தல் தொகுதிகளையும் பிரித்துக் கொண்டபோதும் இவரால் இன்னும் எந்த முடிவுக்கும் வரமுடியவில்லை.

ஈழத்தமிழ் ஆதரவு கொதித்துக் கொதி நிலையாக இருக்கும் போது காங்கிரசை ஓரங்கட்டும் மும்முரத்தில் தமிழக மக்கள் வேறுபாட்டைத்துறந்து வேள்வியில் இறங்கியிருக்கும் போது கப்டனின் நகர்வு வேறாக இருக்கின்றது.

ஆட்சி மேடை ஏறும் வெற்றுக்கனவில் மிதக்கும் காங்கிரசுடன்
கூட்டுச் சேர்ந்து ஆட்சியமைக்கும் முஸ்தீபில் இறங்கியிருப்பதாக அரசல் புரசலாகச் செய்திகள் கசிந்து கொண்டிருக்கின்றன.

யாரோ எழுதிய வசனங்களைப்பேசிக்கைதட்டல் வாங்கிய கப்டன் சொந்த டயலாக்கில் சொதப்பத் தொடங்கியிருக்கின்றார்.

தமிழகமே காங்கிரசைப்புறம் தள்ள எழுச்சி கொள்ளும் போது அக்காங்கிரசை ஆட்சியில் ஏற்றிவிட முயலும் கப்டனை "தமிழனாக" ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

"தமிழ் நாட்டில் வெற்றி கொள்ள இந்தியனாய் இருப்பதை விட தமிழனாக இருக்க வேண்டும்" என்ற சின்ன சூத்திரம் கூடத் தெரியாத இவர் "கப்டன் ஸீரோ" தானே.

பிழைப்பு வாதமும் "பித்த" வாந்தியும்


புலியெதிர்ப்பு வாதம் பாஸிஸம் பற்றியெல்லாம் எழுதி வந்த நம் "டோலர்கள்" இப்போது பிழைப்பு வாதம் என்ற புதிய பரிணாம வளர்ச்சியை அடைந்திருக்கின்றார்கள்.

முடக்கு வாதம் இடக்கு வாதம் என்ற வாதங்களுள் "பிழைப்புவாதம்" என்ற புதிய தமிழ்ச்சொல்லைக்கண்டு பிடித்து தமிழுக்குப் பெருமை சேர்த்திருக்கின்றார்கள் இந்த "டோலர்"கள்.

தமிழக அரசியல் வாதிகளை சொற் சாட்டை கொண்டு விரட்டும் இவர்கள் தமிழ் ,தமிழினவுணர்வு என்பவற்றைக்கொண்டு முகமூடி போட்டு பிழைத்துக் கொள்வதாகவும் கூலிக்குழுக்களை உருவாக்குவதாகவும் குற்றம்சாட்டும் இவர்கள் இருப்பதுவும் அதே "தமிழ்" அரங்கம் தான்.

புலி ஆதரவுப்பிழைப்பு வாதம் புலியெதிர்ப்பு பிழைப்பு வாதம் என்று ஈழ ஆதரவு /எதிர்ப்பு போராட்ட வாதிகள் அனைவரையும் அக்மார்க் முத்திரை குத்திப்புறம் தள்ளுகின்றார்கள்.

//ஆயுதம், பணம், பயிற்சி, அரசியல் என்று, ஒரு இனத்தின் சொந்தப் போராட்டத்தை தடுத்து நிறுத்தி, வெறும் கூலிக் குழுக்களின் போராட்டமாக ஈழ ஆதரவு என்ற பெயரில் சிதைத்தனர். இப்படி உருவான கூலிக் குழுக்கள், சொந்த மக்களை ஒடுக்கத் தொடங்கியது.//

ஆயுதம் பணம் பயிற்சி அரசியல் என்பவற்றைக்கொடுப்பதன் மூலம் அல்லது போராடும் குழுக்கள் அவற்றைப்பெறுவதன் மூலம் எவ்வாறு ஒரு இனத்தின் போராட்டத்தை தடுத்து நிறுத்த் முடியும் என்பது புரியவில்லை. இவ்வுதவிகள் ஒரு ஆரம்பக்கட்டத்தில் ஈழத்து இயக்கங்களால் பெறப்பட்டனவேயன்றி பின் நாட்களில் சொந்த முயற்சியிலேயே இயக்கங்கள் வளர்ந்தன.

வியற்நாம் கியூபா பலஸ்தீனம் போன்ற 'விடுதலை" பெற்ற நாடுகளிலேயோ அல்லது விடுதலை வேண்டிய போராட்டத்தில் தொடர்ந்திருக்கும் நாடுகளிலேயோ உள்ள போராளிகளாலும் இத்தகைய உதவிகள் வேறு அமைப்புகளிலிருந்தோ நாடுகளிலிருந்தோ பெறப்பட்டேயிருந்தன. அதனால் அவர்கள் போராட்டத்தை கைவிடவோ அல்லது ஒதுங்கவோ முயலவில்லை.

இன்று ம் இப்பொழுதும் ஈழத்தில் இயக்கங்கள் போராடிக்கொண்டுதான் இருக்கின்றன.

இவர்களை ஏற்றுக்கொள்வதும் விடுவதும் அல்லது கூலிக்குழுக்களாக வர்ணிப்பதுவும் அவரவர் எண்ணத்தைப் பொறுத்தது.

இனவிடுதலைப்போராட்டம் என்பது பலபடிமுறைகளைக்கடந்தும் தன்னைப் புதுக்கியும் செதுக்கியும் முன்னேறும் என்பதை உலக நாடுகளில் நடந்தபோராட்டங்கள் வலியுறுத்துகின்றன.


இதை ஏற்றுக்கொள்ளும் மனத்துணிவின்றி கூலிப்போராட்டம் என்று விபரிப்பது எவ்வாறு கூடும் என்பதை இவர்கள் தான் சொல்ல வேண்டும்.

//ஈழ ஆதரவு பிழைப்புவாதிகளின் விருப்பம் மற்றும் துணையுடன் அத்துமீறி ஆக்கிரமித்த இந்தியா, இதன் மூலம் புலிகளை அவமானப்படுத்தியும் ஈழத் தமிழ்மக்களை படுகொலையும் செய்தனர். இதனால் ராஜீவ் புலிகளால் கொல்லப்பட்டார். இதன் பின் ஈழ ஆதரவு பிழைப்புவாதம் எதிர் நிலைத்தன்மை பெற்றதுடன், புலி எதிர்ப்பு ஆதரவு என்று குறுகி இரண்டு அணிகளாகியது. இங்கு பிழைப்புவாதம் சார்ந்து வெளிப்படையாகவே புலியெதிர்ப்பு, புலியாதரவு என்று தன்னை கன்னை பிரித்துக் கொண்டது. இதற்கூடாக தம் பிழைப்பு வாதத்தை நடத்தத் தொடங்கியது. தமிழ் மக்களை இவை கண்டு கொள்ளவில்லை.//

ஆக "டோலர்கள் " இந்தியாவின் தவறையும் புலிகளின் எதிர் வினையையும் சரி என்று ஒத்துக்கொள்கின்றார்கள் என்று எடுத்துக் கொள்ளலாமா?

அப்படியாயின் புலிப்பாஸிஸம் என்று புலம்புவது வெறும் விளம்பரத்திற்குத்தானா?

//இவ்விரண்டும் இந்திய மேலாதிக்கத்தை அடிப்படையாக கொண்டு இயங்கியதுடன், புலியை ஆதரிக்கக் கோரியது அல்லது எதிர்க்கக் கோரியது. இப்படி புலியைச் சுற்றி இயங்கியது, இந்த பிழைப்புவாதம். இது ஈழத் தமிழ் மக்களையிட்டும், அதன் நலனில் இருந்தும், அன்று முதல் இன்று வரை சிந்தித்தது கிடையாது. தன் சொந்த மக்களை ஏமாற்றி பிழைக்கும் இந்தக் கும்பல், அதே போல் ஈழ மக்களையும் நட்டாற்றில் விட்டுத்தான் பிழைத்தது. //

இந்திய மேலாதிக்கத்திற்கு புலிகள் எதிரானவர்கள் என்ற கருதுகோளின் அடிப்படையில் புலிகளை அழிக்க இந்தியா கங்கணம் கட்டிக்கொண்டிருக்கும் இவ்வேளையில் புலியெதிர்ப்பைப்போலவே புலியாதரவும் இந்திய மேலாதிக்கத்தை அடிப்படையாக கொண்டது என்று எவ்வாறு கூறுகின்றீர்கள்?

ஈழத்தமிழ் மக்களின் உயிரிழப்பு மீதான தமிழக மக்களின் அனுதாபத்தை உங்களால் எவ்வாறு இவ்வாறு கொச்சைப்படுத்த முடிகின்றது.


அப்போ புலியை எதிர்க்கும் நீங்களும் பிழைப்பு வாதிகள் தானா?

இது ஈழத் தமிழ் மக்களையிட்டும், அதன் நலனில் இருந்தும், அன்று முதல் இன்று வரை சிந்தித்தது கிடையாது. தன் சொந்த மக்களை ஏமாற்றி பிழைக்கும் இந்தக் கும்பல்

நீங்களுமா?


சரி அவர்களை விட்டு விடுங்கள். நட்டாற்றில் விடப்பட்ட மக்களைக்கரையேற்ற நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கின்றீர்கள்.
புலிப்பாஸிஸம் புலியெதிர்ப்பு என்று எழுதுவதன் மூலம் இந்த மக்களுக்கு எப்படி உதவி செய்யலாம் என்று கூற வருகின்றீர்கள்.

புலிகளுடன் செலவழிக்கும் நேரத்தை சிங்கள இன ஒடுக்குமுறையயும் அதனால் தமிழ் மக்களின் துயரங்களையும் வெளிக்கொண்டுவரும் பரப்புரைகளையும் நீங்கள் செய்யலாமே? அதுவே ஒரு வகையில் மக்களின் துயரங்களை குறைப்பதற்காவது வழி கோலும் என்று அறியாதிருக்கின்றீர்களா?

பல "இஸங்"கள் பேசும் உங்களால் இவ்வுலகு இருக்கும் இதே ஒழுங்கில் அதனை எதிர்கொள்வதுவும் அதனை நம் மக்களின் போராட்டத்தின் ஆதரவு திசையில் வளைத்துக்கொள்வதுவும் முடியாத விடயமா ..என்ன?

