Friday, February 27, 2009

புலியெதிர்ப்பு மாமாக்களுக்கு


புலிகளுக்கெதிரான சிங்களக்காடையர்களின் படயெடுப்பு எதிபாராத இடங்களிலெல்லாம் அதிர்வுகளை ஏற்படுத்தியிருக்கின்றது. புலியெதிர்ப்பு என்ற போர்வையில் தங்கள் காழ்ப்புக்களையும் அவதூறுகளையும் தேர்ந்த அரசியல் போல் போக்குக்காட்டி நடாத்தி வந்தவர்கள் முன்னால் எதிர்காலமே இருண்டுபோனது போன்ற பிரமை ஏற்பட்டிருக்கின்றது.

சிங்கள ஏகாதிபத்தியத்தின் தமிழின அழிப்பு முனைப்பெடுத்து நிற்கும் இவ்வேளையில் தமிழ் மக்களின் காப்பரணாக இருந்த புலிகள் பின்வாங்கிக்கொண்டிருக்கும் நிலையிலேயே இவர்கள் இதுவரை இருந்த கனவு லகத்தை விட்டு நிஜமாகவே தரையில் கால் பதித்திருக்கின்றனர்.

புலியெதிர்ப்பு என்ற கோசத்தை விட்டு வேறு எதுவித அரசியல் முனைப்புகளோ முன்னெடுப்புகளோ எதுவுமறியா இவர்களின் இருப்பே கேள்விக்குறியாகியிருக்கின்றது.

புலியெதிர்ப்பு அரசியல் பேசும் புலம்பெயர்தேசத்து தேசாந்திரிகள் ஆகட்டும் காட்டிக்கொடுப்புகளிலும் கூட்டிக்கொடுப்புகளிலும் சிங்களக்காடையர்களைக் குஷிப்படுத்தி அமைச்சுப்பதவிகளையும் டிங்கிரி நோனாக்களையும் கையகப்படுத்தியவர்கள் ஆகட்டும் அடுத்து என்ன என்ற கேள்விகளில் சிக்கி மூழ்கிப்போய் இருக்கின்றார்கள்.

பராக்கிரமம் நிறைந்தவர்களாயும் யாருமே நெருங்கவே முடியாதவர்களாயும் நிஜமாகவே நம்பியிருந்த புலிகளின் பின்னடைவு உண்மையிலேயே இவர்களை விக்கித்துப்போக வைத்திருக்கின்றது.

சிறுகச் சிறுக குழி பறித்து ஆயுள் வரை அமைச்சுக்கனவுடன் இருந்த டக்ளசின் கோபம் கருணாவின் மேல் திரும்பியிருக்கின்றது. தேவைக்கு மேல் விசுவாசம் காட்டி வன்னிக்காடுகளின் ஆழ அகலங்களைக்காட்டிக்கொடுத்த கருணாவின் மூளை வளர்ச்சி பற்றியும் விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன.

கொழும்பு அரசியலை மட்டுமே நம்பியிருந்த டக்ளசின் அரசியல், கிழக்கு மாகாண அரசியலை மட்டுமே நம்பியிருக்கும் கருணாவால் புரிந்து கொள்ள முடியாது தான். தனக்குக் கீழேயிருந்து தலையாட்டித்திரிந்த பிள்ளையான் கிழக்கின் முதலமைச்சராகி பிடித்த பிள்ளையார் கணக்கில் அசையாது இருக்கின்ற தோரணை கருணாவை அதிகம் சிந்திக்கவிடவேயில்லை.

சொன்னதைச் செய்யும் கிளிப்பிள்ளையாக தானுண்டு தன் துவக்குண்டு என ரெளடித் தோரணையுடன் திரிந்த கருணாவால் அரசியல் சதுரங்கத்தில் சிறு தூசியைக்கூட நகர்த்த முடியவில்லை என்பதே உண்மை.இல்லாவிட்டால் பிரித்தானிய விஜயமும் களிதின்ற கம்பியெண்ணலும் இல்லாமலே கிழக்கின் ஏகபோக நாட்டாமையாக அவரால் இருந்திருக்க முடியும்.

