Thursday, February 26, 2009

பொய்யே பேசும் புழுத்தலையன்

களவாணிகளும் கள்வர்களும் ஒரு நாட்டை ஆண்டால் எப்படியிருக்கும்... வெரி சிம்பிள் இந்தியாவைப் போலிருக்கும் என்று நீங்கள் சொன்னால் உங்களுடன் என்னால் வாதிட முடியாது. ஆனால் தமிழ் நாட்டைப் போலிருக்காது என்று சொன்னால்....

அப்படியிருக்கும் என்று என்னால் ஆயிரத்து நூறு காரணத்தை சொல்ல முடியும்.
மு.க என்றால் முதல்வர் கருணாநிதி என்று தான்(முழுக் கள்வன் என்று பொறாமையில் சிலர் சொல்வதை நான் கருத்தில் எடுப்பதே இல்லை) நான் நினைக்கின்றேன். அத்தனை தடவைகள் அவரை முதல்வராய் இருத்தி சிறப்புப் பெற்றது தமிழகம்.

காங்கிரஸ் களவாணிகளுக்கு மாற்று என்ன என்று தமிழ்கம் திக்கித் திணறி தடுமாறியபோது தான் எங்கள் சொத்தை அண்ணா முடுக்கி விட்ட திருட்டு முள்ளைமாறிகள் கழகமாக கண்மணிகள் கூட்டுச் சேர்ந்து வந்தார்கள்.

தமிழறியாத் தமிழ் நாட்டுத் தமிழர்களுக்கு பததரை சித்திரை நித்திரை என்று அழிக்க முடியா முத்திரை குத்தி அண்ணாவின் பெயரில் நாமம் பதித்ததும் இப்போதுதான்.

அந்த நாமத்தால் தன் முத்திரை பதித்து மக்களினைச் சித்திரை (சித்திரவதை) செய்யும் பொய்யே பேசும் புழுத்தலையன் ஆட்சியேறி வஞ்சம் புரிந்ததும் லஞ்சம் பெற்றதும் கிடைத்த லஞ்சத்தில் கணக்குக் கேட்டு புது முட்டாள் மிளகாய் அரைத்ததும் தமிழ் நாட்டின் சரித்திரம்.

ஒருத்தனுக்கு ஒருத்தியென்று வரைவிலக்களம் கொண்ட நாட்டில் ஆசைக்கு ஒருத்தி என்றும் ஆனாலும் தான் பலியாகிப்போன சந்தேக அரக்கனுக்கு நெருப்பு என்றும் வழிகாட்டிப்போன இராமன் பேர் கொண்டவனே தன் சுகத்துக்கு பல மனைவிகள் தன் காலிடுக்கில் சுகம் தேட சில விபச்சாரங்கள் என்று தேடிக்கண்டு பிடித்ததும் .... விதியே என்று கண்மூடித்தூங்கியிருந்த தமிழ் ஜாதியும் இன்று விபச்சாரத்தின் கால்களில் விழுந்தெழும்புவதும் தமிழ் நாட்டின் தலை விதி.

(தொடரும் பொய் புராணம்..)

No comments:

Post a Comment