//இன்று புலிகள் தாம் தப்பிப்பிழைக்க, ஈழ மக்கள் கொல்லப்படுவதாக காட்டி நடத்தும் பலி அரசியலை வலிந்து செய்யத் தொடங்கினர். எவ்வளவு மக்கள் பலியாகின்றனரோ, அதுவே தாம் தப்பிப்பிழைக்கும் அரசியல் பிரச்சாரத்துக்க உதவும் என்பது புலி அரசியல். அதற்கு அமைய மக்களை பலியிட்டு வரும் புலிகள், தமக்கு ஆதரவான இந்திய விஸ்தரிப்புவாதிகளின் துணையுடன் ஈழத்து எழுச்சியை தமிழகத்தில் உருவாக்கினர்.//


அப்போ சிங்கள இராணுவத்தின் குண்டுகளால் தமிழ் மக்கள் இறக்கவில்லையா ? புலிகள் பலி பீடத்தில் வைத்து கழுத்தறுக்கின்றார்களா? அது என்ன எப்போதும் காரணங்களைப் புலிகளுக்கு எதிராக உருவாக்குன்ற உங்களால் உண்மைக்காரணங்களை கண்டறியவே முடியாதா?


அப்போ புலிகள் இதுவரை செய்து வந்த போராட்டம் ஈழ மக்களைக்காத்ததா ? அல்லது அழித்ததா?

//எவ்வளவு மக்கள் பலியாகின்றனரோ, அதுவே தாம் தப்பிப்பிழைக்கும் அரசியல் பிரச்சாரத்துக்க உதவும் என்பது புலி அரசியல். //

இது எப்போது தொடக்கம் புலியரசியல் ஆனது. அப்படியென்றால் ஏறக்குறைய 20 வருடங்களாக புலிகளால் பல காலங்களிலும் விடுவிக்கப்பட்ட பகுதிகளில் விரும்பியோ விரும்பாமலோ வாழ்ந்த மக்களை பலியிட்டுக்கொண்டா இருந்தார்கள்.

அப்போதெல்லாம் எவ்வகை அரசியலை அவர்கள் நடாத்தினார்கள்? அப்படியொரு அரசியலை நடாத்தியவர்களுடனா சர்வதேசமும் பேச்சு வார்த்தை என்று முண்டியடித்தது?

மக்களின் பிரதிநிதிகளாய் இல்லாமல் ஒரு போராளிக்குழுவாகவா அவர்களுடன் பேச்சு வார்த்தை நடாத்தினார்கள்? அப்படி யானால் வேறு எந்த போராட்டக்குழுக்களை வெளிநாடுகளுக்கு அழைத்து பேச்சு வார்த்தைகள் நடாத்தினார்கள்?

தமிழக அரசியல்வாதிகளை இந்த வாங்கு வாங்கிகின்றீர்களே... நீங்களும் அதே அரசியலைத்தானே செய்து கொண்டிருக்கின்றீர்கள். புலிகள் இல்லையென்றால் உங்களுக்கும் எழுதுவதற்கு விடயம் இல்லாது போய்விடுமே?

கம்யூனிஸம் சோஷலிஸம் தான் எழுதுவோம் என்று அடம் பிடித்தால் வாசிப்பதற்குத்தான் ஆள் இல்லாது போகும். ஏனெனில் இப்போது நம் மக்களுக்குத் தேவை "உயிரிஸம்" அதாவது பாதுகாப்பான வாழ்க்கை.

உயிரிற்கே உத்தரவாதம் இல்லாத போது உங்கள் தத்துவங்களை வைத்து குப்பையா கொட்டுவது.

சரி அதை வைத்து மக்களுக்கான வாழ்வாதாரத்தை வழங்கமுடியுமானால் எது எப்படி என்று எழுதுங்கள் மக்களுக்கு வழிகாட்டுங்கள்.

அது எதுவுமே செய்யாது புலிகளைச் சுரண்டிக்கொண்டிருப்பதும் மூளைக்குள் திணித்துக்கொண்ட குப்பைகளை இடைச்சொருகல் இட்டு மேதமைத்தன்மையைக் காட்டுவதும் தான் உங்கள் போராட்டம் என்றால் பாவம் "டோலர்கள்"

//இந்த இந்தியத் தேர்தலை குறைந்தபட்சம் உண்மையான தமிழின உணர்வாளர்கள் யார் என்பதை, அவர்கள் எடுக்கும் முடிவுகள் தான் இன்று தீர்மானிக்கின்றது//

நீங்கள் எழுதியது தான்.

அப்போ இவர்களை எந்தப்பக்கத்தில் சேர்க்கின்றீர்கள்?

"உண்ம்மையான தமிழுணர்வுள்ளவர்களை " தமிழ் மக்களுக்கு எதிரான மகிந்தவின் சிங்கள பேயரசிற்கோ சேலகட்டிய முசோலினி சோனியாவின் பக்கமோ சேர்ப்பீர்கள் ஆனால் நீங்கள் கல்லெறி வாங்குவது தவிர்க்க முடியாதது.

இவர்களை புலி ஆதரவு/ஈழ ஆதரவுப்பக்கத்தில் சேர்த்தால் புலிகளும் அவர்கள் ஆதரவாளர்களும் சரி என்று ஆகின்றது.

நீங்கள் அவர்களுக்கு எதிராக எழுதுவது தவறென்றாகின்றது. உண்மையான தமிழுணர்வு உங்களுக்கு இல்லையென்றாகின்றது.


//இவர்கள் அமைக்கும் எந்தக் கூட்டும், இந்திய விஸ்தரிப்புவாதத்தின் அரசியல் எல்லைக்குள் ஈழத்தமிழனை ஒடுக்கவே செய்யும். இதற்கு மாறாக இந்தப் போலியான பிழைப்புவாத ஆளும் வர்க்கத்தின் தேர்தலை புறக்கணித்து, புரட்சிகரமான வழியில் தேர்தல் பகிஸ்கரிப்பதை தம் அரசியலாக கொண்டு மக்களுக்காக போராடுவது அவசியம். இதன் மூலம்தான், ஈழ தமிழ் மக்களுக்கு, தமிழக மக்கள் அரசியல் உணர்வுடன் உதவிவிடமுடியும். //


உங்கள் கூட்டும் இவர்களுடனா அல்லது உண்மையான தமிழுணர்வாளர்களுடனா?

புரட்சிகரமான வழியில் - அதைத்தான் என்னவென்று சொலுங்களேன் "டோலர்கள்" எங்களுக்கெல்லாம் உங்களைப்போல் அவ்வளவு விபரம் பத்தாதுங்க.

முடிந்தால் புட்டுப்புட்டு வைங்க ..இல்லாவிட்டால் "பித்த" வாந்தியெடுக்கும் பித்தலாட்டங்களை விட்டு விடுவது "தமிழ்" மக்களை தாங்களாகவே முன்னேற வழிவகுக்கும்.



Friday, March 6, 2009

சோனியா சோனியா


வன்னிக்காடுகளில் ஈழத்துத் தமிழரின் பிணங்களை விதைத்து அவர்கள் இரத்தத்தால் பாசனம் செய்கின்றது சோனியாவின் தலைமையில் இயங்கும் இந்திரா காங்கிரஸ் அரசு.

அதற்கு அவர்கள் கூறும் காரணம் இந்தியாவை எதிர்த்தவர்களை ஒழிப்பது இந்தியாவை வல்லரசாக்குவதற்காக. சொன்னாலும் சொல்லாவிட்டாலும் சாதாரண இந்திய மக்களும் அதிகாரிகளும் (பெரும்பான்மை தமிழக மக்களைத் தவிர்த்து) சில தமிழக எட்டப்பர்களும் அவ்வாறே நினைத்துக்கொண்டிருக்கின்றார்கள்.

இத்தகைய நம்பிக்கைகளும் அதனால் வந்தவிசுவாசமும் நேரு குடும்பத்தை இந்தியாவின் முடி மன்னர்களாக்கி வைத்திருக்கின்றது. அவர்கள் எதைச் செய்தாலும் கன்னத்தில் போட்டு பயபக்தியுடன் ஏற்றுக்கொள்ள வைக்கின்றது.

ஆனால் இந்தப்பிம்பங்களைத் தாண்டி இம்முடிமன்னர்களின் முகத்திரையைக் கிழிக்கின்றது இக்கட்டுரை.

இவர்களும் சாதாரணர்களே ( அல்லது அதற்கும் கீழானவர்களே) என்ற உண்மை தெரிய வருகின்ற போது இக்குடும்பம் இத்தாலிக்குகுக் கப்பல் ஏறவேண்டியது தான்.

இவர்களோடு சேர்த்து தேசத்தந்தை மஹாத்மாவையும் கேள்விக்குள்ளாக்குகின்றது.

இத்தேர்தலில் காங்கிரஸை ஒடுக்க நினைக்கும் தமிழக மக்களுக்கு மேலும் தார்மீகச் சுமை கூடுகின்றது.

கட்டுரையாளருக்கு "களவாணி"யின் நன்றி.

சோனியா குடும்பத்தின் வண்ட வாளத்தை அறிய கீழுள்ள இணைப்பை அழுத்துங்கள்.

മഴനൂലുകള്‍ ‍/ Mazhanoolukal: History of Nehru Family

Thursday, March 5, 2009

ஜெ என்ற அரசியல் வியாதி

அ.தி.மு.க (அனைத்து இந்திய திருடர்கள் முள்ளைமாறிகள் கட்சி) தலைமை வரும் 10 ஆந்திகதி இலங்கைத் தமிழர்களுக்காக உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அறிக்கை விட்டிருக்கின்றது.

இந்தியத் தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கின்ற இன்றைய நிலையில் ஈழத்தமிழர்கள் மீது ஏற்பட்டிருக்கின்ற அனுதாப அலையில் அரசியல் நடாத்த வந்திருக்கும் லேட்டஸ்ட்வரவு இது.

ஈழத்துத் தமிழர்கள் குற்றுயிரும் கொலையுயிருமாக சிங்களப் பேய்களால் குதறியெறியப்பட்ட போதெல்லாம் உலகமே அதிர்ந்து போய் அழுது கொண்ட்டிருந்தது. அப்போதெல்லாம் தன் பெட்டைக்கோழியுடன் சரச சல்லாபத்தில் ஈடு பட்டிருந்த இந்த அரசியல் அழுக்கு இப்போது தமிழ் மக்களுக்காக உண்டியல் வைத்து காசு சேர்க்கப்புறப்பட்டிருக்கின்றதாம்.