ஆளுக்குள்ள பலம் மூளைக்கில்லை என்பதைச்சரிவரப்புரிந்திருந்த ராஜபக்ஸ கோஷ்டியும் கிழக்குத் தலமையை பிள்ளையானிடம் நகர்த்தியிருந்தது. புலிகளிடம் இருந்து உண்மையாகவே வரக்கூடிய அச்சுறுத்தலைப் பூதாகாரமாகக் காட்டி கருணாவை விமானம் ஏற்றி விட்டிருந்தது.

போனமச்சான் திரும்பி வந்தான் என்ற கணக்கில் திரும்பியிருந்த கருணாவும் தன் இருப்பை நிலை நிறுத்திக் கொள்ள உளறுவாயனாக மாறி விட்டிருந்தது தான் அனைத்து மாமாக்களின் செளகரியத்துக்கும் சாவு மணியடிக்கத்தொடங்கியிருக்கின்றது. புலிகளின் வீரத்தில் வைத்த நம்பிக்கையிலேயே இடையில் ரிவால்வருடன் திரிய மாமாக்களைச் சிங்களம் அனுமதித்திருந்தது.

புலிகள் இல்லாக் காலத்தில் மாமாக்களின் ரிவால்வர்கள் சிங்கள மக்களையே பலி கொள்ளும் என்பதையும் சிங்களம் உணர்ந்திருக்கின்றது. ரிவால்வர்கள் இல்லா மாமாக்கள் பல்லுப்போன பாம்புகளையும் விட கேவலமானவர்கள் என்பதை சாதாரண மக்களும் அறிந்திருக்கின்றார்கள் என்பது மட்டுமல்ல அந்த நன் நாளுக்காகவும் காத்துக்கொண்டிருக்கவும் செய்கின்றார்கள்.

இதையெல்லாம் புரிந்து வைத்திருக்கும் மாமாக்களே மக்களை விடவும் புலிகளின் மீட்சியை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றார்கள். புலியில்லா அரசியல் என்றால் தமிழரசுக்காலத்திலும் கூட்டணிக்காலத்திலும் பழம் தின்று கொட்டை போட்ட முதலைகளை எதிர்கொள்ள வேண்டுமென்பதையும் அவர்கள் நன்கு அறிந்திருக்கின்றார்கள்.துவக்குகளை நம்பி அரசியல் செய்தவர்கள் மூளை ஒன்றும் சொல்லிக்கொள்ளும் படி விசேடமானதில்லை என்பதுதான் எல்லோருக்கும் தெரிந்திருக்கின்றதே.

அதே போலப் புலம் பெயர் தேசங்களில் புலியெதிர்ப்புக்கொடி பிடிக்கும் தேசாந்திரிகளின் நிலமையும் கவலைக்கிடமாகிவிடும். இவர்களின் வெப்தளங்களும் புளொக்குகளும் படிப்பதற்கு நாதியில்லாது ஈயாடத் தொடங்கிவிடும்.

புலியெதிர்ப்புக்கருத்துடைய வாசகர்களை விட புலி ஆதரவுக்கருத்துள்ள வாசகர்களே இவர்கள் தளங்களை அதிகம் மொய்ப்பவர்கள். இவர்கள் போன்றவர்களின் சரவெடிகளைப் பார்த்தே தாங்கு தாக்கு நிலைகளை எடுப்பதே இவர்களின் மெத்தப்படித்த அரசியலாகும்.

தன்னை சுயமாக வளர்த்துக் கொள்ள முடியா கொள்கையாளர்களைப்புலம் பெயர் தேசங்களில் தங்கள் பிரதிநிதிகளாக வைத்துக் கொண்டதே புலிகளின் இன்றைய பின்னடைவிற்கு முதன்மைக்காரணமாகும்.

போராட்டத்தின் முஷ்டியை தங்கள் தோள்களை மட்டும் நம்பியிருந்ததும் காரணமாகும். மக்கள் போராட்டம் முஷ்டி பலத்திற்கும் அப்பால் இராஜதந்திர வெளிகளுக்கு நகர்த்தப்பட்டிருக்க வேண்டுமென்பதை அவர்கள் அறியாது போனது துர்பலமே.

அன்றைய அப்புஹாமி வகையறா மோட்டுச் சிங்களவனின் வாரிசுகள் இந்த வகையில் தமிழ்ப்புலிகளை விட புத்திசாலிகளே என்பது இன்றைய நடைமுறை நமக்குணர்த்தும் பாடமாகும்.

No comments:

Post a Comment