போர்க்களத்தில் மக்கள் கொல்லப்படுவது சாதாரணமே என்று விதண்டாவாதம் பேசிய இந்தப் பிணம் தின்னிப்பிசாசு சோ சுப்பிரமணிசாமி போன்ற ஓநாய்களுடன் சேர்ந்து ஈழத்துதமிழரின் கதறலையும் ஓலத்தையும் கேட்டு மனங் குதூகலித்ததை நாங்கள் இன்னும் மறந்து விடவில்லை.

மரணத்துடன் கைகோர்த்து வாழ்ந்திருந்தபோதும் மனிதத்தை மறந்து விடாதவர்கள் நாங்கள் . ஆனால் நீயோ மனித வேடத்தில் வாழும் மரணித்து விட்ட பிணம். ஈழத்து மக்களை விட்டுவிடு,...... உன் மண்ணின் மைந்தர்கள் முத்துக்குமார் ஈறாக எத்தனை மாணிக்கங்கள் தீயில் கருகி கரைந்து போயினர். அப்போதெல்லாம் எங்கே போயின உன் இரக்கமும் கருணையும்.

கொள்கைக்காக வேண்டாம் சக மனிதன் இறப்பது பற்றிய சிறு இரக்கம் கூட இல்லாத பேய் நீ இன்னும் இம்மண்ணுக்கும் மக்களுக்கும் தலமை தாங்கும் கனவு வேறுண்டா?

குடும்பம் குழந்தை என்று உனக்கு ஒன்றிருந்தால் அப்போது வன்னி மண்ணைச்சிகப்பாக்கி இறந்துபோன பச்சிளம் பாலகர்களின் கதறல் கேட்டிருக்கும் கணவனை மனைவியைப்பிள்ளையை சகோதரனைப் பறி கொடுத்தவர்களின் ஓலம் கேட்டிருக்கும். உனக்குத்தான் அவையொன்றும் இல்லையே . குடும்பம் என்ற கோயிலின் அருமை பெருமை தெரியாத
தெரு விபச்சாரியாயிற்றே நீ.

திருமணத்திற்கு முன்னால் உறவில் கலப்பது ஒன்றும் குற்றம் அல்ல என்று சொன்ன குஷ்புவை ஓட ஓட விரட்டிய இந்த தெருமாக்கள் ஓரினச் சேர்க்கையை உலகம் தெரியச் செய்யும் இவ்விபச்சாரத்துடன் கை கோர்க்கவும் ஓட்டுக்கேட்கவும் எப்படி முடிகின்றது உங்களால்.

அன்று கற்புக்கரசி கண்ணகி என்றும் ஒருவனுக்கு ஒருத்தி என்பதும் தமிழ்ப்பண்பாடு பற்றிப்பேசியும் தூக்கியும் பிடித்த உங்களால் எப்படி காமப்பிசாசும் லெஸ்பியனும் ஆன ஒரு பெண்ணை உங்கள் தலைவியாகக் கொண்டாட முடிகின்றது.

இந்த 21 ஆம் நூற்றாண்டிலும் காலில் விழும் கலாச்சாரத்தை ஏற்றிப்பிடித்து பேடிப்பெண்கள் போல் காலில் விழும் மாக்களையெல்லாம் எப்படி உங்கள் மாண்பு மிகுக்களாக்க முடிகின்றது. ஏறுபோல் நடக்க வேண்டியவர்கள் எல்லாம் கூனிக்குறுகி காலில் விழும் கொத்தடிமை வழக்கம் கண்டும் மெத்தப்படித்த தமிழ் நாட்டு மேதைகளும் வல்லரசுக் கனவில் இந்தியாவை உந்திக்கொண்டிருக்கும் இளைஞர் பட்டாளமும் என்ன சிரைத்துக் கொண்டிருக்கின்றீர்கள்.

உங்கள் மூளையையும் திறத்தையும் போற்றும் எவரும் எங்கும் இந்த தமிழக ஈன நிலை கண்டு எள்ளி நகையாடுவதைக்கூட நீங்கள் புரிந்து கொள்ளவில்லையா?

எத்தனயோ மேன்மைகளில் அமெரிக்கா முதல் உலகநாடெங்கனும் முதன்மைப்பணியாற்றும் உங்களால் இச்சின்னம் சிறு தமிழ் நாட்டின் சிறுமையும் பிணியும் நீக்கும் செயல்களில் ஈடு பட முடியாது போய்விட்டதோ?

"நெஞ்சில் உரனும் இன்றி நேர்மைத் திறனும் இன்றி .." நீங்கள் தான் அவர்களோ?

செத்து விழும் சிறு மனிதர்களில் இரக்கம் கொள்ளாத இந்த அரசியல் வியாதி தன் கட்சியின் வெற்றிக்கு ஈழத்து இரத்தத்தை க்குடித்து நிணத்தை புசித்து ஈழ ஆதரவுப் பாசாங்கு நடாத்த வந்திருக்கின்றது.

பிணந் தின்னிப்பிசாசுகளின் நிணம் புசிக்கும் இவ்வரசியலை வேரறுக்க வேண்டிய காலத்தின் கட்டாயத்தில் மக்கள் நாங்கள் இருக்கின்றோம். மாற்றம் என்பதைத் தவிர அனைத்தும் மாறும் என்ற நம்பிக்கையில் சென்ற நூற்றாண்டின் அழுக்குகளையும் சிதைவுகளையும் இன்னும் தூக்கிப்பிடிக்கத் தேவையில்லை.

மாற்றம் ஒன்று வேண்டும் தமிழகத்திற்கு. அதைக்கொண்டு வரும் முயற்சியில் ஈடு படுவோம். இந்தத் தேர்தல் நமக்கு ஒரு நல்ல வாய்ப்பு. அரசியலில் பிணந்தின்னும் கழுகுகளையும் வல்லூறுகளையும் களையெடுக்கும் நேரம் இது.

"புதிய தலைமை புதிய தமிழகம்" இதுவே இன்றைய தேர்தல் கோஷமாயிருக்க வேண்டும். ஓட்டுக்காக ஈனம் செய்யும் இவ்விழி பிறப்பின் மேல் ஏற்பட்ட கோபம் வார்த்தைகளைக் கடுமையாக்கி விட்டது. என்னைப்போல் ஒவ்வொரு தமிழனின் கோபமும் வெளிப்படையாகத் தெரிய வேண்டும் என்பதனால் அப்படியே விட்டு விடுகின்றேன். வாசிக்கவும் அஜீரணமாகவும் கஸ்டப்பட்டவர்களிடம் அதற்காக மன்னிப்பும் கேட்டுக் கொள்கின்றேன்.

"தாங்க முடியவில்லை ஐயா"

(வெறுப்பு எவ்வளவு என்றால் அந்தப்பெண்ணின் படத்தைப்போடுவதற்கும் பார்ப்பதுக்கும் விருப்பில்லாத அளவில் ... ஸோ படம் மிஸ்ஸிங்)

Wednesday, March 4, 2009

தேர்தல் சூடு -என் பார்வையில்


இந்திய தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கின்றது. கட்சிகள் எல்லாம் அணி சேருவதிலும் மாறுவதிலும் தேடுவதிலும் களேபரப்படுத்திக் கொண்டிருக்கின்றன.

தேசியக்கட்சிகள் மத்திய ஆட்சியைக்கைப்பற்றுவது பற்றி யோசித்துக்கொண்டிருக்கையில் மாநிலக்கட்சிகள் மாநிலங்கள் அவையைக் கையகப்படுத்துவது பற்றி வியூகங்கள் வகுக்கின்றன. இவற்றுக்கிடையே உதிரிக்கட்சிகள் அதிக சீட்டுகள் தரக்கூடிய கூட்டணிகளைத் தேடிக்கொண்டிருக்கின்றன. ஏதோ ஏழைக்கேற்ப எள்ளுருண்டை.

இந்தியாவே குலுங்கிக்கொண்டிருந்தாலும் என் பார்வை தமிழக அரசியலை மட்டும் வலம் வருகின்றது.

அ.தி.மு.க வும் தி.மு.க வும் ப்ழம் தின்று கொட்டை போட்ட கட்சிகள் உள்ளூர் கூட்டணியை ஒழுங்கு படுத்திக்கொண்டிருக்கும் போதே மத்திய மந்திரிசபையிலும் கண்வைத்திருப்பன. மத்திய அரசுடன் ஒத்துப்போவதன் மூலம் முழுமையான ஐந்தாண்டு ஆட்சியைத்தக்க வைக்கும் தந்திரத்தை யும் அறிந்து வைத்திருக்கின்றன.

கடந்து காலங்களில் கலைஞர் ஆட்சி பலமுறை ஆட்சிக்கலைப்பில் நொந்து நூலாகிப்போய் கற்றுக்கொண்ட தந்திரம் இது. ஜெயாவிற்கும் இது ஒரு பிரஸ்டீஜ் பிரச்சினை + தன் மேலுள்ள ஊழல் வழக்குகளை இழுத்தடிக்க மத்திய அரசிற்குக்குக் கொடுக்கும் அழுத்தங்களுக்கும் தேவையாயிருக்கின்றது.

மத்தியில் ஆட்சியமைக்கக்கூடிய வாய்ப்புள்ள கட்சிகளில் பா.ஜ.கவின் மத சார்புள்ள குண்டாஸ்களின் அதிரடி நடவடிக்கைகள் அதிகளவில் சிறுபான்மையினரின் வெறுப்பைச் சம்பாதித்து வைத்திருக்கின்றது. அதன் காரணமாகவே சேலை கட்டிய முசோலினி சோனியாவின் - (வார்த்தை உபயம் ம.தி.மு.க கொள்கை பரப்புச் செயலாளர் நாஞ்சில் சம்பத் )-அது சரி இவரையும் கைது செய்து விட்டார்களா அல்லது இல்லையா?_ காங்கிரஸில் இணைந்து கொள்ள இரண்டு தி.மு.க வும் முயற்சி செய்கின்றன.

தி.மு.க இலங்கைத்தமிழர் விவகாரத்தில் தங்கள் இஷ்டம் போல் -அதுதாங்க இராஜீவ் சோனியா மன்மோகன் மற்றும் உள்ளூர் தங்கபாலு போஸ்டர்களை செருப்பால் அடித்தவர்களையும் உருவப்பொம்மைகளைத் தீயிட்டவர்களையும் வாரி சிறைகளை நிரப்பவில்லை -நடக்கவில்லை என்ற அதிருப்தியில் இருக்கின்றது. இதை நன்கு அறிந்து கொண்ட அ.தி.மு.க ஈழத்தமிழர் என்ற இனமேயில்லை இலங்கைத்தமிழர் என்று அழைக்கவேண்டும் என்ற புதுக்கண்டுபிடிப்புடன் அறிக்கை விட்டது. அது என்னவோ முனை மழுங்கிப்போய் விட்டாலும் அது கிளப்பிய அதிர்வுகள் தமிழ் நாட்டுக்காங்கிரஸை ஈர்த்ததென்னவோ உண்மை.

அதுவே சோனியாவின் காதுகளுக்குப்போக நிலமை சீர் தூக்கிப்பார்க்கப்படுகின்றது. ஜெ சோனியாவை வெளி நாட்டுப்பிரஜை என்று திட்டித்தீர்த்தது சரியான நேரத்தில் மு.க வால் ஞாபகப்படுத்த்ப்பட்டிருக்கின்றது.
கலைஞர் ஆட்சியில் சிறு சிறு சலசலப்பென்றால் ஜெயினால் தலைக்கு வரக்கூடிய கத்தியும் நினைத்துப்பார்க்கப்படுகின்றது.

இந்தத் தேர்தலில் ஈழப்பிரச்சினை பெரும் தாக்கத்தை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. ஈழப்பிரச்சினையில் ஒன்று சேர்ந்த கட்சிகள் வெவ்வேறு அணிகளில் இருப்பது ஒரு பின்னடைவாகும். ஈழப்பிரச்சினையைப்போலவும் காங்கிரஸ் மீதிருக்கும் தமிழக மக்களின் அதீத வெறுப்பும் இம்முறை வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கப்போகின்றது.

காங்கிரசைக் கருவறுக்கும் ஆசை உள்ளூர இருந்தாலும் ஓட்டு வங்கியைக் குறிவைக்கும் கட்சிகளின் ஆசையால் இவை எதுவுமே சாத்தியமாகாதும் போகக்கூடும்.

வை கோ ஜெயாவுடன் ஒட்டியிருப்பதே பாதுகாப்பு என்ற மனவோட்டத்தில் இருக்கின்றார். பா.ம.க வும் திருமாவும் கழுதை கெட்டால் குட்டிச் சுவர் என்று
தி. மு.க தங்களை அழைக்காதா என்ற எண்ணவோட்டத்தில் இருப்பதாகத் தெரிகின்றது.

விஜய காந்த் வாய்ச்சவடால்கள் பலிக்காது போய்விட கஜானாவும் காலியாக தனித்துப்போட்டியென்ற மாஜையில் இருந்து இறங்கி வருவதாகத் தெரிகின்றது. யாருடன் இணைந்து போட்டி என்பதற்கும் முன்னால் இணைவா? தனித்தா ? என்பதில் கூட முடிவெடுக்கத் திணறுபவருடன் இணைந்து கொள்ள கட்சிகள் தயக்கம் காட்டுகின்றன.

தமிழக காங்கிரஸில் உதிரிகளாகப் பல கோஷ்டிகள் இருந்தாலும் எதைக்காட்டினாரோ என்ன செய்தாரோ தங்க பாலுவின் கை ஓங்கியிருக்குக்கின்றது. சே .க. முசோலினி தங்கபாலுவையே பெரிதும் நம்புகின்றார். அ.தி.மு.க வுடன் சேருவதை உள்ளிருக்கும் சில ர் விரும்பவில்லை என்று தெரிகின்றது. "அந்தம்மா" "இந்தம்மா" என்று எத்தனை அம்மாக்களுக்குப் பயப்படுவது என்பதுவும் பழைய கசப்புகளும் அவர்களை விரட்டுகின்றது.

இதற்கிடையில் ஈழப்போராட்டம் சார்பிலான எழுச்சி புதிய புதிய எதிர்பார்ப்புக்களை மக்கள் மனதில் உருவாக்கியிருக்கின்றது. சீமானைத் தலைவராக்குவோம் என்றும் ஒரு கோஷம் எழுப்பப்படுகின்றது. ஈழ ஆதரவு என்பதும் கட்சி அரசியல் என்பதுவும் வேறு வேறானவை என்பதை இவர்கள் புரிந்து கொள்கின்றார்களில்லை.

தமிழக மக்கள் நலவாழ்விற்கு சீமானால் என்ன செய்து விட முடியும்? அவரின் கொள்கை என்ன? தனி மனிதரால் என்ன மாற்றத்தைக்கொண்டுவரமுடியும். சிறைக்கும் வீட்டிற்கும் மாறிக்கொண்டிருக்கும் இவரால் தேர்தல் பிரச்சாரங்களை செய்ய முடியுமா? அதற்கும் முன்னால் அவரின் விருப்பங்கள் தான் என்ன? என்ற கேள்விகளுக்கு விடைகள் தெரிய வேண்டும்.

தேர்தலுக்கு மிகக் குறுகிய காலமே இருக்கும் இவ்வேளையில் ஒரு கட்சியை அமைப்பதும் தேர்தலை எதிர்கொள்வதும் சிரமமான காரியங்களே. இவற்றையெல்லாம் தீர்மானிக்காத ஆர்வக்கோளாறுகள் பயனளிக்கப்போவதில்லை.

ஈழத்தமிழர் சார்பாக எழுந்த பேரெழுச்சியைக்கூட இவர்களால் வழி நடாத்தவோ ஒன்று சேர்க்கவோ முடியவில்லை என்பதுவும் கட்சி அரசியலுக்கு அப்பால் யோசிக்கும் திறன் எந்த அரசியல்வாதிக்கும் இல்லை என்பதுவும் வழமை போல ஒரு சாதாரணத் தேர்தலாகவே இது அமையப்போகின்றது.

Tuesday, March 3, 2009

குறொஸ் பயர் அல்லது இந்துப் புலிகள்


நண்பன் ஒருவனுடன் பேசிக்கொண்டிருந்தேன். கதை லாகூரில் நடைபெற்ற சிறீலங்கா கிரிக்கெட் வீரர்களின் மீதான தாக்குதல் பற்றித் திரும்பியது. என்ன நோக்கமாக இருக்கும் என்று நண்பன் வினாவினான். தாக்குதலை நடாத்தியது அவர்கள் எண்ணுவதைப்போல லக்சர்-இ-தொய்பாவாக இருந்தால் அடிப்படை வாத முஸ்லீம்களின் விருப்பமான மேலைத்தேய கலாச்சாரச் சின்னங்களை புறந்தள்ளும் எண்ணத்தில் கிரிக்கெட்டையும் தடை செய்ய எண்னியிருக்கலாம் என்றேன்.

அவன் சிரித்து விட்டுச் சொன்னான் "உலகம் தெரியாத பயலாய் இருக்கிறாயே " என்று.

என்னவென்று கேட்டேன். " கிரிக்கெட்டைத்தடை செய்ய வேண்டுமென்றால் முதலில் பாகிஸ்தான் வீரர்களின் மீது கைவைப்பது நியாயமாய் இருக்கும். சுலபமானதும் கூட . அப்படிச்செய்தால் விளையாடுவதற்குப்பயப்படுவதைப்போல் கிரிக்கெட்டைப் பர்ப்பதற்கும் இவர்களை (தாலிபான்களை) மீறிச் செல்வதற்கு யாருக்கும் துணிபு வராது. விளையாடுவதற்கோ பார்ப்பதற்கோ யாரும் இல்லையென்றால் பாகிஸ்தான் கிரிக்கெட் உலகத்தில் இருந்து மறக்கடிக்கப்பட்டு விடும்.... " சொல்லிவிட்டு சிறிது நிறுத்தினான்.

அதுதானே .. என்பதைப்போல அவனைப்பார்த்தேன். அவன் சொல்வது சரியெனப்பட்டது. அப்போ என்ன காரணம். அவன் சொல்லும் வரை பேசாது இருந்தேன்.

"யாருக்கு இதனால் இலாபம் இருக்கக்கூடும்.." கேட்டு விட்டு நிறுத்தினான். " நிச்சயமாகப் புலிகளுக்கு கிடையாது. மேலும் அவர்கள் இருக்கும் சண்டை மும்முரத்தில் தங்களைக்காத்துக்கொள்ளவே நேரம் போதாதிருக்கின்றது." ..ம் ..கொட்டியபடி கேட்டுக்கொண்டிருந்தேன்.

" சிறீ லங்கா கூட தன் நாட்டு வீரர்களுக்கு ஆபத்து ஏற்பட்டும் அடக்கி வாசிக்கின்றது..ஏதோ தர்மத்துக்கும் நீதிக்கும் கேடு வந்தது போலவும் யாரும் இப்படி நடந்து கொள்வது சரியில்லை என்பது போலவும் மென்மையாக சொல்கின்றது.."

அவன் கூறி முடிக்க முன்னர் இடை மறித்தேன் "பாகிஸ்தான் கொடுக்கின்ற ஆயுதங்கள் ராஜபக்ஸேக்கு பிரதானம் என்பதால் ...பாகிஸ்தானைப் பார்த்து பாய்ந்து குதறமுடியாது ..ஈனஸ்வரத்தில் குரைத்து வாலை ஆட்டுகின்றது" என்றேன்.

" அது மட்டுமல்ல இன்று சிறீலங்காவில் ஒரு இனக்கலவரமே வெடித்திருக்கும் ..இலங்கையில் இருக்கும் இஸ்லாமியருக்கு எதிராக.. 13 இரானுவம் இறந்ததற்கே இனக்கலவரம் உருவாக்கியவர்கள் அல்லவா?" என்றவன் தொடர்ந்தான்.

"எனது சந்தேகம் எல்லாம் இந்தியா மீது தான் " என்று விட்டு இடை நிறுத்தினான்.

"என்னது .." ஆச்சரியத்தில் நம்பமுடியாது கத்தியே விட்டேன். சம்பவம் நடந்தது பாகிஸ்தானில் ... அகப்பட்டுக்கொண்டவர்கள் சிறீலங்கன் கிறிக்கெட்டர்கள். இதில் இந்தியா எங்கே வந்தது.

நண்பன் தொடர்ந்தான். "இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இருப்பது நீண்ட காலப்பகை.. அடிப்படை வாதம் மிக ஊறியிருக்கும் நாடு பாகிஸ்தான் ..அதன் நம்பகத்தன்மை மிக மோசமாக இருந்தாலும் பயங்கர வாதத்திற்கு எதிரான தோழமை நாடுகளின் முன்னணியில் அமெரிக்காவால் அரவணைத்துச் செல்லப்படுவது.... இதையே சாதகமாக வைத்து புஸ்ஸின் ஆட்சிக்காலத்தில் மும்பாய்த் தாக்குதல் உட்பட பல அத்து மீறல்களைச் செய்து இந்தியாவின் கோபத்தை கிளறிவிட்டிருந்தது.

புஸ் இருக்கும் வரை இந்தியாவால் பாகிஸ்தானிற்கு எதிராக எதையுமே செய்யமுடியவில்லை. அனைத்துக் காரியங்களிலும் பாகிஸ்தானை அமெரிக்கா காபந்து செய்து கொண்டிருந்தது.

ஆனால் அமெரிக்க அதிகாரம் மாறியதில் இருந்து பாகிஸ்தான் மீதான கண்ணோட்டமும் முழுவதுமாய் இல்லாவிட்டாலும் சிறிது மாறியிருக்கின்றது. ஒபாமா லாகானைச் சற்று இறுகப்பிடித்திருக்கின்றார். இத்தனை காலமும் ஆப்கானிஸ்தானிலிருக்கும் தாலிபான்களை ஒடுக்கமுடியாது இருப்பதற்கு பாகிஸ்தானின் பின் புலத்தில் இருந்து கிடைக்கும் உதவிகள் காரணம் என்று நினைக்கின்றார். அதனாலேயே பாகிஸ்தான் ஸ்வாற் பள்ளத்தாக்கெங்கும் தன்னிச்சையாக குண்டுகளை அமெரிக்கா பொழிந்து தள்ளுகின்றது.

இப்போது ஏதாவது இசகு பிசகாகச் செய்தால் அமெரிக்காவின் கோபத்துக்கு ஆளாக வேண்டும் என்பது பாகிஸ்தானுக்கும் நன்கு தெரிந்திருக்கின்றது. அதனாலேயே தன்னாலான உதவிகளை அமெரிக்கா கேட்காமலும் செய்யவும் தயாராயிருக்கின்றது. அமெரிக்காவின் நல்லெண்ணத்தை இழக்க பாகிஸ்தான் தயாராக இல்லை" சொல்லி விட்டு நிறுத்தினான்.

"எல்லாம் சரிதான் இதில் இந்தியா எங்கே வந்தது" அவன் தொடர்ந்து சொல்லவேண்டி கேள்வியொன்றை வீசினேன்.

என்னை நிமிர்ந்து பார்த்து விட்டுத் தொடர்ந்தான்... " பாகிஸ்தானின் இந்த சங்கடத்தை இந்தியாவும் உணர்ந்திருக்கின்றது. தனக்கெதிரான தாக்குதல்களுக்குப் பழிவாங்க ஒரு சந்தர்ப்பத்தைத் தேடிக்கொண்டிருந்தது. இந்தியாவின் பிராந்திய வல்லரசுக்கனவுக்கு பாகிஸ்தான் இன்று இடைஞ்சலாக இருக்கின்றது. இந்தியாவின் நட்பு நாடு எதிரி நாடு எதையும் விடாமல் தேடிப்போய் உதவி செய்கின்றது. அந்த வகை உதவி பெறும் நாடு ஒன்று தான் சிறீலங்கா. பாகிஸ்தானின் சிறீலங்காவிற்கான உதவியை நிறுத்தவும் இரண்டு நாடுகளையும் எதிராளியாக்கவும் ஒரே கல்லில் இரண்டு மாங்காய்." சொல்லி விட்டு என்னைப்பார்த்தான்.

" நீ சொல்வது ஒரு விதத்தில் சரிதான் ..அதுதான் இந்தியாவும் அளவு கணக்கில்லாமல் சிறீலங்காவிற்கு ஆயுத உதவி செய்கின்றதே" என்று ஒரு எதிர்க்கேள்வியைப்போட்டேன்.

சிரித்து விட்டுத் தொடர்ந்தான் " நீ சொல்வது சரிதான் ஆனால் தமிழ் நாட்டில் இப்போது வலுத்து வரும் போராட்டங்களில் மக்கள் உணர்வுகளை மீறிப் போவதற்கு தோழமைக் கட்சிகளால் முடியாத நிலை . அந்த நிர்ப்பந்தத்தால் அவை ஏற்படுத்துகின்ற பிரஷர்.. மாநிலக் கட்சிகளின் உதவியில்லாது தனித்துப் போட்டியிட்டு ஆட்சி அமைக்கும் நிலை இன்று இல்லை என்பது நன்கு உணரப்பட்டிருப்பது .. இது இலங்கை விடயங்களால் ஏற்படும் பின்னடைவு என்றால் பாகிஸ்தானை மட்டந் தட்டி வைக்க வாராது வந்திருக்கும் சந்தர்ப்பம் ..ஒபாமாவின் ஆட்சி."

" ஒரு கல்லில் இரண்டு மாங்காய்" என்றேன்.

அதே தான் ... தாக்குதல் இலக்கு சிறிலங்கா கிரிக்கெட் வீரர்கள். தாக்குதல் இடம் லாகூர் பாகிஸ்தான். ஆனால் தாக்குதல் நடாத்தியவர்கள் இந்தியாவில் இருந்து விசேடமாக அனுப்பப்பட்ட பயிற்சி பெற்றவர்களா? அல்லது பணத்திற்காக வாங்கப்பட்ட கராச்சியின் கொலைகார மாபியாக் குழுவா ?என்பது தான் இன்னும் புரியவில்லை. இதில் இந்தியாவின் அதிர்ஷ்டம் ஒருவரும் பிடிபடாதது. பாகிஸ்தானின் துரதிர்ஷடமும் அதுவே தான்.

" அப்போ நான்கு பேர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்படுவது ?' எனது கேள்வி. அது பாகிஸ்தானின் நிர்ப்பந்தம் தன் மண்ணில் நடந்த பழிக்குப்பரிகாரம் செய்ய வேண்டுமே. தனக்குத் தெரியாமல் "எப்படி என்று" குழம்பிப்போய் இருக்கின்றதும். மற்றைய காரணம்...

பாகிஸ்தான் குழுக்களின் நடவடிக்கைகள் இராணுவத்திற்கோ அரசுக்கோ தெரியாமல் நடை பெறுவதில்லை. உதாரணம் மும்பாய் தாக்குதல் தடயங்களை அழிக்க பாகிஸ்தான் அரசு எடுத்த நடவடிக்கைகள் மற்றும் அல்மல் காசாப்பைக் காப்பாற்ற அல்லது பாகிஸ்தானுக்கு கொண்டு செல்ல எடுக்கும் நடவடிக்கை.

பாகிஸ்தானில் சந்தேகம் ஏற்படாமைக்கு காரணம்.. எல்லா நாடுகளும் பாகிஸ்தானுக்குச் செல்ல மறுத்தபோதும் சிறிலங்கா வலிந்து சென்று உதவியமை. மற்றது இந்தியாவை எதிர்க்கும் நோக்கில் சிறீலங்காவை தன் அணியில் சேர்க்கும் பகீரத முயற்சியில் இருப்பது.

இந்தியா மீது சந்தேகம் ஏற்படக் காரணம் .. சிறீலங்காவிலிருந்து தமிழ் நாட்டூடாக பயங்கரவாதிகள் இந்தியாவிற்குள் புகுவார்கள் என்ற அரசிய்ல்வாதிகளின் மிகச்சமீபத்தைய அறிக்கைகள்.

தாக்குதல் வெற்றி நூறுசதவீதம் எதிர்பார்க்கப்பட்டிருக்கின்றது. பாவிக்கப்பட்ட ரொக்கட் லோஞ்சர் உட்பட்ட பயங்கர ஆயுதங்கள் இதற்கு ஆதாரம். வெறும் துப்பாக்கியுடன் இருந்த 10 பொலீசாருக்கு அது அதிகம். அந்த பஸ்ஸில் மிகப்பெரிய அதிகாரிகளோ அரசியல் வாதிகளோ இருந்திருக்கவில்லை."

அவனை இடைமறித்துச் சொன்னேன் "சரி விசாரணைகள் தொடங்கியிருக்கின்றது. விரைவில் உண்மைகள் தெரிந்து விடும்."

அவன் சென்ற பிறகும் யோசித்துக் கொண்டிருந்தேன். என்ன பயங்கர உலகம் இது.

புலிகள்= அரசியல்+ கிறிக்கெட்




காலை எட்டு மணி . இலங்கை வெளிவிகார அமைச்சு பரபரப்புடன் இருந்தது. வந்த செய்தி அப்படி. இரகசிய செய்தி மெதுவாகக் கசியத் தொடங்க அலுவலகம் முழுவதும் பரபரப்புத் தொற்றிக்கொண்டது. காலையில் வேலைக்கு வந்தவர்கள் மரத்தடி கன்ரீன் என்று இடம் கிடைத்த இடத்தில் எல்லாம் கூடி நின்று விவாதிக்கத்தொடங்கி விட்டிருந்தார்கள். புதிதாக உள்ளே வந்தவர்களிடம் கேற் காட்டினால் இரகசியம் கசிய விடப்பட பரபரப்புடன் விரைந்து கூட்டத்தில் கலந்து விடயம் உள்வாங்கப்பட்டுக்கொண்டிருந்து. விடயம் முழுதாகத் தெரியாவிட்டாலும் "ஹொட்டியா அடித்து விட்டது" என்ற அளவில் விடயம் பிடிபட செல்போனின் நம்பர் சுழட்டப்பட கொழும்பு நகரம் எங்கும் கிலி பிடித்துக் கொண்டது.

வீரர்களின் உறவினர்கள் பீதியில் உறைந்து போயிருந்தார்கள். சிலர் புலிகளைத் திட்டவும் வேறு சிலர் அவர்கள் "தில்"லை கிலாகிக்கவும் ..கதை.. கண் காது மூக்கு வைத்து எல்லோர் வாயிலும் நுழைந்து விசுவரூபம் எடுத்துக்கொண்டிருந்து.

கேள்விகள் பதில்கள் விளக்கங்கள் என்று என்று கதை வேகமாக பரவிக்
கொண்டிருந்தது.

மணி 8.30..... உள்ளே உயரதிகாரிகள் கையைப்பிசைந்து கொண்டிருந்தார்கள்.
வெளிவிவகார அமைச்சரும் ஜனாதிபதியுடன் நேபாளத்திற்குப் போயிருக்கையில்.. அழைத்த தொலைபேசிக்கு ஹோட்டல் உதவியாளனிடம் இருந்து தான் பதில் வந்தது.

"இரவு முழுவதும் கொண்டாட்டத்தில் இருந்ததில் காலை 9 மணிக்கு முன்னர் தொந்தரவு செய்யவேண்டாம் என்ற அறிவிப்பு " சொல்லப்பட்டது.

எங்கே போனாலும் குடி கூதி... அவர்களின் அதிர்ஷ்டத்தின் மேல் பொறாமையாகவும் எரிச்சலாகவும் இருந்து. "ஏன் உடனேயும் சொல்லவில்லை"
என்று பின்னால் காணப்போகும் குடிகாரக்கன்களின் சிகப்பு இப்போதே பயமுறுத்தியது.

தொலைபேசி உள்ளூர் கனவான்களை நோக்கி சுழட்டப்பட்டது. இங்கேயும் அதே கதை. அவர்கள் தலையைப்பிடித்தபடி உட்கார்ந்திருந்தார்கள்.

ஹொட்டியா பிளேனில் சென்றிருக்கக் கூடும் என்று ஒரு சாராரும் அவர்களுக்குச் சொந்தமான கப்பலில் சென்று படகில் கரை இறங்கியிருக்கலாம் என்றும் தங்களுக்குள் அடித்துக் கொண்டாரகள். சிலர் இதை வைத்தே பந்தயம் கட்டி காசு பார்க்கப் பார்த்தார்கள்.

வெளி விவகார அமைச்சில் உறவினர்களைக் கொண்டவர்கள் அடிக்கடி அங்கே தொடர்பு கொண்டு நிலமையின் தீவிரத்தை ரன்னிங் காமண்ரியாகக் கொடுத்துக்கொண்டிருந்தார்கள். கதையைத் தீவிரப் படுத்தி தங்களைச் சுற்றி ஒரு கூட்டத்தை வைத்துக் கொண்டார்கள். அன்று அவர்களின் நிறைவேறாத ஹீரோ
கணக்கு நிறைவேறியதில் வரப்போகும் செல்போன் பில் கூட துச்சமாகத் தெரிந்தது.

மணி 9.30 ... அமைச்சர் தொலைபேசியில் கிடைத்தார். இரவி இறங்கிய சீவாஸ் றீகலின் காரத்தில் இன்னும் தொண்டை கமறியது. செய்தியைச் சொன்ன உயரதிகாரி ஹொட்டியாவின் மேல் தனக்கிருக்கக் கூடிய சந்தேகத்தையும் காதில் போடத் தவறவில்லை.

இப்போது எழுந்திருக்கின்ற இந்தியாவின் ஒப்புக்குச்சப்பாணி கோரிக்கைகளையும் மேற்குலகின் ஐக்கிய நாடுகள் தீர்மானம் போன்ற கெடுபிடிகளையும் தவிடு பொடியாக்கக் கூடிய அஸ்திரம் இங்கே ஒளிந்திருப்பதையும் விலா வரியாகப் புட்டுப்புட்டு வைத்தார். அப்படியே தன் பதவியுயர்வு பற்றியும்....

அதியுயர் ஜனாதிபதியை அணுகவே அமைச்சருக்குப் பயமாக இருந்தது. 8 மணிக்கு முன்னால் நடந்த செய்தியை 10 மணிக்குச் சொல்லும் மதியூக மந்திரியைத் திட்டித் தீர்க்காமல் என்ன செய்வார்? ஒரு கடும் பொழுதில் "குடிகார நாயே" என்று கேணைத்தனமாக பேச்சு வாங்கியது இன்னும் உறுத்திக் கொண்டிருந்தது.

உத்தம ஜனாதிபதியும் கால நேர வர்த்தமானங்களை அறிந்து கொள்வதற்கு முன்னர் ஹொட்டியாவின் உச்சிக்குடுமியைப் பிடித்து ஆட்டுவதற்கான சந்தர்ப்பமாக தானே தன் சிந்தனையால் சொல்லுவதாக படம் போட்டு காட்டி விபரித்தார்.கேட்டுக்கொண்டே இருந்த அதி உத்தமரின் முகத்தில் புளகாங்கித புன்னகையை கண்டதும் "அப்பாடா " என்று ஆறுதலாகவிருந்தது. நீண்ட காலம் கண்வைத்திருந்த கப்பல்துறையையும் தன் கையகப்படுத்தும் திட்டத்தையும் கூறிவிடலாம் என்ற நம்பிக்கையும் வந்தது.

அடுத்து காரியங்கள் மளமளவென்று நடந்தன. பக்ஸுகளிம் இ மெயில்களும் உலகம் முழுவதும் பறந்து களைத்தன. அடுத்த ஐந்தாவது நிமிடம் இந்திய அமைச்சர் "வங்காளப் புளி" பிரணாப் முகர்ஜி தொடர்பில் இருந்தார்.

இலங்கை வெளிவிவகார அமைச்சர் ரோகித போகல்லாகம சொல்லச் சொல்ல வேறு ஒரு கணக்குப் போட்டார். புலிகளை இதற்குள் இழுத்து சிறீலங்காவின் புகழ் மேன்மையடைய போகல்லாகம சொல்லிய திட்டங்களை மாற்றிப்போட்டுப் பார்த்தார்.

பொகல்லாகம தொலைபேசியை வைத்ததும் வேறு ஒரு கதை பரவியது. இந்திய தொலக்காட்சிகள் எல்லாம் வீடியோவுடன் படங் காட்டின. இந்தியா புலிகளை மாற்றீடு செய்து லக்ஷர்- இ- தொய்பாவை வில்லனாகக் காட்டியது. இனி அமெரிக்காவுடன் இன்னும் நெருங்கி விடலாம் என்ற நம்பிக்கையுடன் இந்திய உள்துறை அதிகாரிகள் கை குலுக்கிக் கொண்டிருந்தார்கள்.

இதை எப்படி தேர்தல் வெற்றியாக மாற்றலாம் என்று இந்திய அரசியல்வாதிகள் தலையைப் பிச்சுக்கொண்டிருந்தனர். இனி அறிக்கைகள் பறக்கும்.

லேட்டஸ் செய்தி 1: பா. ஜ. க கண்டன அறிக்கையில் முந்திக்கொண்டு விட்டது.(முதல் அறிக்கை)

லேட்டஸ் செய்தி2: சிறீலங்கா வெளிவிவகார அமைச்சர் முகர்ஜியை மீண்டும் தொடர்பு கொண்டபோது "அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா" என்று சொன்னதாகக் கேள்வி.

Monday, March 2, 2009

இவர்கள் இப்படி

முதல்வர் கருணாநிதி:

Karunanidhi

"விடுதலைப் புலிகளின் போர் நிறுத்தத்தை ஏற்று, இலங்கை அரசும் போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி பேசியிருப்பது நெஞ்சத்து அனலைத் தணித்து ஆறுதல் பூங்காற்றாய் வீச செய்திருக்கிறது என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்."


இலங்கை வெளிவிவகார செயலாளர் கலாநிதி பாலித கோஹண:

விடுதலைப் புலிகளுடன் யுத்தநிறுத்தம் மேற்கொள்ளுமாறு இந்தியாவால் புதிதாக விடுக்கப்பட்ட அழைப்புகளை கொழும்பு நேற்று ஞாயிற்றுக்கிழமை நிராகரித்துள்ளது.

சரணடையுமாறு சர்வதேச ரீதியாக விடுக்கப்படும் கோரிக்கைகளை விடுதலைப்புலிகள் ஏற்றுக்கொண்டால் யுத்தநிறுத்தம் தேவைப்படாததாக அமையும் என்று வெளிவிவகார செயலாளர் கலாநிதி பாலித கோஹண ஏ.எவ்.பி. செய்திச் சேவைக்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளார்.

புலிகள் ஆயுதங்களை கீழே வைத்தால் சண்டை இராது. மோதல் தானாகவே நின்றுவிடும் என்று கலாநிதி கோஹண கூறியுள்ளார்.

மோதல்களை நிறுத்துமாறு இந்தியா நேற்றுமுன்தினம் சனிக்கிழமை விடுத்திருக்கும் அழைப்புத் தொடர்பாகவே பாலித கோஹண இதனை தெரிவித்திருக்கிறார்.

இலங்கையில் மனிதாபிமான நெருக்கடி தொடர்பாக இந்தியா ஆழ்ந்த கவலை அடைந்துள்ளது என்று தூத்துக்குடியில் வைத்து இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியிருந்ததுடன் ஒவ்வொரு நாளும் நெருக்கடி தீவிரமடைந்து வருவதாகவும் கூறியிருந்தார்.

முதல்வர் கருணாநிதி:

Karunanidhi

இலங்கையில் உள்ள அனைத்து தரப்பு மக்களின் நலனுக்காக இந்தியாவின் இந்த பொறுப்பான வேண்டுகோளை இலங்கை அரசும், மற்றவர்களும் ஏற்று கொள்வார்கள் என்று நம்புகிறேன்''.

பிரணாப் இப்படி பேசியது மட்டுமல்ல; டெல்லியிலிருந்து அறிக்கையாகவும் இதை வெளியிட்டிருக்கிறார். அந்த அறிவிப்பில் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் வழிகாட்டும் தலைவர் சோனியா காந்தி கருத்தும்- இந்திய பிரதமர் மன்மோகன்சிங் கருத்தும் கலந்திருக்கின்றன என்பதை நான் சொல்லவும் வேண்டுமா?
இலங்கை வனவளப் பாதுகாப்பு அமைச்சர் சம்பிக்க ரணவக்க:



விடுதலைப் புலிகள் அறிவித்துள்ள யுத்த நிறுத்தத்தை இலங்கை அரசாங்கம் ஏற்க வேண்டுமென இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளமை குறித்தும் ஐ.நா. சபையில் ஹோம்ஸ் வெளியிட்ட தகவல்கள் தொடர்பிலும் அரசாங்கத்தின் பிரதான பங்காளிக் கட்சியான ஜாதிக ஹெல உறுமயவின் நிலைப்பாட்டைத் தெரிவிக்கையிலேயே சுற்றுச் சூழல் மற்றும் வனவளப் பாதுகாப்பு அமைச்சர் சம்பிக்க ரணவக்க இதனைத் தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் கூறியதாவது: "விடுதலைப் புலிகள் தோல்வியின் விளிம்பில் உள்ளனர். இந்தச் சூழலில் யுத்த நிறுத்தம் என்ற பேச்சுக்கே இடமில்லை. புலிகளின் யுத்த நிறுத்தத்தை ஏற்றுக் கொள்ளுமாறு இலங்கை அரசாங்கத்தை இந்தியா வலியுறுத்துவது உலகளவில் அந்நாட்டுக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும். இதற்கு முன்பும் இந்தியா பலாத்காரத்தைப் பிரயோகித்துப் பிரபாகரனைப் பாதுகாத்தது. அதே செயலை இன்றும் செய்வதற்கு முனைந்தால் 1987 ஆம் ஆண்டைப் போன்று தேசப்பற்றாளர்கள் இந்தியாவுக்கு எதிராக வீதியில் இறங்குவார்கள். இந்திய எதிர்ப்புப் போராட்டங்கள் வெடிக்கும்.


முதல்வர் கருணாநிதி:

Karunanidhi

இந்த உலகில் பெரிய தேசமாம்-இந்திய நாடு கேட்கிறது- பிரணாப் முகர்ஜி கேட்டுள்ளார்- இந்திய அரசு கேட்கிறது-நாமும் கேட்கிறோம்; "போரை நிறுத்து போரை நிறுத்து'' என்று! மத்திய அரசிடம் இருந்து புறப்பட்டுள்ளது அந்த வாசகம்- அதுவும் மார்ச் முதல் நாள்

இலங்கை வனவளப் பாதுகாப்பு அமைச்சர் சம்பிக்க ரணவக்க:


விடுதலைப் புலிகளையும் பிரபாகரனையும் பாதுகாக்க இந்தியா பலாத்காரத்தைப் பிரயோகிக்குமானால் 1987 ஆம் ஆண்டு ஏற்பட்ட சூழ்நிலை உருவாகும். தேசப்பற்றாளர்கள் இந்தியாவுக்கு எதிராக வீதியில் இறங்குவார்கள். சீனா, ரஷ்யா, வியட்நாம் ஆகிய நாடுகளின் ஆதரவு எமக்கிருக்கின்றது. எனவே ஐ.நா. பாதுகாப்பு சபையில் எந்தப் பிரேரணை கொண்டு வந்தாலும் இலங்கையை அசைக்க முடியாது என்று அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.


முதல்வர் கருணாநிதி:

Karunanidhi

இந்நாளில்- அனைவரும் அகமும் பகையும் புகையும் அகன்று; அன்பகங்களாக மாறட்டும்! அந்த ஆசையுடன்; வலி நீங்கிய ஆறுதலுடன்- வருகிறேன் உடன்பிறப்புகளே! உமை வாரியணைத்து மகிழ்ந்திட வருகிறேன் என்று கூறியுள்ளார் கருணாநிதி.

இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜி :

புலிகள் மீது அனுதாபம் கொண்டல்ல, மக்களின் பாதுகாப்புக்காக என்கிறார் முகர்ஜி

அதேவேளை, விடுதலைப் புலிகள் மீது இந்தியா அனுதாபம் காட்டவில்லையெனவும் புதுடில்லி குறிப்பிட்டுள்ளது.

கிழக்கிந்திய நகரமான கொல்கத்தாவில் இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜி நேற்று இதனைத் தெரிவித்திருக்கிறார்.

விடுதலைப் புலிகள் ஒரு பயங்கரவாத அமைப்பாகும். எந்தவொரு பயங்கரவாத அமைப்பு மீதும் எமக்கு அனுதாபம் கிடையாது என்று கூறியுள்ள முகர்ஜி மோதலுக்கிடையில் சிக்கியுள்ள பொதுமக்கள் பாதுகாப்பாக வெளியேறுவதற்கு புலிகளின் யுத்த நிறுத்த அழைப்பை அரசாங்கம் ஏற்றுக்கொள்ள வேண்டுமென வலியுறுத்தியதாக பி.ரி.ஐ.செய்திச் சேவை நேற்று மாலை தெரிவித்தது.

இராணுவ வெற்றியினால் இறுதித் தீர்வு தங்கி இருக்கவில்லை. அதிகாரப் பகிர்வும் இலங்கை அரசியலமைப்பில் திருத்தங்களை அமுல்படுத்துவதிலுமே இறுதித் தீர்வு தங்கியிருப்பதாக முகர்ஜி கூறியுள்ளார்.

இலங்கை மோதல்கள் தொடர்பாக கருத்துத் தெரிவிக்கையிலேயே முகர்ஜி மேற்கண்டவாறு கூறியுள்ளார்.


அமெரிக்கா:

இலங்கையில் ஆயுத மோதல் தீவிரமடைந்துள்ளதையடுத்து மனித உரிமைகள் குறித்த அரசின் அக்கறை குறைவடைந்துள்ளது என அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.
அமெரிக்க வெளிவிவகார அமைச்சின் வருடாந்த மனித உரிமை நிலைவரம் குறித்த அறிக்கையிலேயே இலங்கை குறித்து இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.படுகொலைகள், காணாமற்போதல்கள் போன்ற மனித உரிமை மீறல் சம்பவங்களில் இலங்கையில் தமிழ் இளைஞர்கள் அதிகளவு பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விடுதலைப் புலிகளும் பல்வேறு மனித உரிமை மீறல்களைச் செய்துள்ளனர் எனக் கடுமையாகச் சாடியுள்ள அமெரிக்க வெளிவிவகார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளவை வருமாறு:
ஆயுத மோதல் தீவிரமடைந்துள்ளதை அடுத்து இலங்கையில் மனித உரிமைகள் குறித்த அரசின் மதிப்பு குறைவடைந்துள்ளது.
படுகொலைகள், காணாமற் போதல் போன்ற மனித உரிமை மீறல்களால் அதிகளவு பலியாகின்றவர்கள் இளம் தமிழ் ஆண்களே.
இனந்தெரியாதவர்களால் மேற்கொள்ளப்படும் கொலைகள், அரசியல் நோக்கம்கொண்ட கொலைகள் என்பனவும் அரசுடன் தொடர்புடைய ஆயுதக்குழுக்கள், சிறுவர்களைப் படையணிகளில் சேர்த்தல், காணாமற் போதல், சட்டவிரோதமாகத் தடுத்து வைத்தல் போன்ற பிரச்சினைகளும் இருக்கின்றன.
அரச சார்பு ஆயுதக்குழுக்கள் பொதுமக்களுக்கு எதிரான தாக்குதல்கள், சித்திரவதை, மிரட்டிப் பணம் பறித்தல் போன்றவற்றில் சட்டத்தின் பிடியிலிருந்து விதிவிலக்கப்பட்ட நிலையில் ஈடுபட்டுள்ளன.
கடந்த வருடம் இராணுவ, பொலிஸ் அல்லது துணை இராணுவக்குழுவைச் சேர்ந்த எவரும் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளுக்காகத் தண்டிக்கப்படவில்லை.
அரசமைப்புச் சபையை நியமிப்பதற்கு ஜனாதிபதி தவறியுள்ளமையால் முக்கிய ஆணைக்குழுக்களை உருவாக்க முடியாதுள்ளது.
அரசும் அதன் முகவர்களும் கண்மூடித்தனமான சட்டவிரோதப் படுகொலைகளில் ஈடுபடுகின்றனர் என கண்காணிப்பு அமைப்புகள் தெரிவிக்கின்றன.
புள்ளி விவரங்களை வெளியிட
ஆணைக்குழு மறுக்கிறது
அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான மோதலில் பொதுமக்கள் அதிகமாக வாழும் பகுதிகளில் இடம்பெற்ற ஆட்லறித் தாக்குதலில் பலர் பலியாகியுள்ளனர்.அரசு விடுதலைப் புலிகளுக்கு எதிரான நடவடிக்கைக்குத் துணை ஆயுதக்குழுக்களைப் பயன்படுத்துகின்றது. இக்குழுவினருடன் தொடர்புடையவர்கள் பல படுகொலைகளில் ஈடுபட்டுள்ளனர் எனச் சந்தேகிக்கப்படுகின்றது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் அமைக்கப்பட்ட ஆணைக்குழுவின் விசாரணைகளில் முன்னேற்றம் ஏற்படவில்லை.
அரச அழுத்தங்கள் காரணமாக அரச படைகள் மற்றும் துணை இராணுவக் குழுவினரால் பலவந்தமாகக் காணாமற் போகச் செய்யப்பட்டவர்கள் குறித்த புள்ளிவிவரங்களை வெளியிட இலங்கை மனித உரிமை ஆணைக்குழு மறுத்துள்ளது.
கடந்த வருடம் 500 க்கும் மேற்பட்டவர்கள் காணாமற் போயுள்ளனர்.
சாட்சிகளும், பாதிக்கப்பட்டவர்களும் தமிழ் பேசும் ஆயுததாரிகள் இலக்கத்தகடற்ற வெள்ளை வாகனத்தில் வருவோரால் கடத்தப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கின்றன.
எனினும் அரசு பொதுவாக இக்குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யவில்லை. கடந்த வருடம் பல ஆயிரக்கணக்கானவர்கள் தடுத்துவைக்கப்பட்டனர். எனினும் பலர் 24 மணி நேரத்திற்குள் விடுவிக்கப்பட்டனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை வனவளப் பாதுகாப்பு அமைச்சர் சம்பிக்க ரணவக்க:

இலங்கை இறையாண்மை கொண்ட சுயாதீனமான நாடு. எனவே எமது பிரச்சினையில் தலையிட பிரிட்டனுக்கோ அல்லது வேறெந்த மேற்குலக நாடுகளுக்கோ அதிகாரமில்லை. அவர்களது ஆலோசனைகளைக் கேட்க வேண்டிய தேவையும் எமக்கில்லை. இந்த மேற்குலக நாடுகள் தான் புலிகளுக்கு விமானங்களையும், தொழில்நுட்ப வசதிகளையும் வழங்கின. எனவே, மேற்குலக நாடுகளின் பேச்சைக் கேட்க நாம் தயாரில்லை.

ஐ.நா. பாதுகாப்பு சபையில் இலங்கைக்கு எதிராக எந்தப் பிரேரணை கொண்டுவரப்பட்டாலும் நாம் கவலைப்படப் போவதில்லை. எம்மை அசைக்க முடியாது. சீனா, ரஷ்யா, வியட்நாம் போன்ற நாடுகளின் ஆதரவு எமக்கு இருக்கின்றது." இவ்வாறு அவர் கூறினார்.

முதல்வர் கருணாநிதி:
Karunanidhi

இலங்கை தமிழர்களை வாழ வைப்பதற்கும்- அவர்களின் உரிமைகளை இலங்கையில் நிலைநாட்டுவதற்கும்- தமிழகத்தில் அனைத்து கட்சிகள் சார்பிலும்- அரசு சார்பிலும் எடுத்த முயற்சிகளுக்கும்- எரியுண்டு மாண்ட இனமான ஏந்தல்களின் தியாகத்துக்கும்- தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கும்- நேரில் சந்தித்து தமிழகத் தலைவர்கள் வலியுறுத்திய முறையீட்டுக்கும்- பலன் கிடைத்தது என்பது போல;


இலங்கை ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன :



"தமிழ்நாட்டின் அழுத்தம் காரணமாக இந்திய மத்திய அரசாங்கம் ஒரு சில கூற்றுக்களை வெளியிட நேர்கின்றது. ஆனால் இந்தியா எமக்குப் பாதகமாக செயற்படாது என்பது உள்ளார்ந்த ரீதியாக எமக்குத் தெரியும். வரையறுக்கப்பட்ட இராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ளும் இந்தக் காலப் பகுதியில் மக்கள் பெருமளவில் அரசாங்க கட்டுப்பாட்டு பகுதிக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கின்றோம்" எனவும் அமைச்சர் குறிப்பிட்டார். விடுதலை புலிகளின் போர் நிறுத்தக் கோரிக்கையை அரசாங்கம் பயன்படுத்தி பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிபடுத்தவேண்டும் என்று இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளமை குறித்து வினவியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் வைகோ
ஈழத் தமிழர் பிரச்சினையில் இந்திய அரசாங்கத்தின் அனைத்து துரோகத்துக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் கருணாநிதி கூட்டுப்பங்காளியாக உள்ளார் என மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் வைகோ குற்றம் சாட்டியுள்ளார்.

இரண்டாம் உலகப் போரின் போது, யூத இனத்தையே பூண்டோடு அழிக்கத் திட்டமிட்டு, படுகொலைகள் நடத்தியதுபோல், இலங்கையில் சிங்கள இனவாத அரசின் கொலைகார அரச தலைவர் மகிந்த ராஜபக்ச, தமிழ் இனத்தையே கருவறுக்க முனைந்து, இராணுவத்தின் மூலம் தமிழர்களைக் கொன்று குவிக்கிறான். இந்த தமிழர் இன அழிப்பு இராணுவத் தாக்குதலுக்கு முழுக்க, முழுக்க ஆயுத உதவி செய்தது இந்திய அரசுதான்.

1998 ஆம் ஆண்டில் அன்றைய பிரதமர் வாஜ்பாய் அவர்கள், டெல்லியில் தான் கூட்டிய அனைத்து கட்சிக் கூட்டத்தில், இலங்கையில் தமிழின கொலை நடத்தும் சிங்கள அரசுக்கு இந்தியா எவ்விதமான உதவியும் செய்யாது என்றும், ஆயுதங்களை கொடுக்காது என்றும், ஆயுதங்களை சிறிலங்காவுக்கு விற்பனை செய்வதில்லை என்றும் ஒரு மனதாக எடுக்கப்பட்ட முடிவை அறிவித்தார்.

2004 ஆம் ஆண்டுவரை இந்திய அரசு அதனைக் கடைப்பிடித்தது.

சோனியா காந்தியின் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி, மத்தியில் மன்மோகன் சிங் அவர்களை பிரதமராகக் கொண்டு அரசு அமைத்த பின், வாஜ்பாய் அரசு எடுத்த முடிவை காற்றில் பறக்கவிட்டு சிறிலங்கா அரசோடு, இந்திய-சிறிலங்கா கூட்டு இராணுவ ஒப்பந்தம் செய்ய முடிவு எடுத்தது.

2004 ஆம் ஆண்டு நவம்பரில் இராணுவ ஒப்பந்தம் கையெழுத்தாக இருந்த நிலையில், அப்போது ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் ம.தி.மு.க. இடம்பெற்றிருந்த சூழலில், பிரதமரையும், சோனியா காந்தியையும், சரத் பவார், லாலு பிரசாத் யாதவ், பிரியரஞ்சன் தாஸ் முன்ஷி உள்ளிட்ட மத்திய அமைச்சர்களையும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அன்றைய பொதுச் செயலாளர் ஹர்கிஷன் சிங் சுர்ஜித், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் ஏ.பி.பரதன், அதன் தேசியச் செயலாளர் ராஜா அவர்களையும் மூன்று முறை சந்தித்து எடுத்துக்கொண்ட கடும் முயற்சிகளின் விளைவாக, இந்திய-சிறிலங்கா இராணுவ ஒப்பந்தம் கையெழுத்தாகவில்லை.

ஆனால், ஒரு மாதம் கழித்து கொழும்பு சென்ற அன்றைய வெளிவிவகார அமைச்சர் நட்வர்சிங் இராணுவ ஒப்பந்தம் செய்யப்படாவிடினும், ஒப்பந்தச் சரத்துகள் நிறைவேற்றப்படும் என்று 2005 ஆம் ஆண்டு ஜனவரி 9 இல் கொழும்பில் அறிவித்தார்.

ஐ.நா. வின் மனிதாபிமான விவகாரங்களுக்கு பொறுப்பான செயலாளர் ஜோன் கோல்ம்ஸ்

ஐ.நா.வின் பாதுகாப்பு சபைக் கூட்டத்தில் கடந்த வெள்ளிக்கிழமை (27.02.09) உரையாற்றிய ஐ.நா. வின் மனிதாபிமான விவகாரங்களுக்கு பொறுப்பான செயலாளர் ஜோன் கோல்ம்ஸ் தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் உள்ள மக்கள் பலவந்தமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களை வெளியேற அனுமதிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன்:

தமது வாழ்விடங்களில் அமைதியும், பாதுகாப்பும் வேண்டும் என்பதே தமிழர்களின் விருப்பம். அதனை விடுத்து விட்டு பாரம்பரியமாக வாழ்ந்து வரும் இடங்களில் இருந்து அவர்களை வெளியேற்ற முயற்சிப்பது வேதனையானது. தீர்வு ஒன்றை காண்பதற்காக 'காசா' பகுதியில் வாழும் மக்களை அங்கிருந்து வெளியேற்றுவதனை ஐக்கிய நாடுகள் சபை ஆதரிக்குமா? என தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்தியாவிவில் இருந்து ஒளிபரப்பாகும் 'ரைம்ஸ் நௌவ்' தொலைக்காட்சிக்கு இன்று திங்கட்கிழமை பா.நடேசன் வழங்கிய நேர்காண

ஐ.நா.வின் மனிதாபிமான விவகாரங்களுக்கு பொறுப்பான செயலாளர் ஜோன் கோல்ம்ஸ் வன்னிக்கு வந்து அங்குள்ள மக்களின் நிலமைகளை பார்வையிடுவதற்கும், பொதுமக்கள் இங்கு பலவந்தமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளனரா என்பதை பார்வையிடுவதற்குமான பாதுகாப்பான பயண ஒழுங்குகளை மேற்கொள்ளாதது வருத்தமானது.

வன்னியில் பணியாற்றி வந்த ஐ.நா. மற்றும் தொண்டர் நிறுவனங்கள் போன்றவற்றை அங்கிருந்து வெளியேறும்படி கடந்த வருடம் அரசு உத்தரவிட்டதை தொடர்ந்து ஐ.நா. தமிழ் மக்களை கைவிட்டுள்ளது. அதன் பின்னர் அரசு சாட்சிகள் அற்ற நிலையில் தனது போரை நடத்தி வருகின்றது.

தமது சொந்த விருப்பத்தின் அடிப்படையில் தான் மக்கள் இங்கு வசித்து வருகின்றனர். அவர்கள் தாங்கள் வாழும் பிரதேசத்தில் அமைதியும், பாதுகாப்பும் வேண்டும் என விரும்புகின்றனர். ஐ.நா.வின் ஆதரவுடன் சிறிலங்கா அரசு நடத்தி வரும் தடை முகாம்களுக்கு செல்வதற்கு அவர்கள் விரும்பவில்லை. சிறிலங்காவின் இந்த முகாம்களை தடை முகாம்களுக்கு ஒப்பானவை என கடந்த மாதம் 20 ஆம் நாள் மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்திருந்தது.

கனடாவின் எதிர்க்கட்சித் தலைவர் மைக்கேல் இக்னாரீஃப்:


இலங்கையில் நடைபெற்று வரும் மோதல்களில் நாளாந்தம் அதிக எண்ணிக்கையான மக்கள் கொல்லப்படுகின்றனர்; 2 லட்சத்து 50 ஆயிரம் பொதுமக்கள் போர் நடைபெறும் பகுதிகளில் சிக்கியிருக்கின்றனர்; எனவே உடனடியான போர் நிறுத்தம் அங்கு அவசியமானது என கனடாவின் எதிர்க்கட்சித் தலைவர் மைக்கேல் இக்னாரீஃப் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மைக்கேல் இக்னாரீஃப் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

மனிதாபிமான நெருக்கடிகளை தவிர்ப்பதற்கும் பொதுமக்களின் இழப்புக்களை தவிர்ப்பதற்குமான செயற்பாடுகளை சிறிலங்கா அரசும் தமிழீழ விடுதலைப் புலிகளும் மேற்கொள்ள வேண்டும் என நான் கேட்டுக்கொள்கின்றேன்.

இலங்கையில் நடைபெற்று வரும் மோதல்களில் நாளாந்தம் அதிக எண்ணிக்கையான மக்கள் கொல்லப்படுகின்றனர். 2 லட்சத்து 50 ஆயிரம் பொதுமக்கள் போர் நடைபெறும் பகுதிகளில் சிக்கியிருக்கின்றனர். எனவே உடனடியான போர் நிறுத்தம் அங்கு அவசியமானது.

இலங்கையில் அரசியல் செயற்பாடுகள் பலப்படவும், மனிதாபிமான பணிகள் முன்னெடுக்கப்படுவதற்குமான பணிகளை அனைத்துலக சமூகம் இணைந்து மேற்கொள்ள வேண்டும் எனவும் நான் கேட்டுக்கொள்கின்றேன்.

போர் காரணமாக ஆபத்தான சூழ்நிலையில் உள்ள பொதுமக்களை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு எமக்கு உண்டு.

இலங்கையில் உள்ள தமிழ் மக்களின் மேலதிக உயிரிழப்புக்களை தடுப்பதற்கும், அங்கு ஒரு அரசியல் எதிர்காலத்தை உருவாக்குவதற்கும் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் ஒரு சிறப்பு பிரதிநிதியை அங்கு அனுப்ப வேண்டும்.

பொதுமக்களின் மீதான தாக்குதல்களுக்கும், பயங்கரவாதத்திற்கும் எந்த மன்னிப்பும் கிடையாது. பொதுமக்களை பாதுகாப்பதற்கான தமது அக்கறையை உலகம் காண்பிக்க வேண்டும். நாம் இலங்கையில் பாதிக்கப்பட்ட மக்களுடனும், கனடாவில் உள்ள இலங்கை மக்களுடனும் எமது உணர்வுகளை பகிர்ந்து கொள்கின்றோம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஆனால் மக்களோ: